உள் திரை THE INTER VEIL 56-01-21 Sturgis Michigan U.S.A. 1. நன்றி, சகோதரர் ஜாக்சன். நன்றி, நன்றி, சகோதரனே. ஒரு கணம் ஜெபத்திற்காக சற்று நம்முடைய தலைகளை தாழ்த்துவோமாக. எங்களுடைய பரலோகத்தின் பிதாவே, தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்த கூடாரத்திற்கு அடியில், நாங்கள் எல்லாரும் இன்று இரவு, ஒன்று சேர்ந்து வந்திருப்பது ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட சிலாக்கியம் என்று கருதி எங்களுடைய உள்ளார்ந்த இதயத்தில் இருந்து மீண்டும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். மேலும், எங்கு இரண்டு மூன்று பேர்கள் என் நாமத்தினால் கூடியிருக்கிறார்களோ அவர்கள் மத்தியில் நான் இருப்பேன் என்று வாக்குரைத்திருக்கிறீர். மேலும்," என் நாமத்தில், பிதாவினிடத்தில் நீங்கள் எதை கேட்டாலும் அதை செய்வேன்" என்ற தெய்வீக வாக்குறுதியை அவர் கொடுத்திருப்பதினாலும், இன்றிரவு அவர் இங்கு இருக்கிறார் என்ற ஆசிர்வதிக்கபட்ட உறுதியினாலும் அவர் நாமத்தில் கூடியிருக்கிறோம். மேலும் தகப்பனே இன்றிரவு, உம்முடைய வார்த்தையை விசேஷித்த விதமாக ஆசிர்வதிக்க வேண்டும் என்று ஜெபிக்கிறோம். மேலும் அது ஒவ்வொரு இருதயத்திற்குள்ளும் அமிழ்ந்து போகத்தக்கதாகவும், ஒவ்வொரு அவிசுவாசியும், விசுவாசியாக மாற்ற வேண்டும். யார் யாரெல்லாம் வாழ்க்கையில் சோர்ந்து போய் இருக்கிறார்களோ, அவர்களை எல்லாம் ஊக்குவிக்குமாறு ஜெபிக்கிறோம். வியாதியில் உள்ளவர்களையும், பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டிருப்பவர்களையும் குணமாக்கி, உமக்கே மகிமையை எடுத்துக் கொள்ளும். இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம், ஆமென். நீங்கள் எல்லாம் உட்காரலாம். 2. மேலும் உங்கள் எல்லாருக்கும் ஒரு விசேஷத்தை மாலை வந்தனம் செலுத்துகிறேன். கர்த்தரின் பணியில் மீண்டும் உங்களோடு கூட, இன்று இரவு இருப்பது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை தருகிறது. அங்கு சகோதரன் ஸ்மித்தை பார்ப்பது மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. அவர் ஜெபர்சன்வில்லில் உள்ள கூடாரத்திலிருந்து வந்தவர். நான் சகோதரர் ஆர்னெட்டை பால்கனியில், மேலே, இங்கே ஓஹியோவிலிருந்து வந்திருக்கும் சகோதரன் அர்நோட் அவர்களை பால்கனியிலோ அல்லது வேறு எங்கேயோ அவரை நான் பார்த்ததாக நம்புகிறேன். அவர் ஒரு அனுபவமிக்கவர், சமீப காலமாக தான் அவருடைய இருதய பிரச்சனையிலிருந்து விடுதலை பெற்றார். அவர்களை இந்த இரவு பார்ப்பது நமக்கு மிகுந்த சந்தோஷத்தை தருகிறது. மேலும், நண்பர்களே, நேற்றிரவு பார்த்த உங்களை, மீண்டும் இந்த இரவு இந்த சுவிசேஷ விருந்தில் சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. நேற்றிரவு கர்த்தர் நம்மை ஆசீர்வதித்தார்... அந்த நிறைவிலே, இன்றும் நான் வாழ்ந்து கொண்டு வருகிறேன். உங்களுக்கு ஒன்று தெரியுமா, தேவைப்படும் வரைக்கும், அந்த மன்னாவை கொஞ்சம் சேமித்து வைத்துக் கொண்டே இருக்கிறோம். மேலும் அது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தேவைப்படுகிறது. தேவனுக்கு ஊழியம் செய்வது ஒரு அற்புதமான காரியம். அதைப் போல் வேறு ஒன்றுமே இல்லை. தேவனுக்கு ஊழியம் செய்வது ஒரு பெரிய வேலையாக சிலர் கருதுகின்றனர். ஆனால் எனக்கோ அது ஒரு மிகுந்த சந்தோஷத்தை தருகிறது. ஓ-! தேவனுக்கு ஊழியம் செய்வது என்ன ஒரு சிலாக்கியம். 3. மேலும் இப்போது நாளைய தினத்தின் ஆராதனை பற்றி பார்ப்போம். இரண்டு மணிக்கு துவங்கும் என்று நான் யூகிக்கிறேன். அது சரி தானே சகோதரனே (இரண்டரை மணி என்று ஒரு நபர் கூறுகிறார்) இரண்டரை மணி. நான் இங்கு இருக்க வேண்டிய நேரமா அல்லது முதல் நிலை ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டிய நேரமா-? ஆராதனை அங்கு... (இல்லை, முன்னிலை ஏற்பாடுகள் இரண்டரை மணிக்கு துவங்கும், நீங்கள் மூன்று மணிக்கு பத்து நிமிடம் இருக்கும் போது வரலாம்). எல்லாம் சரி, ஆராதனை வந்து... நாளைக்கு, பிரசங்கம் மூன்று மணிக்கு பத்து நிமிடங்கள் இருக்கும் போது துவங்கும். மேலும் நாம்... இரண்டு, அல்லது மூன்று மணி நேரம் வரைக்கும் அது தொடரும். இப்போது, இதை இப்படி செய்வதற்கு காரணம் என்னவென்றால், ஒரு வேளை, வேறொரு ஊழியக்காரர் இந்த சுற்று வட்டாரத்திலோ, அல்லது இங்கேயோ... இதை நான் செய்ய காரணம் என்னவென்றால், நீங்கள் பாருங்கள், இந்த வழியாக வரும் போது நமக்கு உண்டு. இது, இது போல, சகோதரன் ஸ்மித்துடனும் அவருடைய சபையுடனும் ஒரு சிறு தோழமை... மேலும், நான் நேற்று இரவு சொன்னது போல நாம் செய்திருக்கிறோம். மேலும், மதியத்திற்கு, இதை திட்டமிட்ட சுகமளிக்கும் ஆராதனையாக நாம் வைக்கவில்லை. சற்று ஒரு தோழமைக்காக, நாம் இங்கே ஒன்று சேர்ந்து, ஒரு தோழமைக்கான நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காக கூடி வந்திருக்கிறோம். மேலும் இப்போது ஞாயிறு மதியம் தான் இதை வைத்திருக்கிறோம், ஒரு வேளை வேறு சபைக்கு செல்ல சிலர் விரும்பினால் அவர்களும் இந்த தோழமையில் சிறிது நேரம் தங்கி பங்கு கொள்வதற்கு உதவும். நல்லது, நாங்கள் அவர்களது ஆராதனையிலும் அல்லது வேறு ஆராதனையிலும் தலையிடுவது கிடையாது. 4. இப்போது ஒரு வேளை அங்கு நமக்கு விருந்தாளிகள் இருப்பார்கள் என்பதை நான் பார்க்கிறேன். எனக்கு ஒரு கடிதம் என்னுடைய மேல் சட்டை பையில் உள்ளது. ஒரு வேளை அந்த கூட்டங்களில் அந்த குணமான மாறு கண்களை உடைய சிறுமியாய் இருக்குமோ என்று யூகிக்கிறேன். நான், நான் அந்த மிச்சிகன் கூட்டங்களில் தான் என்று நம்புகிறேன். எனக்கு அந்த இடத்தை சொல்ல முடியவில்லை..........என்ன சொல்ல-? (பேட்டில் கிரீக் (Battle Creek) என்று ஒரு மனிதன் கூறுகிறார்) ஆமாம், இல்லை. நான்.....நான்......நான் அதற்கு முன்பாக என்று நம்புகிறேன். ஒரு வேளை அது பேட்டில் க்ரிக்காகத்தான் (Battle Creek) இருக்கும். ஒரு சிறுமி மாறு கண்கள் உடையவளாக இருந்து குணமாக்கப்பட்டாள், அவளிடம் இருந்து எனக்கு இன்று ஒரு கடிதம் வந்திருக்கிறது. அவளுடைய படமும் அதில் இருந்தது. ஒரு வேளை இந்த இரவு, இந்த கட்டத்திற்குள் அவள் இருக்கலாம். மாறு கண்களை உடைய ஒரு சிறுமி. மேலும் அந்த பேட்டில் கிரீக் கூட்டங்களில் தான் குணமாக்கப்பட்டாள் என்று நம்புகிறேன். அவளிடம் இருந்து வந்த அந்த கடிதமும் படமும் என்னுடைய சட்டைப் பையில் உள்ளது. பின்பு இங்கு வேறொரு கூட்டத்திலிருந்து ஒரு குணமாக்கப்பட்ட பெண்மணியிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. உங்களுடைய கடிதத்தையும், சாட்சியையும் வாசித்தேன், அது என்னை மிகுந்த சந்தோஷத்திற்குள் ஆக்கியது. அது எப்பொழுதுமே நல்லது தான். அதை வாசிப்பதற்கு மட்டும் எனக்கு நேரம் கிடைத்தால் நலமாய் இருக்கும். மேலும் கர்த்தருக்கு சித்தமாயிருந்தால் வருகின்ற ஒரு நாளில் ஒரு புதிய காரியத்தை தொடங்க உள்ளேன், அதில் இந்த சாட்சிகள் எல்லாவற்றையும் வைக்கப் போகிறேன். உங்களில் அநேகர் அதில்...... 5. எத்தனை பேர் சகோதரன் மேட்சன் போஸ்ஸினுடைய பத்திரிகையை எடுக்கிறீர்கள், "விசுவாசத்தின் அறைகூவல்" என்று அழைக்கப்படுகிறது என்று நான் நம்புகிறேன்-? நீ அதை அறிவாயா-? சரி.... தரிசனம் அதில் கொடுக்கப்பட்டிருக்கிறது மற்றும் "சுகமாகுதலின் சத்தம்" மற்றும் "அவருடைய வருகையின் அறிவிப்பு" அவற்றைப் போல அநேக பத்திரிகைகளிலும் அது இருக்கும். எனக்குத் தெரிந்த மட்டில் ஒரு எல்லை கடந்த, மிகைப்படச் செய்யக்கூடிய மிகுதியான ஒரு வெளிப்பாட்டை தேவன் எனக்கு கொடுத்துள்ளார். அதற்காகத் தான் இந்த இரவு நாம் சற்று இளைப்பாறிக் கொண்டு ஃபோனிக்ஸ் கூட்டங்கள் (Phoenix-meeting) தொடங்குவதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அங்கு தேவன் தமது தெய்வீக இரக்கங் களினால்.........நமக்கு ஏதோ ஒரு காரியம் செய்திருக்கிறார், அதை.....அதை உங்களுக்கு சொல்லுகிறேன். அது எந்த காரியத்திற்கும் மேற்பட்ட, என் வாழ்க்கையில் அறிந்திராத ஒரு காரியம் என்பதை நான் நம்புகிறேன். மேலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சீக்கிரம் வரப் போகிறார் என்பதை நம்புகிறேன். பின் அவர் வருகைக்கு சற்று முன்பாக பெரிய, சிறந்த காரியங்கள் தென்பட்டாக வேண்டும் என்று நம்புகிறேன். மேலும் அது நடந்து கொண்டும் முன்னேறிக் கொண்டும் இருக்கிற நாட்களில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். 6. உங்களுக்கு தெரியுமா, சமீபத்தில், ஒரு குணமளிக்கும் ஆராதணையில், ஒருவர் என்னிடம் சொன்னார், என்னை நம்பாத ஒரு மனிதன், எனக்கு ஒரு கடிதம் எழுதினார், அதில் என்னிடம் ஏதோ ஒன்றைப் பற்றி வினவுவதாக கூறியிருந்தார். "முதலாவது, குருவானவர் பிரன்ஹாமே-!" என்று அவர் சொன்னார், நீங்கள் ஒரு அப்போஸ்தலராகவோ அல்லது ஒரு தீர்க்கதரிசியாகவோ அல்லது ஏதாவது போல..." நான் சொன்னேன் "இப்போது அதை நான் உரிமை கோரவில்லை. நான் சொன்னேன். "நான் தேவனுடைய ஊழியக்காரன்" என்று "என்னால் ஜனங்களை குணமாக்க முடியாது; யாராலும் ஜனங்களுக்கு சுகம் தர முடியாது. கர்த்தர் அதை கல்வாரியில் பரிகாரம் செய்து முடித்தார். அது முடிந்த ஒரு காரியம் அது சரிதானே." நீங்கள் ஒரு வருடத்திற்கும் முன்போ, அல்லது 10 வருடங்களுக்கு முன்போ, அல்லது 15 வருடங்களுக்கு முன்போ, அல்லது 6 வாரத்துக்கு முன்போ, இரட்சிக்கப்படவில்லை, நீங்கள் 1900 ஆண்டுகளுக்கு முன்பு இயேசு கல்வாரியில் மரித்த போது, நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். நீங்கள் 10 வருடத்திற்கு முன்போ, 15 வருடத்திற்கு முன்போ அதை பெற்றிருக்கலாம். ஆனால் இரட்சிப்புக்குரிய வேலைப்பாடுகள் கல்வாரியில் ஏற்கனவே முடிந்தாகி விட்டது. அது சரி தானே. பொருள் என்னவென்றால், நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம், ஒன்றுமே செய்ய வேண்டாம், தேவன் கிறிஸ்துவின் மூலமாக எல்லாவற்றையும் செய்து முடித்தார் என்பதை மட்டும் நம்ப வேண்டும். அவ்வளவு தான். அது எப்படி என்றால்; நான் வீட்டுக்கு செல்வதற்காக, நீங்கள் எனக்கு ஒரு விமான டிக்கெட் வாங்கி கொடுத்தால் அல்லது அதை போன்று ஒன்று, அது ஏற்கனவே பணம் செலுத்தி ஆயிற்று. ஒரே ஒரு காரியம் நான் என்ன செய்ய வேண்டும் என்றால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அது போல தான் தெய்வீக சுகம் அளிப்பதும், அல்லது கிறிஸ்துவின் மரணத்திற்கு உரிய பண்பு கூறுகள் ஒரே விதமாக கல்வாரியில் முடிவுற்றது. 7. இந்த மார்க்கத்தில் அநேக போலி பிரசங்கியார்கள் உண்டு என்பதை நான் அறிந்டு இருக்கிறேன். தெய்வீக சுகம் அளிப்பது பற்றியும், இரட்சிப்பை பற்றியும் அவர்கள் பிரசங்கிப்பதின் மூலமாக அதை உணர்ந்து கொள்கிறோம். அது சரி தானே. நிச்சயமாக நமக்கு உண்டு. ஆனால் ஒரு உண்மையான டாலர் பிரகாசிப்பதற்கு ஒரு போலி டாலரின் மதிப்பு தேவைப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம். மற்றும் வேதாகமம், யந்நேயும் யம்பிரேயும், மோசேக்கு எதிர்த்து நின்றது போல இவர்களும் அப்படித்தான் இருப்பார்கள் என்று செல்லுகிறது. வேதாகமம் திட்டவட்டமாக சொல்லுகிறது, கடைசி காலத்தில் தீர்க்கதரிசிகள் தோன்றி, அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்வார்கள் என்று. மற்றும் அவர் சொன்னார். பாருங்கள், நீங்கள் ஒரு வேளை, அப்போஸ் தலர்கள் ஒரு முறை கூட தவறினதே இல்லை. அவர்களிடம் வருகின்ற நபர்களை, அவர்கள் ஒவ்வொரு முறையும் குணமாக்கினர். மற்றும் ஒரு பண்டிதர், இப்படி ஒரு அறிக்கையை விடுப்பது (பாருங்கள்-?) பண்டிதராக இருக்கக் கூடியவர். "ஏன்" நான் சொன்னேன் "என்னுடைய 8 வயது சிறுமியிடம் நீங்கள் கேட்கவே வேண்டாம் அவள் உங்களை வெட்கப்படுத்தி விடுவாள்" என்று சொன்னேன். "அவளுக்கு வேதாகமத்தை பற்றி அதை விட அதிகமாக தெரியும்". லூக்கா சுவிசேஷத்தில் சொல்லப்பட்டது போல, அவர்கள் மலையில் இருந்து கீழே இறங்கி வரும் போது, மேலும் அந்த சிறுவன் வலிப்பு நோயால் அவதிப்பட்டதை... பற்றி என்ன சொல்கிறீர்கள். 8. அவன் சொன்னான் "நான் உங்களுடைய சீஷர்களிடத்திற்கு கொண்டு வந்தேன், அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்களால் அவனை குணமாக்க முடியவில்லை, ஆகையால் நான் அவனை உங்களிடம் கொண்டு வருகிறேன்." இயேசு கிறிஸ்து நின்றிருந்த இடத்தின் அருகே எந்த மனிதனும் அணுக முடியவில்லை. அவர், ஆண்டவர். தேவனுடைய அவதாரம். தேவன் எப்படிப்பட்டவர் என்பதை நமக்கு தருவதற்காக இந்த பூமியின் மீது மாம்சத்தில் வெளிப்பட்டார். இந்த உலகத்தை தமக்காக வேற்றுமை இன்றி சமரசப்படுத்திக் கொள்ள கர்த்தர், அவர் குமாரனில் இருந்தார். அந்த இடத்தை ஒரு மனிதனாலும் அணுக முடியாது. அவர் தேவனுடைய ஒரே பேரான குமாரன். அல்லது, "தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீர பிரகாரமாக அவருக்குள் தங்கி இருந்தது. தேவனுக்குள் இருந்த எல்லாமே கிறிஸ்துவுக்குள் இருந்தது. ஆனால் ஆவியானது உங்களிடம் அசைவில் இருக்கிறது... பகுதி பகுதியாக. அவரிடம் அளவுக்கடங்காமல் காணப்பட்டது. உங்களுக்கு ஒரு சமுத்திரத்திலுள்ள ஒரு கரண்டி அளவு தண்ணீர் மட்டும் தான் உண்டு. அந்த சமுத்திரத்தில் உள்ள அதே இரசாயனம் தான். அந்த கரண்டியில் உள்ள தண்ணீரிலும் உள்ளது. ஆனால் அது போதாது... அதிகமாக தேவை. பவுலை பற்றி என்ன, அவன் தனது சுகவீனமான தோழனை விட்டு, மேலும் தானே சுகவீனமாக அடிபட்டு மற்றும் எல்லாம்... அது போல எல்லாம், ஓ, அநேக அநேக காரியங்கள். ஜனங்கள் வேதாகமத்தை, அது எழுதப்பட்ட வெளிச்சத்தில் படிப்பதில்லை. அவ்வளவு தான் அவர்கள் என்ன நினைத்தார்கள் என்பதை சற்று வாசியுங்கள், மேலும் அது போல தானே அவர்களுக்கு எல்லா யோசனைகளும், மற்றும் ஸ்தாபனங்களும் மேலும் ஒவ்வொரு காரியங்களும் கிடைத்தது. நல்லது, அவன் சொன்னான். "நல்லது, இயேசு தண்ணீரை திராட்சை இரசமாகாக மாற்றினார். மேலும் அவர் அப்பத்தைப் பிட்டு பசியாயிருந்த அநேக ஜனங்களுக்கு போஷித்தார்." நான் சொன்னேன் ஒரு நிமிடம் பொறுங்கள் சகோதரனே. நாம் இப்போது குழந்தை பருவத்தில் தான் இருக்கிறோம். இப்போது தான் எழுந்து கொண்டு இருக்கிறோம். கவலைப்படாதீர்கள். எல்லா மத வெறியர்களையும், அவிசுவாசிகளையும் நம்முடைய வழியில் இருந்து எடுத்துப் போட்டு விடுவோம், நாமோ பூரணத்தை நோக்கி இயங்கிக் கொண்டே இருப்போம். கொஞ்சம் நேரம் கழித்து பெரிய அதிசயங்களையும், அடையாளங்களையும் காண்பீர்கள். ஆனால், நாமோ இப்போது குழந்தைகளை போல தவழ்ந்து கொண்டிருக்கிறோம், இன்னும் கொஞ்ச நேரம் மட்டும் நமக்கு கொடுங்கள். 9. தெய்வீக சுகமளிப்பது தேவனிடத்தில் இருந்து வருகிறது என்று மருத்துவ விஞ்ஞானமும் மற்றும் எல்லாம் அறிந்து கொள்ளும் மட்டும், நாம் மேலே இயங்கி கொண்டே இருப்போம். இப்போது, மருத்துவ தலைமை குழுமத்திலிருந்து வந்திருக்கும் ஒரு அறிக்கை என்னிடம் உண்டு. அமெரிக்க மருத்துவ குழுமத்தின் தலைமை செயலகத்திலிருந்தும், மருத்துவர்கள் இடமிருந்தும் மேலும் எல்லோரிடமிருந்தும், தெய்வீக சுகமாக்கப்படுதல் முற்றிலும் சரி என்றும் அது பரிபூரண உண்மை என்றும் அறிக்கை வந்துள்ளது. 10. தெய்வீக சுகம் அளிப்பதை பற்றி நான் ஒரு வர்ணனையை எழுதிக் கொண்டு இருக்கிறேன். மேலும் அது அந்த வர்ணனையின் முதல் பக்கங்களில் இருக்கிறது. மேலும் அது எல்லாவற்றையும் அதில் எழுதி இருக்கிறேன், மற்றும் அது உண்மை என்று நமக்கு தெரியும். இப்போது அடுத்த காரியம் என்னவென்றால், கர்த்தர் உயர்ந்த அதிசயங்களையும், சிறந்த காரியங்களையும், சிறந்த தளத்தில் செய்ய உட்பிரவேசிப்பார். அது இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையில், இந்த பூமியில் அவர் செய்த அற்புதங்களையும், யோவான் ஸ்நானகனின் அற்புத பிறப்பையும் குறிக்கும். அடுத்து வருவது சுகவீனமுள்ளவர்களின் குணமாக்குதலும், மேலும் ஆவிகளை பகுத்தறிதலும். அதற்கு பிறகு மரித்தவர்களை உயிரோடு எழுப்புவதையும், அதிலிருந்து வானமும் பூமியும் மற்றுமெல்லாம் அவரை.... பிரகடன படுத்துவதையும் பின்னும் இந்த பூமி மரித்தவர்களை எழுப்புவதையும்: அற்புதம், அற்புதம், அப்படியே எல்லா வழிகளிலும் (பாருங்கள்) சற்று ஆழத்திற்குள், ஆழத்திற்குள் மேலும் உச்சம் அடைவது மட்டும் ஆழத்திற்குள் செல்கிறது. அது போலத் தான் இப்பவும் நடக்கும். மேலும் இது தான் கடைசி தண்டனையில் இருந்து விடுப்பு தருகிறது. மேலும், அடுத்து இருப்பது, நாம் எதிர் நோக்கிக் கொண்டு இருக்கும், அந்த மேன்மையான ஆயிர வருட அரசாட்சி. அந்த எபிரேய எழுத்தாளர்கள் வேதாகமம் எழுத தொடங்கிய காலத்தில் இருந்து, மேலும் தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் உரைக்க தொடங்கின காலத்தில் இருந்து... சரியாகத் தான் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஓ-! நாம் ஒரு மகத்துவமான நேரத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நீங்களும் அப்படித்தானே. 11. இப்போது இந்த இரவு நான்... போவதற்கு முன்பு, என்னுடைய அபிப்பிராயம் என்ன என்றால். எல்லா காரியமும்.... இப்போது வேதாகமத்தில் எழுதப்பட்டிராத காரியங்களை தேவனால் செய்ய முடியும் என்பதை நான் அறிந்திருக்கிறேன். எல்லா காலங்களிலும் அவர் செய்து இருக்கிறார். வார்த்தையில் அவர் என்ன எழுதியிருக்கிறாரோ அதையே அவர் செய்கிறார். மோசே, அந்த வெண்கல சர்ப்பம் உயர்த்துவதால், தெய்வீக சுகம் அளிக்கப்படும் என்ற காரியத்தை குறித்து, அந்த நிஜமான அடிப்படை வாதிகள் ஒரு வேளை அதை குறித்து மோசேயிடம் பேசி இருந்தால், மோசே அதற்கு என்ன சொல்லி இருப்பார்-? "இப்போது, வெண்கல சர்ப்பத்தை உயர்த்துவதைக் குறித்து கணிக்கப்பட்டிருக்கிறதா என்று எழுதப் பட்டவைகளில் இருந்து நான் கண்டு பிடிக்கப்படும்." அவர்களால் அதை கண்டு பிடிக்க முடியவில்லை. எப்படியோ தேவன் அதை செய்தார். நீங்கள் அதை நம்புகிறீர்களா-? பெதஸ்தா குளம் அருகே இருந்த மனிதனை குறித்து என்ன-? அங்கே ஒரு தேவதூதன் இறங்கி அந்தத் தண்ணீரை கலக்கினான். ஒரு வேளை அங்கே ஒரு ஆழ்ந்த அடிப்படைவாதி இருந்து இப்போது ஒரு நிமிஷம் பொறுங்கள். பரிசுத்த வேதாகமத்தை நான் பார்க்கட்டும், அந்த தண்ணீரில் ஒரு தேவ தூதன் இறங்கி அதைக் கலக்குவான் என்று இருக்கிறதா என்று கண்டு பிடிக்கட்டும். அவர்கள் வேதாகமத்தின் மூலமாக நிரூபித்திருக்க முடியாது. ஆனால் கர்த்தர் அதை எப்படியாயும் செய்து முடித்தார். அது சரி தானே-? பேதுருவின் நிழலில் வியாதியஸ்தரை கிடத்தின போது அவர்கள் சுகமானதை குறித்து என்ன-? அது... அது புதிய ஏற்பாட்டை எழுதும் மகா பெரிய காரியத்திற்கு பிறகு ஏற்பட்டது. ஒரு மனிதனின் நிழலில் கிடந்து, வியாதியஸ்தர்கள் சுகம் பெற்றனர் என்று வார்த்தையில் எழுதி இருக்கிறதா என்று நான் பார்க்கட்டும் என்று சொல்லியிருப்பார்களா என்ன-? அவர்களால் அதை நிரூபித்திருக்க முடியாது. ஆனால் எப்படியோ அதை எப்படியோ கர்த்தர் செய்து முடித்தார். அது சரிதானே-? 12. அப்போஸ்தலர் 19-ம் அதிகாரத்தில் பவுலின் சரீரத்தில் இருந்து உறுமால்களையும், கச்சைகளையும் கொண்டு வந்து வியாதியஸ்தர்கள் மேல் போட்டு விட்டதை பற்றி என்ன சொல்கிறீர்கள்-? யாராவது "இதெல்லாம் வேதாகமத்தில் சொல்லப்படவில்லை" என்று சொன்னால் அது எப்படி. ஆனால் கர்த்தர் அதை எப்படியோ செய்தார். பாருங்கள்-? அது சரி தானே. ஆகையால் கர்த்தர் இரகசியமான வழியில் அற்புதங்களை செய்கிறார். ஆனால் எனக்கோ அதினுடைய அடித்தளங்கள் எல்லாம் முதலாவது வேதாகமத்திலிருந்து வர வேண்டும். கர்த்தரின் நித்திய வார்த்தை தான் இரட்சிப்புக்கு அடித்தளமாக உள்ளது. அது தான் தெய்வீக சுகமாக்குதலின் அடித்தளமாகவும் உள்ளது. சில காலத்திற்கு முன்பு இங்கு யாரோ ஓரு மனிதன் என்னிடம், "நீங்கள் பரிகாரத்தின் அடிப்படையில் தெய்வீக சுகமாக்குதலை பிரசங்கிக்கிறீர்களா-?" என்று கேட்டார். நான் சொன்னேன், “நீங்கள் அதை வேறு வழியில் பிரசங்கிக்க முடியாது, அந்த ஒரே வழியில் பிரசங்கிக்க முடியும். எந்த மீட்பின் ஆசீர்வாதமும் பரிகாரத்தின் வழியில் தான் வர வேண்டும். அவர் கூறினார், "சகோதரர் பிரான்ஹாம், நீங்கள் தவறு என்று நிரூபிக்கப்பட்டால் ஒப்புக் கொள்ளும் அளவுக்கு நீங்கள் ஒரு புத்திசாலித்தனமான மனிதர் என்று நான் நம்புகிறேன்." நான் சொன்னேன், "உங்கள் பாராட்டுக்கு நன்றி. மேலும் அது என் இதயத்தில் தான் இருக்கிறது. நான் ஒரு போதும் தவறாக இருக்க விரும்பவில்லை, ஏனென்றால் நான் மக்களை வழி நடத்துவதில் தவறு செய்தால், நான் அவர்களை தவறாக வழிநடத்துகிறேன். ஆனால் முதலில் நான் சொல்வது தவறு என்பதை இதன் மூலம் நிரூபிக்க வேண்டும். பாருங்கள்-?” 13. அதற்கு அவர், “சரி, நான் அதை உனக்கு நிரூபிப்பேன், நீ தவறு செய்திருக்கிறாய். நீங்கள் அதைப் பார்த்தால், நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்." நான் சொன்னேன், "நிச்சயமாக நான் அதை ஏற்றுக் கொள்வேன்". மற்றும் அவர் சொன்னார் "அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் மற்றும் அது போன்று நம்முடைய பாடுகளை ஏற்றுக் கொண்டு நம்முடைய நோய்களை சுகமாக்கினார் என்று ஏசாயா குறிப்பிட்டிருந்த இடத்திற்கு திருப்புவீர்களா-? நான் சொன்னேன் "ஆமாம், ஐயா" மேலும் அவர் சொன்னார் "பாருங்கள் சகோதரர் பிரான்ஹாமே, மத்தேயு 8-ம் அதிகாரத்தில் ஏசாயா தீர்க்கதரிசி கூறியது நிறைவேறும்படி, இயேசு கிறிஸ்துவினிடம் பிணியாளிகளையும், பெலவீனரையும் கொண்டு வந்தார்கள், மற்றும் அவர்களை அவர் சுகமாக்கினார்... நான் சொன்னேன் "ஆமாம், ஐயா" நான் "நீங்கள் அது பரிகாரத்தினால் தான் நடந்தது என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா"என்று சொன்னேன். அவர் " நிச்சயமாகவே-! என்று சொன்னார்" நான் சொன்னேன், "சகோதரரே, அது இயேசு மரிப்பதற்கு ஒரு வருடம் மற்றும் ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்தது" என்றேன். நான் சொன்னேன், “அப்படியானால் பரிகாரத்தில் அது எப்படி அனுமதிக்கப்பட்டது-? அது உண்மை என்றால், பரிகாரம் இன்னும் அதிகமாக இருந்தது - அது நடைமுறைக்கு வருவதற்கு முன்னால், அது மிகவும் மிகவும் வல்லமை கொண்டதாக இருந்தது. இப்போது, நீங்கள் அதை எவ்வாறு செய்யப் போகிறீர்கள்-?" எனவே நீங்கள் பார்க்கிறீர்கள், நான் - நான் உங்களுக்கு சொல்கிறேன், நான் ... 14. பிரசங்க மேடை ஒரு கேலி செய்வதற்கான இடம் கிடையாது. ஆனால் நான் பில்லி சண்டே அவர்களது சொல்லை குறிப்பிடுகிறேன். தெய்வீக சுகமளிப்பதற்கு எதிரான அவர்களது வாக்குவாதம், பட்டினியால் செத்த ஒரு கோழியின் சூப்புடைய நிழலின் மெலிதான தன்மையை காட்டிலும் மெலிதாக இருக்கிறது. எனவே அது எவ்வளவு மெல்லியதாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். ஆகையால் அது சற்று... அது முடியாது... அது கர்த்தருடைய வார்த்தையின் வெளிச்சத்தில் அது நிற்க முடியாது. அது உண்மை. வேதாகமம் உண்மை. இப்போது, கேளுங்கள். இங்கே பல வாக்குறுதிகள் உள்ளன, அதை உருவாக்குவதற்கு என் விசுவாசம் போதுமானதாக இல்லை. ஆனால் அதைச் செய்ய போதுமான நம்பிக்கை உள்ள ஒருவரின் வழியில் நான் நிற்க மாட்டேன். நான் யோசுவாவை போல ஒரு மதிலை நோக்கி கூக்குரல் இடவில்லை. அல்லது ஏனோக்கை போன்று மாலை வேலையில் நடந்து கொண்டு இருக்கும் போது, மரிக்காமல் அவரோட வீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது போல் அல்ல. என்னால் அதை செய்ய முற்பட முடியாது. ஆனால் அதை செய்வதற்கு, விசுவாசம் உடைய வேறு ஒருவரின் வழியில் நான் குறுக்கே நிற்க மாட்டேன். அதைச் செய்வதற்கு போதுமான விசுவாசம் இருக்கிறது. அது ஒன்று தான். ஆமாம் ஐயா. வேதாகமத்தின் மூலமாக ஜனங்களுக்கு உதவி செய்வதற்கு முயற்சி செய்து, தேவனை மகிமைப்படுத்தும் காரியங்களை நீங்கள் செய்து கொண்டிருக்கும் வரைக்கும், நான் தேவனுக்கு நன்றி சொல்லி, அந்த பழைய காலத்து பரிசுத்த ஆவியின் இரட்சிப்பும், தேவனுடைய வல்லமை மீண்டும் சபையின் மீது இறங்குவதையும் குறித்து நன்றி உள்ளவனாய் இருப்பேன். கர்த்தர் தாமே தம்முடைய ஆசீர்வாதங்களை கூட்டுவாராக-! 15. உங்களுக்குத் தெரியும், சுற்றிப் பார்த்து... நேற்றிரவு மக்கள் உணர்ந்த பிறகு, பீடத்திற்கு ஜனங்களை வருமாறு நான் அழைப்பு விடுத்தேன். நான்கு அல்லது ஐந்து கரங்கள் மேலே உயர்த்தப்பட்டன. நாங்கள் அதை பாராட்டுகிறோம். மேலும் சுகமாக்கப்படும் ஆராதனையில் யாருக்காவது சுகமாக்கப்பட வேண்டுமா என்று கேட்டேன்-? அதற்கும் மூன்று அல்லது நான்கு கரங்கள் மேலே உயர்த்தப்பட்டன. நான் இங்கு சிறிது நேரம் ஐக்கியம் கொள்ள வேண்டும் என்று கர்த்தர் நினைத்தார் என்று நான் நினைக்கிறேன். நான் சகோதரர் ஜாக்சனிடம் சொன்னேன், இதை அதிகம் விளம்பரப்படுத்த வேண்டாம், அவருடைய சபைக்கு மட்டும் சொல்லுங்கள் என்று சொன்னேன். ஆனால் ஒரு நாள், நான் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்கு மீண்டும் இங்கு வர விரும்புகிறேன், பழைய கால சந்திப்பு, இங்கேயே, இந்த சிறிய ஆடிட்டோரியத்தை, நம்மால் முடிந்தால், இங்குள்ள சபைகளை ஒன்றிணைக்க வேண்டும், எங்களால் முடியும், அவர்களில் ஒரு குழு ஆதரவு செய்யவும், ஒத்துழைக்கவும், அல்லது கூட்டத்துடன் ஒத்துழைக்கவும், மற்றும்... 16. ஒலி அமைப்பு இங்கு நன்றாக இருப்பதாக நினைக்கிறேன். இங்கே இருக்கின்ற மக்களின் ஆவி மிகவும் அருமையாக உள்ளதாக எண்ணுகிறேன். நான் அதை சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. நான் தொடர்ந்து வார்த்தையை வாசித்து, பிரசங்கிக்க ஆரம்பிப்பேன். ஆனால் நான்.... நான் உணர்வது என்னவென்றால் நீங்கள் ஒரு கூட்ட அருமையான மக்கள். மேலும் நான்.... நான் திரும்பவும் என்னுடைய குழுவினரோடு எப்போதாகிலும் இங்கு வந்து, கர்த்தர் தருவார் என்றால் ஒரு உண்மையான திட்டமிட்ட ஆராதனையை என் குழுவினரோடு நடத்துவேன். அதற்காக நீங்கள் ஜெபிப்பீர்களா-? இப்போது கர்த்தர் நம்மை மீண்டும் திரும்ப கொண்டு வருவார் என்பதற்காக நான் ஜெபிக்கிறேன். இப்போது வார்த்தையை நான் பார்ப்பதற்கு முற்படும் போது கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக. 17. இங்கே, கொஞ்சம் காலத்திற்கு முன்பு, யாரோ ஒருவர் என்னிடம் கிரேக்க வார்த்தைகளை பற்றியும் எல்லா விதமான எபிரேய வார்த்தைகளை பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார். நான் எனக்கு... எனக்கு அதைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்று சொன்னேன், அவர் சொன்னார்... நான் சொன்னேன், எனக்கு... எனக்கு அந்த புத்தகத்தை பற்றி ஒன்றும் தெரியாமல் இருக்கலாம், ஆனால் அதன் ஆசிரியரை நிஜமாகவே நன்றாக தெரியும். அதுதான் முக்கியமான காரியம், நான் சொன்னேன் நான்... நான் அந்த புத்தகத்தை காட்டிலும் அந்த ஆசிரியரை அறிந்திருப்பதே நல்லது. ஆகையால் அதுதான்......... ஆனால் அந்த ஆசிரியரை அறிந்திருப்பது நல்லது. அவர் அவருடைய புத்தகத்தை வெளிப்படுத்துவார். நீங்கள் அப்படித்தானே நினைக்கிறீர்கள்-? அவரிடம் பேசுங்கள். ஆகையால் நாம் சற்று அவருடைய வார்த்தையிலிருந்து ஒரு வாக்கியத்தை வாசிப்போம். பின்பு அவரை நமக்கு உதவுமாறு கேட்டுக் கொள்வோம். இப்போது வார்த்தையை பற்றி இன்று இரவு அதிகமாக உங்களை வைத்திருக்க விரும்பவில்லை. ஏனென்றால் நாளைக்கு நீங்கள் ஞாயிறு பள்ளிக்கு செல்வீர்கள், என்பதை அறிந்திருக்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய உத்தியோகத்திற்கு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் உங்களுடைய சபை எங்கு உள்ளதோ அங்கு சென்று கர்த்தரில் களிகூர்ந்து, மேலும் உங்களுடைய போதகரிடம் ஆராதனை நாளை மதியம் தான் உள்ளது என்பதை கூறுங்கள். நாம் வெளியே வர மகிழ்ச்சியுற்றிருக்கிறோம். நாம் ஸ்தாபனம் அற்றவர்கள். மேலும் ஜனங்களை பிரிப்பதை நாம் நம்புவது கிடையாது. சுவிசேஷத்தை பிரசங்கிப்பதை தான் நம்புகிறோம். மேலும் ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டு கர்த்தரை சேவிக்க வேண்டும், அவ்வளவு தான். பின்னர், நாளை மதியம் பத்து அல்லது இரண்டு முப்பது மணிக்கு நிறைவு ஆராதனையாக இருக்கும். 18. இப்போது வேதாகமத்தில் எபிரேயர் 10 ஆம் அதிகாரத்தில் 19 ஆம் வசனத்தில் இருந்து நாம் வாசிக்க தொடங்குவோம். மிகவும் பிரசித்தம் பெற்ற ஒன்று. எனக்கு எபிரேயர் நிருபம் மிகவும் பிடித்த ஒன்று. அது பவுல் என்று நான் நம்புகிறேன், அது முழுமையாக அறியப்படவில்லை, ஆனால் நீங்கள் பவுலின் கடிதங்கள், அவருடைய நிருபங்களைப் படித்து, இது பவுல் எழுதியது என்று நீங்கள் சொல்லும் வரை இது போதுமானதாக உள்ளது என்பதைக் கண்டறியலாம், அல்லது நான் அதை நம்புகிறேன். அவர் கிருபையிலிருந்து நியாயப்பிரமாணத்தை பிரித்து, எபிரேயர்களுக்குப் போதிக்கிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக இப்போது வழங்கப்பட்ட முறைமைகள் மற்றும் அவருடைய கிரியைகள் மற்றும் பல, பழையதில் இருந்து நன்மையாக புதியதில் எப்படி மாற்றினார்கள். 19 வது வசனத்தில் நாம் இதை வாசிப்போம் ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டு பண்ணினபடியால், அந்த மார்க்கத்தின் வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிற படியினாலும், தேவனுடைய வீட்டின் மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும், துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம். அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராய் இருக்கிறாரே. கர்த்தர் தாமே அவருடைய வார்த்தையோடு கூட ஆசீர்வாதங்களையும் கூட்டுவாராக. நான்- இன்றிரவு ஒரு தலைப்பை "உள் திரை," அல்லது, "மறைக்கப்பட்ட ஜீவியம்; ஒரு மறைக்கப்பட்ட ஜீவியம்" செய்தியாக எடுத்துக் கொள்ள விரும்புகிறேன் 19. சில இரவுகளுக்கு முன்பு, கிளார்க் கவுண்டி மெமோரியல் மருத்துவமனையில் மரித்து கொண்டிருக்கும் ஒரு இளம் பெண்ணின் அவசர அழைப்புக்கு நான் அழைக்கப்பட்டேன். மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு நான் போதகராக இருந்த கூடாரத்தில் அவள் உறுப்பினராக இருந்ததாக அவள் சொன்னாள். நான் அவளுடன் பேசுவதற்காக இந்த இளம் பெண்ணிடம் சென்ற போது, அவள் பிராண வாயு இயந்திரத்தின் கீழ் இருந்தாள். நான், “நீங்கள் கூடாரத்திற்கு வந்திருக்கிறீர்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள்-?” என்றேன். அவள் "ஆமாம் சகோதரர் பிரான்ஹாமே, நான் வந்தேன்" என்று சொன்னாள். நான் "நீங்கள் மரித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிகிறீர்களா" என்று சொன்னேன். அவள், "நான் அறிகிறேன், சகோதரர் பிரான்ஹாம்" என்றாள். அவள் ஒரு குழந்தைக்கு தாய் என்று கூறினார். அவளுக்கு பத்தொன்பது அல்லது இருபது வயது இருக்கும். அவளுக்கு நான்கு மாதக் குழந்தை இருந்தது. ஆனால் அதற்கு… பெரியவர்கள் வரிகளுக்கு இடையில் இருப்பதை புரிந்து கொள்ளவும். அவள், யூரீமிக் என்னும் விஷத்தை உட்கொண்டிருந்தாள். ஓ மற்றும் பல காரியங்கள். மருத்துவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை, ஆனால் அவளை பின்னால் படுக்க வைத்து மரணத்திற்காகக் காத்திருந்தார்கள். அவ்வளவு தான். மருத்துவ அறிவியலால் அவளை எதுவும் செய்ய முடியவில்லை. மேலும் அவள், ஆண்டவரை சந்திப்பதற்கு ஒரு குழந்தையாக சென்றுக் கொண்டிருந்தாள், நான் சொன்னேன், "சகோதரி, அந்த தொட்டில் பட்டியலில் உங்களுக்கு நினைவிருக்கிறதா, நீங்கள் தொட்டில் பட்டியலில் உள்ள ஐக்கியத்தில் ஞானஸ்நானம் பெற்றீர்கள்." நான், “உங்களுக்கு என்ன காரியம் ஏற்பட்டிருக்கிறது-?” என்றேன். அவள், “சகோதரர் பிரான்ஹாம், நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றாள். கர்த்தராகிய இயேசுவை நான் இன்னும் நேசிக்கிறேன் என்றாள். ஆனால், "நான்-அவரைச் சேவிப்பது எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது" என்று கூறினாள். 20. இப்போது, பெரும்பாலான கிறிஸ்தவர்களுடைய வாழ்வில் நான் அதைத் தான் காண்கிறேன். பெரும்பாலும், நான் அவ்வாறு கூறுவதை வெறுக்கிறேன், ஆனால் அது உண்மை தான். கிறிஸ்தவத்தை பிரசங்கிக்கக்கூடிய பெரும்பாலான மக்கள், அதை தக்க வைத்துக் கொள்வதற்கு கடினமாக போராட வேண்டியதாய் உள்ளது. வேதாகமத்தைப் பற்றிய சரியான போதனை இல்லாததால் தான் என்று நான் நம்புகிறேன். அதை தக்க வைத்துக் கொள்வதற்கு கடினமாக போராட வேண்டியதாய் உள்ளது. அவர் அதை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறார். முழு கிறிஸ்தவமும் பிரதானமாக இளைப்பாறுதலை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே-! நீங்கள் எல்லாரும் என் இடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்றார். கவலைப்பட்டு போராடிக் கொண்டிருக்க தேவையில்லை. நீங்கள் இளைப்பாறுதலைக் கொண்டிருக்கிறீர்கள்; அவ்வளவு தான். இளைப்பாறுதல் கொடுக்கபட்ட பின்பு நீங்கள் சமாதானத்துக்குள் செல்கிறீர்கள். அதிலேயே எல்லா காரியமும் முடிந்து விட்டது. “எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்கள் ஆக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியும் இருக்கிறார்” என்று வேதாகமம் மேற்கோள் காட்டுகிறது. 21. கவனியுங்கள். நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம் அல்லது உங்களால் என்ன தான் செய்ய முடியும். அது தான் கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு எல்லாம் செய்து முடித்து விட்டாரே. நீங்கள்... வர முடியாது. யாரோ சொன்னார்கள், "சரி, நான் உங்களுக்கு சொல்கிறேன், நான் - நான் இதை விட்டுவிட்டு, தேவனைத் தேடச் சென்றேன். எந்த ஒரு மனிதனும் தேவனை தேடவில்லை. மனிதன் தேவனைத் தேடுவதில்லை; தேவன் தான் மனிதனைத் தேடுகிறார். ஆதியில் இருந்த ஏதேன் தோட்டத்தின் தொடக்கமே அதை நிரூபித்தது. "பிதாவே.., பிதாவே.., நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்-?" என்று சத்தமிட்டுக் கொண்டே ஆதாம் தோட்டத்தின் வழியே ஓடிக் கொண்டு இருக்க வேண்டும். ஆனால் தேவன் ஏதேன் தோட்டத்தின் வழியே சென்று, “ஆதாமே, ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்-?” என்று சொன்னார். மற்றும் ஆதாம் மறைந்திருப்பது, அது மனிதனின் இயல்பாக இருக்கிறது. 22. மேலும் இயேசு சொன்னார் "பிதா ஒருவனை என்னிடத்தில் இழுக்காவிட்டால் ஒருவனும் என்னிடத்தில் வரான். "இது பற்றி நீங்கள் எதுவும் செய்ய முடியாது. மேலும் இயேசு ஒரு தவறான நோக்கத்திற்காக மரிப்பதற்காக கல்வாரிக்கு வரவில்லை. அவர் அங்கு வந்து, “சரி, ஒரு வேளை, நான் மரித்து விடுவேன்; சிலர் நான் மரித்து விட்டதைக் கண்டு சிலருக்கு பரிதாபமாக இருக்கும், சிலர் நான் மரிப்பதை பார்ப்பார்கள். ஒரு வேளை அவர்கள் வந்து தேவனைச் சேவிப்பார்கள்." தேவன் தம்மிடம் வருவதற்கு தேவனுடைய முன்னறிவின் மூலம் தேர்ந்து எடுக்கப்பட்டவர்களை மீட்பதற்காக இயேசு ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக வந்தார். அது சரி தானே. வேதாகமத்தை அறிந்த அறிஞர்கள் உங்களுக்குத் தெரிந்திருதால், முற்பிதாக்களும் ஒரு முன்மாதிரியை உருவாக்கியுள்ளனர். ஆபிரகாம் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவன். ஆபிரகாம் ஒன்றுமில்லாமல் இருக்கும் போது, ஒருவனாக எண்ணப்படாமல், இருக்கும் போது தேவன் அவனை அழைத்தார். ஒரு சாதாரண மனிதன். அவன் ஒரு நல்ல மனிதனாக இருந்ததிற்காக அல்ல, ஆனால் தேவனுடைய முன் அறிவின்படி ஆபிரகாமை தெரிந்து கொண்டார். ஆபிரகாம் தெரிந்து கொள்ளபடுத்தல், ஈசாக்கு நீதிமானாக்கப்படுதல், யாக்கோபு கிருபை, யோசேப்பு பூரணம். அதோடு முடிவு பெற்றது. யோசேப்பு தான் ஒரு பூரணமான ஒன்று. (பாருங்கள்-?), இளவரசன் ஐஸ்வர்யத்தின் இளவரசன். 23. இப்போது, மக்கள் மிகவும் போராடுவதை நான் காண்கிறேன். நான் ஜனங்களை சந்திக்கும் போது, "இது ஒரு போராட்டம்" என்று அவர்கள் சொல்வது போல் தெரிகிறது. நீங்கள் அப்படிபட்ட ஜனங்களை பார்த்து இருக்கிறீர்களா-? அநேகமாக ஒரு வேளை இப்பொழுது எனக்கு முன்பாக இருக்கும் அநேகருக்கு, மேடும், பள்ளங்களும், உள்ளும் புறமுமான பிரச்சனைகள் உண்டு. இந்த நாளில், அவர்கள் அனைவரும் சரியாக உள்ளனர். நீங்கள் அவர்களை சந்திப்பீர்கள் என்றால், சரி, அவர்கள்-இன்று தேவனை நேசிக்கிறார்கள், நாளை அவர்களுக்கு அதை தக்க வைத்துக் கொள்வதற்கு அவ்வளவு போராட்டத்தை எதிர் கொள்கிறார்கள். சாத்தான் அவர்களை மிகவும் சோதிக்கிறான், மேலும் அதனால் தான் அவர்கள் இத்தகைய மேடு பள்ளங்களைக் கொண்டுள்ளனர். பின்பு மலையுச்சியில் இருக்கும் ஒருவரை நீங்கள் இப்போதும் சந்திக்கிறீர்கள். சகோதரரே, அவர்களைத் தொந்தரவு செய்ய எதுவும் இல்லை. இப்போது, எங்கேயோ ஏதோ குறை இருக்க வேண்டும். தேவன், மனிதனை மதிப்பது கிடையாது. அல்லது மனிதர்களை தேவன் மதிப்பதில்லை. அவர் தன்னுடைய எல்லா பிள்ளைகளுக்கும் ஒரே விதமாக அளிக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவர் செய்யவே மாட்டார்.... நீதியை நடப்பிக்கிற ஒரு தகப்பன் தனக்கிருக்கும் பிள்ளைகளில் ஒரு குழந்தைக்கு மட்டும் ஐஸ்கிரீம் தருவது கிடையாது. எல்லோருக்கும் தரவேண்டும் என்பது தான் அவர் பிரியம். நிச்சயமாக நீங்கள் வாழ வேண்டும் என்று அவர் விரும்புகிறார்... மற்றும் நான் இங்கே வெகுமதிகளை பற்றி பேசவில்லை, அவருடைய கிருபையை குறித்து தான் பேசுகிறேன். இப்போது... நிச்சயமாக சிலர் அப்போஸ்தலர்கள் என்றும், சிலர் தீர்க்கதரிசிகள் என்றும், மேலும் போதிப்பவர்கள் என்றும், மற்றும் சுவிசேஷகர்கள் என்றும் சபை அலுவலகத்தில் வேலை செய்பவர்களாகவும் அழைக்கப்பட்டிருக்கின்றனர். அவைகள்... கர்த்தர் இந்த காரியங்களை சபையில் வைத்துள்ளார். மற்றும் ஒவ்வொருவரும் கிருபையின் அளவையும் எப்படி கிருபையை மேற்கொள்வது என்பதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன். பின்னர் அவர் உங்களை உங்கள் அலுவலகத்திற்கு தேர்ந்தெடுக்கிறார். 24. ஆனால், ஆனால், தேவன் கிருபையினாலே நமக்குத் தேவையான எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுத்திருக்கிறார். மற்றும், பிரச்சனை என்னவென்றால்... நான் மிச்சிகனில் கவனித்தேன்; இங்குள்ள நீங்கள் நிறைய தற்பெருமை காட்டுகிறீர்கள், ஏனென்றால் உங்களிடம் நிறைய பழங்கள் உள்ளன. மிச்சிகனில் இருந்து திராட்சை கிடைக்கும். மிச்சிகன், பெரிய பீன்ஸ் மற்றும் அனைத்து வகையான செர்ரிகளையும் நாங்கள் பெறுகிறோம். அழகு. மிச்சிகனை விட சிறப்பாக வளர்க்கும் இடம் உலகில் எங்கேயும் இல்லை என்று நினைக்கிறேன். இப்போது, உங்கள் பழ மரங்கள் எப்படிப்பட்டவைகள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அந்த சிறிய செர்ரி மரம் அல்லது சிறிய ஆப்பிள் மரம், நீங்கள் அதை அமைக்கும் போது, அது சுமார் ஒன்றரை அங்குல உயரத்திற்கு அதிகமாக இல்லாத போது, அந்த மரத்திலிருந்து அந்த மரத்திலிருந்து மொத்தமாக எடுக்கக் கூடிய நிறைய பழங்களை எடுப்பீர்கள் என்று நினைத்திருக்கிறீர்களா-? அது சரி. அது அப்படி இல்லை என்றால், அது எங்கிருந்து வருகிறது-? யார் அதின் மேலே தொங்க விடுவார்-? அது ஏற்கனவே அதில் இருக்கிறது. ஒரே ஒரு காரியம் மட்டும் அந்த மரம் செய்கிறது. நீங்கள் அதை நட்ட பின்பு அதற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அது அந்த தண்ணீரை குடித்து, மீண்டும் குடித்து, அதற்கு அதிகமான அளவிற்கு பெற்றுக் கொள்ளும் வரைக்கும் குடிக்கும். அது மேலே உந்தி கொண்டு வந்து இன்னும் அதிகமான தண்ணீரை குடித்து வளர்கிறது. பின்பு அது விரிவடைகிறது. மேலும் அது கிளைகளை உந்தி தள்ளுகிறது, பின் மொட்டுக்களை உந்துகிறது, பின் இலைகளை உந்தித் தள்ளுகிறது, பின் மலர்ந்து ஆப்பிள் கனிகளைத் தருகிறது. பின் அது மீண்டும் உந்தி தள்ளுகிறது, மீண்டும் உந்தி தள்ளுகிறது, சற்று குடிக்கிறது, குடிக்கிறது, குடிக்கிறது, மீண்டும் உந்தித் தள்ளும் வரைக்கும் குடிக்கிறது. 25. மேலும், அது தான் ஒரு கிறிஸ்தவன் செய்கிறான். இயேசு கிறிஸ்துவுக்குள் நீங்கள் நட்டப்பட்டு இருந்தால், இந்த பூமிக்குரிய பிரயாணத்தில், உங்களுக்கு என்னென்ன தேவைப் படுகிறதோ, அவைகள் பரிசுத்த ஆவியை பெற்ற பின்பு, அவை உங்களில் இருக்கிறது. ஒரே ஒரு காரியம் மட்டும் நீங்கள் செய்ய வேண்டும். நீங்கள் குடித்துக் கொண்டு, குடித்துக் கொண்டு மேலும், வெளியே உந்தி கொண்டு, வெளியே உந்திக் கொண்டு இருக்க வேண்டும். குடிக்க முடியாத அளவு வரும் வரைக்கும், நீங்கள் குடித்துக் கொண்டே இருங்கள். உங்களுக்கு தெய்வீக சுகம் கிடைக்க வேண்டும் என்றால், கர்த்தருடைய வார்த்தைக்கு சென்று, நீங்கள் வெளியே உந்தித் தள்ளும் வரைக்கும் குடித்துக் கொண்டே இருங்கள். இன்னும் அதிகமாக தேவனை உங்களுக்கு தேவைப்படும் என்றால் உங்களை உந்தி தள்ளும் வரைக்கும் குடித்துக் கொண்டே இருக்கும். மேலும் இயேசு தான் வாழ்க்கையின் வற்றாத நீரூற்றாய் இருப்பவர். அவரில் நீங்கள் நட்டப்பட்டிருந்தால் ஒரே ஒரு காரியம் மட்டும் நீங்கள் செய்ய வேண்டும். அவருடைய நன்மை ஆனதிலிருந்து, தயாளகுணத்திலிருந்து குடித்துக்கொண்டே, உங்களுக்கு இந்த பூமிக்குரிய வாழ்க்கையின் பிரயாணத்தில் என்னென்ன தேவைப்படுகிறதோ அதை உந்திக் கொண்டே வெளியே வாருங்கள். அவையெல்லாம், குடிக்க வேண்டும், இளைப்பாற வேண்டும், சமாதானமாக இருக்க வேண்டும். நீங்கள் போராடி, கடும் முயற்சி செய்து, அதை இழுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் அதை செய்யும் போது, நீங்கள் நீங்கள் எந்த காரியத்திற்காக பிரதிநிதித்துவம் பெற்று இருக்கிறீர்களோ அதை தோல்வியுற செய்கிறீர்கள். 26. கிறிஸ்தவம் என்பது ஏதோ ஒரு காரியமல்ல. தேவனிடம் செல்லுவதற்கு பிச்சை எடுக்கவோ, அழுகவோ, கெஞ்சவோ, உபவாசம் இருக்கவோ, மற்றும் அது போன்று மற்ற காரியங்களை செய்து அணுகலாம் என்பதல்ல. நிச்சயமாகவே இல்லை. நான் உபவாசத்தை குறித்து தவறாக சொல்லவில்லை. ஆனால் இங்கே சிறிது காலத்திற்கு முன்பு, ஒரு மனிதன் உபவாசத்தை பற்றி ஒரு புத்தகம் எழுதினான். பைத்தியக்காரத்தனமாக உபவாசம் இருந்த ஆண்களும், பெண்களும் என் கூட்டத்திற்கு வருகிறார்கள். அது ஒரு பைத்தியகாரத்தனம் என்றே சொல்லலாம். அந்த புத்தகம் 40 நாள் எப்படி உபவாசம் இருக்க வேண்டும் என்று சொன்னதினிமித்தம் அவர்கள் அந்த உபவாசத்தை மேற்கொண்டனர். அவர்களில் சிலர் தவறான உணவு பழக்கங்களினால், அவர்களின் அவர்களின் பற்களும் உதிர்ந்து விடும். மேலும் அவர்களின் கண்கள் சுருங்கி விடும். மற்றும் நீங்கள் புரிந்திருப்பது போல் பால் கொடுக்கும் தாய்மார்களும்.... தாயாகப் போகும் பெண்களும், மற்றும் அவர்களுடைய சிசுக்களும், முற்றிலுமாக பைத்தியம் பிடித்து, மற்றும் பைத்தியக்கார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவர். அவர்களில் பலர், பலர், அந்த நிலையில் வருகிறார்கள். நான் உபவாசத்தை நம்புகிறேன். நிச்சயமாக. ஆனால் நீங்கள் உபவாசம் இருக்கும்போது, உங்களுக்கு பசி ஏற்படாது. இயேசு உபவாசத்தை முடித்த பிறகு, அவர் பசியாக இருந்தார் என்று வேதாகமம் கூறுகிறது. தேவன் உங்கள் மீது உபவாசத்தை வைக்கிறார். நீங்கள் அதை உங்கள் மீது வைக்க வேண்டாம். அந்த மனிதன் நிச்சயமாக பெண்களை கவர்ந்து கொண்டான், அந்த புத்தகத்தை எழுதிய மனிதர் உபவாசத்திற்கு பிறகு ஒரு பெண்மணி 20 வருடங்களுக்கு முன் இருப்பதைப் போல இளமையாக இருக்கிறாள் என்று கூறி ஒரு பெண்ணின் படத்தை அந்த புத்தகத்தில் போட கூறினான். ஒரு வருடம் கழித்து அந்தப் பெண் எப்படி இருந்தாள் என்பதை நீங்க பார்த்திருக்க வேண்டும். பாருங்கள்-? நிச்சயமாகவே. நீங்கள் அதை செய்ய வேண்டாம். நீங்கள் செயல்களால் காரியங்களைச் செய்வதில்லை. அது கிருபையால் தான். கர்த்தருடைய அதிகாரப்பூர்வ கிருபையால்... 27. இப்போது பிரச்சனை என்னவென்றால்... சிறு பிள்ளைகள் எளிதில் புரிவதற்காக எளிதாக கூறுகிறேன். நாம் பழைய ஏற்பாடுபாட்டுக்கு சென்று, பழைய ஏற்பாட்டிலிருந்து காரியங்களை எடுப்போம், வேத பண்டிதர்கள் சிறந்த முறைகளை உபயோகப்படுத்தி அதை விளக்க முடியும். ஆனால் நான் எப்பொழுதுமே, சபைக்கு செல்லாத மக்களுக்கும், வேதாகம பண்டிதரில்லாதவர்களுக்கும், அல்லது சிறு பிள்ளைகளுக்கும் அதை உடைத்து கூற விரும்புகிறேன். ஏனென்றால் அது அவர்களுக்கு எளிதில் புரியும். ஆகையால் அனேகர் நான் ஒரு வேதாகம ஒப்பீட்டாளராக இருக்கிறேன் என்று நினைக்கின்றனர், அதைப் பார்ப்பதற்காக நான் மாதிரிகளை கொடுக்க விரும்புகிறேன். ஆகையால் நாம் பார்ப்போம். இப்போது, இன்று இரவு நாம் பேசிக் கொண்டிருக்கிற ஒரு மறைக்கப்பட்ட ஜீவியம் என்னும் செய்தியை பற்றிய மாதிரியை பழைய ஏற்பாட்டிலிருந்த அந்த மன்னா, நியாயஸ்தலம், பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் இடையில் உள்ள திரையில் தேவன் எப்படி செயல்பட்டார் என்பதை பற்றி பார்ப்போம். இப்போது இஸ்ரவேலர்கள், எகிப்திலிருந்து சிவந்த சமுத்திரம் வழியாக கர்த்தருடைய கிருபையால் எப்படி கடந்தார்கள் என்றும், எகிப்தியர் அதில் எப்படி மூழ்கி மாண்டார்கள் என்பதை பற்றியும், நீங்கள் பார்ப்பீர்கள் என்றால் அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் வழியாகவும், ஒரு காலத்தில் பாவத்தின் வழியாக கடினமாக நடத்தி சென்றவர்கள், உங்களுக்கு பின்னால் மடிந்து போனதிற்கு அது ஒரு மாதிரியாக உள்ளது. இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த ஊற்றுண்டே எப்பாவ தீங்கும் அதனால் நிவிர்த்தியாக்குமே 28. அந்தப் பழைய எகிப்திய ஆளோட்டிகள் ஜனங்கள் மீது சுமைகளை சுமத்தி வேலை செய்ய விரட்டினர். சிவந்த சமுத்திரத்தில் பின்னிட்டு பார்க்கும் போதோ அவர்கள் தண்ணீரில் மூழ்கி இருந்தனர். ஆகையால் மோசே ஆவியில் நிரம்பி ஒரு புதிய பாடலை பாடுவதும், மிரியாம் ஒரு தம்புருவை எடுத்துக் கொண்டு, கரையோரமாக நடனமாடிக் கொண்டு போனதை குறித்து ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அதே போல தக்க ஒரு பழைய மாதிரியான பரிசுத்த ஆவியினால் நிரம்பிய கூட்டத்தை நான் பார்த்ததே இல்லை. அது சரி தானே-? மேலும் இஸ்ரவேல் குமாரத்திகளும் அவளைப் பின் தொடர்ந்து, அவ்வாறே செய்தார்கள். அவர்கள் மேற்கொண்டிருந்தனர். மற்றும் ஒருவன் முற்றிலுமாக மேற்கொள்ளாமல் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வது எப்படி-? என்று அவனுக்கு தெரியாது. யாரை மேற்கொள்ள வேண்டும்-? தன்னை தானே-? நீயே தான் உனக்கு கிடைத்த பெரிய எதிரி. நீங்கள் விசுவாசத்தில் உயர முடியாததற்கு காரணம் உங்களுடைய புத்தி கூர்மை தான். உங்கள் அறிவு சார்ந்த பகுதி என்ன கூறுகிறது என்றால், "சரி, இது அல்லது அது" என்று. இது காரணங்களை வினவுவதாக உள்ளது. நாம் காரணங்களை தூக்கி எறிய வேண்டும் என்று வேதாகமம் நமக்கும் சொல்லுகிறது. 29. உங்களில் இரண்டு பாகங்கள் உள்ளன, இரண்டு திறன்கள். பழைய நயவஞ்சகர் சொல்வதை நீங்கள் அறிவீர்கள், அல்லது, "ஓ, வேதாகமம் அப்படித்தான் சொல்லியிருக்கிறது" என்று அநேக முறை மக்கள் கூறுவது உங்களுக்குத் தெரியும். விஞ்ஞானம், ஒரு முறை சொன்னதை, “ஏதோ... இருக்கிறது சூரியனை... சொன்ன போது, அவர் நிச்சயமாக காரியங்களை குழப்பியுள்ளார். சூரியனைத் தவிர பூமிக்கு எந்த வெளிச்சமும் கிடைக்காது. சரி, எக்ஸ்ரே அதை நிரூபித்தது. “உங்கள் சரீரம் முழுவதும் ஒளிமானியால் நிறைந்தது-?” என்று வேதாகமம் கூறுகிறது. உங்களுக்கு அதை பற்றி தெரியுமா-? உங்கள் சரீரம் ஒளியால் நிறைந்துள்ளது. விஞ்ஞானம் சொல்லுகிறது, "சரி, அது பைத்தியம்." ஆனால் அவர்கள் அதை நிரூபிக்கிறார்கள். எக்ஸ்ரே செயற்கை ஒளியைப் பயன்படுத்துவதில்லை; அது உங்கள் வெளிச்சத்தையே பயன்படுத்துகிறது. எக்ஸ்ரே என்பது உங்கள் சரீரத்தில் உள்ள ஒளிமானி ஆகும். நீங்கள் உருவாக்கப்படவில்லை… ஆனால் நீங்கள்-நீங்கள் பெட்ரோலியம், காஸ்மிக் கதிர்கள், அணுக்கள் மேலும் அவற்றை போன்ற பொருட்களால் உண்டாக்கப்பட்டீர்கள். எல்லாவற்றையும் ஒன்று சேர்ந்து போடப்பட்டது தான் நீங்கள். அந்த மாம்ச சரீரத்தில் தான் வாழ்கிறீர்கள். ஏதோ ஒரு நாளில் எல்லாம் கொண்டு வரப்பட்டு.... உடைக்கப்படும். 30. இங்கே சிறிது காலத்திற்கு முன்பு, நான் தலை முடியை வாரிக் கொண்டிருக்கும் போது என்னிடம் எஞ்சியிருக்கும் இரண்டு முடிகளை இழந்தேன். என் மனைவி என்னிடம், "பில்லி, உங்களுக்கு வழுக்கை வருகிறது" என்று சொன்னாள். நான் சொன்னேன், "ஆனால், கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அவற்றில் ஒன்றையும் நான் இழக்கவில்லை." அவள், "அவைகள் எங்கே இருக்கின்றன, அன்பே-?" நான் "நான் உம்மிடம் ஒன்று கேட்கிறேன், பின்பு பதில் சொல்கிறேன்" என்று சொன்னேன். நான் சொன்னேன்," எனக்கு அவைகள் கிடைப்பதற்கு முன்னால், அவைகள் எங்கு இருந்தன-? நீயே சொல்லு, அவைகள் எனது தலையில் இருப்பதற்கு முன்னால் அவைகள் எங்கு இருந்தன-? அவைகள் நான் அங்கு செல்வதற்கு முன் அவை எனக்காக எங்கு காத்துக் கொண்டு இருக்கின்றன என்று நான் சொல்லுகின்றேன்." அல்லேலூயா. அது சரியா-? நிச்சயமாக. ஒரு காலத்தில் அவைகள் இல்லை, பின்பு அவைகள் இருந்தன, மீண்டும் அவைகள் இல்லை. மேலும், தொடக்கத்தில் நமது சரீரங்களை நிழலில் வைக்கும் போது அவைகள் எங்கு இருந்தன. அவைகள், அவருடைய 2-ம் வருகையில், மகிமையோடு அவர் காட்சி அளிப்பதற்காக அவைகள் காத்துக் கொண்டிருக்கின்றன. அவர் இரண்டாம் முறை காட்சியில் வரும் போது, என்னை தக்க வைத்துக் கொண்டிருக்கிற ஒவ்வொரு அணுவும், ஒவ்வொரு துளி காஸ்மிக் கதிர்களும் மீண்டும் ஒன்று இணைந்து, ஒரு மறு சிருஷ்டிப்பின் மூலமாக, நம் சர்வ வல்லமை உள்ளவர் பேசும் போது, அந்த ஆவி சரீரத்தை மாற்றி நம்மை என்றென்றைக்கும் வாழ வைக்கும். இது இச்சையினாலோ, அல்லது ஒரு இயற்கையான பிறப்பின் மூலமாகவோ உண்டாகாது. ஓ என்ன-! அது ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய இருதயத்தையும் மகிழ்ச்சியால் மகிழ்ச்சியில் கர்ஜிக்க இது போதாது. கர்த்தர் அவ்விதமாகத் தான் அபிஷேகித்திருக்கிறார். 31. அவருடைய முதல் அற்புதத்தில் அதை அவர் நிரூபித்தார். தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றும் போது, அவர் திராட்ச ரசத்தை மாற்று வழியாக கடந்து, தண்ணீரை திராட்சை ரசமாக அவர், வாயில் இருந்து வந்த வார்த்தை மூலமாக மாற்றினார். அது திராட்சை ரசமாக இருந்திருக்காது. ஏனென்றால் திராட்சைப் பழத்தின் வழியாக மேலே சென்று, புளிக்க வைத்து, ஒரு தொட்டியில் புளிக்க வைத்து, திராட்சை ரசமாக மாறியிருக்க வேண்டும். நிச்சயம். கண்டிப்பாக. ஆனால் கர்த்தர் வார்த்தையை உரைத்த மாத்திரத்தில் அது எல்லாவற்றையும் மாற்றிப்போட்டது. அது போலத்தான் உயிர்தெழுதலிலும் நடக்கும். அந்த எல்லா திருமணங்களும், உடலுறவுகளும் மேலும் அது போன்ற காரியங்களும் ஒழிந்து போகும். மற்றும் கர்த்தர் பேசுவார், நாம் மீண்டும் வாழுவோம். ஆமென். நாம் மீண்டும் வாழ்வதற்கு ஒரு காரணம் உண்டு, ஏனென்றால் உங்களில் உள்ள ஏதோ ஓன்று இப்போது ஜீவித்துக் கொண்டிருக்கிறது. 32. சில நாட்களுக்கு முன் ஒரு மெத்தடிஸ்ட் (Methodist) ஊழியக்காரரும் நானும் உட்கார்ந்து கொண்டு ஐஸ்கிரீம் சாபிட்டுக் கொண்டிருந்தோம். 4H-CLUB என்னும் ஒரு நிர்வாகத்திலிருந்து வானொலியின் மூலமாக ஒரு சீர்படுத்தப்பட்ட ஒரு இயந்திரத்தை பற்றி பேசிக் கொண்டு இருந்தனர். இங்கு கூட சில 4H கிளப்பின் உறுப்பினர்கள் உட்கார்ந்துக் கொண்டிருக்கலாம். மேலும் அதற்கு பிற்பாடு, அவர்கள் ஒரு இயந்திரத்தை சீர்படுத்தி உள்ளனர். பின் அதன் மூலமாக அவ்வளவு பரிபூரணம் சோளம் கிடைக்கும் என்று அவர்கள் சொன்னார்கள். அந்த சாக்கு பையில் உள்ள, ஒரு கைப்பிடி சீர்படுத்தப்பட்ட சோளத்தையும், நிலத்தில் உற்பத்தியாக்கப்பட்ட ஒரு கைப்பிடி சோளத்தையும் பார்ப்பீர்கள் என்றால் அது அவ்வளவு சீராக இருக்கும். இரண்டையும் ஒன்றாக கலந்து பரிசோதிக்கப்பட்டு ஆய்வகத்தில் அனுப்புவீர்கள் என்றால் ஒரு வித்தியாசத்தையும் பார்க்க முடியாது. இரண்டும் அதே விதமான சோள ரொட்டியும், தட்ட சோளத்தையும் தரும். அதில் ஒரே அளவு கால்சியம், ஒரே அளவு நீர்பசை, எல்லாம் ஒவ்வொன்றும் அவ்வளவு சீராக இருக்கும். அவ்விரண்டையும் தனித் தனியாக பிரித்து எது எதிலிருந்து எடுத்தது என்று பார்க்க வேண்டும் என்றால் ஒரே வழி தான் உண்டு. அவ்விரண்டையும் நிலத்தில் புதைக்க வேண்டும், அவ்விரண்டும் அழுகி போகும். மனிதனால் உண்டாக்கபட்டது அழிந்து போகும். ஆனால் தேவனால் உண்டானதோ அதற்குள் ஜீவன் இருக்கும். அது மீண்டும் ஜீவிக்கும். நான் சொன்னேன் "சகோதரன் ஸ்பர்ஜன் அவர்களே எனது கையை பிடித்துக் கொள்ளுங்கள் அல்லது உங்களை நான் தடுமாற்றம் அடைய செய்து விடுவேன் என்று... நான் சொன்னேன்." அது தேவனுடைய ஆவி ஒரு ஒரு விசுவாசிக்கு வரச் செய்கிறது". ஒரு மனிதன் சபைக்குள்ளே இருந்து தான் கிறிஸ்தவன் என்றும் அது போல எல்லாவற்றையும் பிரகடனப்படுத்திக் கொள்ளலாம். உற்பத்தி செய்யும் ஜீவன் அவனுக்குள் இல்லை என்றால் உயிர்த்தெழுதலில் அவன் அங்கேயே கிடப்பான். ஆனால் ஜீவனை உடைய, மறுபடியும் பிறந்த அனுபவம் உடைய அந்த மனிதனோ, இயேசு உயிர்த்தெழுந்தது போல அவனும் மரித்தோரிலிருந்து எழுந்து இருப்பான். எழுந்திருக்க வேண்டும். ஓ, இந்த பாதியில், பட்டினியால் செத்துப் போகும் வாழ்க்கை. 33. இன்று சபையின் காரியம் என்ன. அது இரத்த சோகை உள்ள நிலையில் உள்ளது. அது அப்படி இருக்க கூடாது, ஆனால் அது அப்படி தான் இருக்க வேண்டும் என்று முன்னே கூறப்பட்டுள்ளது. மேலும் அது அப்படி தான் இருக்க வேண்டும். விசுவாசிகள், ஆனலும் இல்லாமல் குளிருமில்லாமல், மேலும் அது போன்று தான் கடைசி காலத்தில் சபை போதகர்களும் குளிர்ந்த நிலையில் காணப்படுவர். பரிசுத்த ஆவியானவர் மிக தெளிவாக கடைசி காலங்களில் ஜனங்கள் எப்படி இருப்பார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். சிலர் விசுவாசத்தை விட்டு விலகி, இச்சையின் ஆவிகளுக்கும், பிசாசின் கோட்பாடுகளுக்கும் செவிக் கொடுத்து, இறுமாப்பாய் உள்ளவர்களாகவும், அகந்தை உள்ளவர்களாயும், தேவ பிரியர்களாய் இல்லாமல் சுகபோக பிரியர்களாய் இருப்பார்கள் என்று கூறுகிறார். படக் காட்சியின் இன்பங்கள் இந்த இடத்தை மூன்று முறை நிரப்பும். “தேவனை நேசிப்பவர்களைவிட இன்பத்தை விரும்புபவர்கள் அதிகம்; "தேவனைக் காட்டிலும் சுகபோக பிரியராயும், சமாதானத்தை கெடுப்பவர்களாயும், பொய்சாட்சி சொல்லுபவர்களாயும், நல்லவர்களை பழிப்பவர்களாயும் இருப்பார்கள்" ஓ நீங்கள் "அது கம்யூனிஸ்ட் என்று சொல்வீரகள்". இல்லை, அது இல்லை. அது கிறிஸ்தவர்கள், விசுவாசிகள். "தேவபக்தி உள்ளவர்களாய் காட்டுபவர்கள், "ஆலயத்திற்கு சென்று, தங்கள் பெயர்களை அந்த புத்தகத்தில் செலுத்தி, மற்றும் எல்லாம்." தேவ பக்தியின் வேஷத்தை தரித்துக் கொண்டு அதின் பெலனை மறுதலிப்பவர், அப்பேற்பட்டவர்களிடம் இருந்து விலகி வா." என்று வேதாகமம் சொல்லுகிறது. அது சரியா-? கடைசி காலங்களில் அது அவ்வாறு தான் இருக்கும். நாம் பெற்றிருக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். 34. இப்போது, மிரியாமும் மோசேயும் இஸ்ரவேலர்களும் ஜெயித்த போது, அவர்களது யாத்திரைக்கு தேவையான எல்லாவற்றையும் தருவதாக தேவன் வாக்களித்திருந்தார். கர்த்தர் ஒரு வாக்குத்தத்தம் செய்வாரானால் அதை நிறைவேற்றியும் வைப்பார். பார்வோன் என்ன சொன்னான் என்பதைக் குறித்து மோசே கவனம் செல்லுத்தவே இல்லை. அவனுடைய பெற்றோரும், பார்வோனின் கட்டளைக்கு பயப்படவே இல்லை. மோசேக்கும், ஆபிரகாமுக்கும் பழைய தீர்க்கத்தரிசிகளை பற்றி தெரியும். ஆபிரகாம்... போது. கர்த்தர் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்றுவார் என்பதை நன்கு அறிந்திருந்தான். ஆகையால் அவனுக்கு 75 வயது இருக்கும் போதும், சாராளுக்கு 65 வயதாய் இருக்கும் போது அவள் ஒரு குழந்தை பெற போகிறாள் என்று சொல்வதற்கு பயப்படவே இல்லை. மேலும் தான் நூறு வயதும், சாராள் தொண்ணூறு வயதாய் இருக்கும் போதும் கூட கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செய்து கொண்டே இன்னும் அதிகமாக உறுதியாக இருந்தான். 35. ஓ, நீங்கள் இந்த இரவு ஒரு வேளை ஜெபித்து, மறுநாள் காலையில் சுகம் பெறாவிட்டால், நீங்கள் சென்று கொண்டே என்ன சொல்வீர்கள். "நல்லது, நான் சொல்லவில்லையா, அதினால் ஒன்றுமே இல்லை" பாருங்கள்-? அந்தகாரத்தினால் தான் உங்களுக்கு எதுவுமே வாய்ப்பதில்லை. பாருங்கள்-? ஆனால் கர்த்தர் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் கொடுத்த பின்பு அவனை பார்க்கிறேன். சாராளுக்கு 65 வயதாகி, பெண்களுக்குரிய வழிபாடுகள் எல்லாம் முடிந்து 15 வருடங்களாகியும், அவள் சிறுவயதாய் இருக்கும் போதே அவளுடன் வாழ்ந்து கொண்டிருந்தது போல... கர்த்தர் அழைப்பதற்கு முன் இப்போது 75 வயதுள்ளவனாகியும் அப்படியே இருந்தான். ஏன் அவன் சென்று குழந்தைக்கு தேவையான பொருட்கள்... மற்றும் எல்லாவற்றையும் தயார் செய்தான்-? குழந்தை வந்து கொண்டிருக்கிறது. கர்த்தர் அப்படித் தான் சொன்னார். முதல் மாதம் கடந்து சென்றன, "அது பற்றி என்ன சாராள்-?" "ஒரு மாற்றமும் இல்லை". நல்லது, கர்த்தருக்கு ஸ்தோத்திரம், எப்படியாயினும் நாம் அதை பெற்றுக்கொள்வோம். பாருங்கள்-? இரண்டாவது மாதம் கடந்து சென்றது, "எப்படி உணருகிறாய் சாராள்-?" "ஒரு மாற்றமும் இல்லை" கர்த்தருக்கு ஸ்தோத்திரம், "எப்படியும் நமக்கு அது கிடைக்கத்தான் போகிறது." "ஏன்-?" "கர்த்தர் அப்படி சொல்லியிருக்கிறார்" மருத்துவர் என்ன சொல்லி இருப்பார் என்று கற்பனை பண்ணி பார்க்கிறேன். உங்களுக்கு ஒன்று தெரியுமா-? அந்த வயோதிபருக்கு கொஞ்சம் புத்தி கழண்டுள்ளது. அவருக்குள் ஏதோ தவறு இருக்கும் போல உள்ளது. அந்த மனிதனுக்கு 75-வயதாகிறது, சாராளுக்கோ 65 வயதாகிறது. மேலும், அவர் சொல்லுகிறார், "அவர்களுக்கு குழந்தை பிறக்குமாம்" வியூ, ஏதோ கோளாறு இருக்கும்." ஆனால் அது ஆபிரகாமை தடுமாற செய்யவே இல்லை. அவன் சொல்லி கொண்டே இருந்தான். கர்த்தர் தமது வாக்குத்தத்தை காப்பாற்றுவார், ஆகையால் எல்லாவற்றையும் தயாராக வைத்துக் கொள் சாராள். அது இங்கே இருக்கப்போகிறது பத்து வருடம் சென்று விட்டன. "அது பற்றி என்ன-?" "கர்த்தருக்கு ஸ்தோத்திரம், எப்படியும் நமக்கு கிடைக்கத் தான் போகிறது." 15 வருடம் கடந்து விட்டன, 20 வருடம், 25 வருடம், இன்னும் அதே விதமாகத்தான். "கர்த்தருக்கு ஸ்தோத்திரம், எப்படியும் நமக்கு கிடைத்தே ஆகும்." மேலும் வேதாகமம் சொல்கிறது, பலவீனம் ஆவதற்கு பதிலாக பலத்தின் மேல் பலவானாக காணப்பட்டார். ஆமென். காரணம் அது முதல் முறையாக நடக்கவில்லை. மேலும், கர்த்தரை அவருடைய வாக்குத்தத்தத்தில் எடுப்பதற்கு அந்த விதமான ஆவி உங்களில் இருந்தால் நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள் ஆவீர்கள். உங்களால் முடியாது என்றால், ஏன், நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள் அல்ல. காரணம் நமக்குள் அந்த விசுவாசம் உள்ள... ஆபிரகாமின் விசுவாசம் தான் நமக்குள் இருக்கிறது. மேலும் ஒரு நிபந்தனையும் இல்லாமல் ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும், அவர் வாக்குத்தத்தமும், உடன்படிக்கையும் கொடுத்துள்ளார். மற்றும், நீங்கள் கிறிஸ்துவுக்குள் மரித்திருந்தால் நீங்களும் ஆபிரகாமின் சந்ததி. நீங்கள், வாக்குத்தத்தத்தின் பிரகாரம் ஆபிரகாமின் வித்தை பெற்றவர்களாய் ஆபிரகாமின் சந்ததி ஆவீர்கள். நீங்கள் அதை பாருங்கள்-? ஆமென்.... (ஒலி நாடாவில் காலியிடம்-ஆசி) இப்போது பாருங்கள், (ஒலி நாடாவில் காலி இடம்_ஆசி)........நீங்கள் உங்களை ஆபிரகாமின் சந்ததி என்று கூறுகிறீர்களா-? கர்த்தரிடத்தில் கொஞ்சம் நெருக்கமாக வரவேண்டியதாய் உள்ளது. அது தான் அது. பழைய புத்தி கூர்மையில் இருந்து நீங்கள் மரிக்க வேண்டும். 36. அங்கு இரண்டு காரியங்கள் உண்டு. ஒரு நாள்.......-?......யாரோ ஒருவர் என்னிடம் கேட்டார் அவர் ஒரு சிறந்த சுவிஷேசகர். அவருடைய பெயரை நான் சொல்லமாட்டேன், உங்களுக்கு தெரியவரும். அவர் இந்த தேசத்தில் அனேக இடங்களை கடந்து, முன்னும் பின்னுமாக சென்று பெரிய அளவில் எழுப்புதல் கூட்டங்களை நடத்தின ஒரு அருமையான பிரசங்கி. ஆனால் அவர் அந்த ஜனங்களை என்ன சொல்ல வைத்தார். "நான் இப்போது கிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக ஏற்று கொள்கிறேன், நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன்." சாத்தானும் அதே விதமாக செய்து நடுங்குகிறான். அது சரியா. அது ஒரு அறிவைச் சார்ந்த ஒரு விசுவாசமாகும். ஒரு நிமிடம் உங்களோடு பேசட்டும். பரிசுத்த ஆவியானவர் ஏன் என்னை இன்னும் வார்த்தைக்குள் செல்ல அனுமதிக்கவில்லை என்று தெரியவில்லை. ஒரு வேளை அதுவும் ஒரு காரணத்தினால் தான் இருக்கும். 37. கவனியுங்கள். ஒரு அறிவுப்பிரகாரமான விசுவாசம் உண்டு. இன்னும் ஒரு விசுவாசம் இருதயத்திலிருந்து வருவதுண்டு. பல வருடங்களுக்கு முன்னாள் அந்த பழைய அவிசுவாசி சொன்னான். "ஒரு மனிதனின் இருதயத்திலிருந்து நினைப்பதை போல்...." என்று வேதாகமம் இவ்வாறு கூறியிருப்பதை பற்றி அவன் சொன்னான்" அது பைத்தியக்காரத்தனம். இருதயத்தில் இயற்கையான மனோ திறன் இல்லை. "நீங்கள் உங்கள் மனதுடன் சிந்தித்துப் பாருங்கள். இதயத்தில் மனோ திறன்கள் எதுவும் இல்லை” ஆனால் கடந்த ஆண்டு அது தவறு என்று கண்டு பிடித்தார்கள். தேவன் சரியாக இருக்கிறார். இருதயத்தின் ஆழத்திற்குள், இருதயத்தின் மத்தியில் ஒரு சிறிய வெற்று இடம் உண்டு, அதில் ஒரு இரத்த அனு கூட இல்லை. அது மிருகத்தின் இருதயத்தில் காணப்படவில்லை. மனித இருதயத்தில் மட்டும் தான் உண்டு. மேலும் அது ஆத்துமாவை நிறப்பக் கூடிய இடம் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆத்துமா இருதயத்தில் தான் வாழ்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, தேவன் சொன்னது சரி தான், "ஒரு மனிதன் தன் இதயத்தில் நினைப்பது போல்" என்று கூறினார். 38. சில காலத்திற்கு முன்பு இங்கே ஒரு முக்கியமான திருச்சபையைச் சேர்ந்த ஒரு பெண் வசித்து வந்தார். மேலும் இந்த சிறிய கதையை நான் உங்களுக்கு தருகிறேன். அவள்...நான்-அவளுடைய அனுபவத்தை நாங்கள் எப்போதும் சந்தேகித்தோம். அவள் சபையை சுற்றி வசித்து வந்தாள். அவள் ஒரு பியானோ கலைஞராக இருந்தாள். அவள் பியானோ வாசித்தாள், மற்றும் மிகவும் நல்ல பெண், ஆனால் அவளிடத்தில் அறிவு சார்ந்த விசுவாசம் இருந்தது. பாருங்கள்-? அவள் தன்னை நியாயப் படுத்திக் கொண்டு தான் சரியாக உள்ளாள் என்று கருதினாள். அங்கு தேவனோடு உண்மையான அனுபவம் கொண்ட ஒரு வயதான பையன் இருந்தான். அவர்களிருவரும் ஒருவரை ஒருவர் நேசித்து, பின்பு திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். அவள் தொடர்ந்து பியானோ வாசித்துக் கொண்டே இருந்தாள். கொஞ்ச நாட்கள் கழித்து, அவனுடைய வேலைக்கு மாற்றம் வந்தது. ஆகையால் அவர்கள் வேறொரு பட்டணத்திற்கு செல்ல வேண்டியதாக இருந்தது. இந்த பட்டணத்தில் அவள் இந்த குறிப்பிட்ட சபையில் பியோனா வாசிப்பவளாக, இருந்தாள். அது ஒரு பெரிய பிரசித்த பெற்ற ஸ்தாபன சபையாய், அந்த பட்டணத்தில் இருந்தது. அவள் நிரந்தரமாக பியோனா வாசிப்பவளாய் இருந்தாள். அவர்கள் அங்கு பியானோ வாசித்துக் கொண்டிருந்த போது, அதே தேவாலயத்தைச் சேர்ந்த பக்கத்து வீட்டுப் பெண்களை அவள் கவனிக்க ஆரம்பித்தாள். அவர்கள் அனைவரும் இந்த சிறிய அநாகரீகமான ஆடைகளை அணிந்துக் கொண்டு, வெளியே வந்து அந்த புல் மைதானத்தை புல்லை வெட்டிக் கொண்டு, இந்த சிறிய வயதானவர்களுடன்... பெண்களாகிய நீங்கள் அவ்வாறு செய்ய முற்படாதீர்கள் என்று சொல்ல தூண்டப்படுகிறேன். அவர்கள் இந்தியானாவில் கீழே உள்ள வீதியில் அதை செய்கிறார்கள். நீங்கள் அதை மிச்சிகனில் செய்வீர்கள் என்று நான் நினைக்கவில்லை. பாருங்கள்-? நீங்கள் அதிக சுய மரியாதையைப் பெற்றுள்ளீர்கள் என்று நான் நினைக்கிறேன், ஆனால் உங்கள் பிள்ளைகள் அத்தகைய ஆடைகளை அணிய அனுமதிக்க “அப்படிச் செய்வது தேவனுக்கு முன்பாக அருவருப்பானது” என்று வேதாகமம் சொல்லுகிறது. அவர்கள் வெளியே வந்து அந்த பகுதியில் புல்லை வெட்டுகிறார்கள். அவள் நினைத்தாள், “சரி, என்னால் அதைச் செய்ய முடியும். உங்களுக்குத் தெரியும்........” மேலும் அவர்கள் _ அவர்கள் வெளிய சென்று அந்த பகுதியை புல் வெட்டுகின்றனர். அவள் நினைத்தாள் "நல்லது, நானும் கூட அவ்வாறே செய்வேன். உங்களுக்கு தெரியுமா..........." "மற்ற பிள்ளைகள் செய்கின்றனர்." "ஏனென்றால் ஏன்-?" "பெண்கள் செய்கின்றனர்." 39. இப்பொழுது, பார், அது என்ன-? தேவன் மீதான அவளுடைய விசுவாசம் அறிவுப்பூர்வமாக இருந்தது. அது காரணங்களை கொடுக்கிறது. உங்கள் மனம் பகுத்தறியும், ஆனால் உங்கள் இதயம் பகுத்தறிவதில்லை. கர்த்தர் சொன்னது உண்மை என்று உங்கள் இதயம் நம்புகிறது. உங்கள் மனம் சொன்னது, “இப்போது, மற்ற பெண்களால் முடிந்தால் அல்லது மற்ற பையன்கள் அதைச் செய்தால், அவர்கள் தேவாலயத்துக்கு செய்கின்றார்கள், நான் அவர்களைப் போல் நல்லவள் அல்லவா-? அவர்கள் செய்யும் அதே செயல்களை என்னால் செய்ய முடியாதா-?” ஏனென்றால் அவள் தன்னை நியாயப் படுத்திக் கொண்டு தான் சரியாக உள்ளாள் என்று கருதினாள். ஆனால், அது கர்த்தருடைய வார்த்தைக்கு முரணாக இருந்தால், அதற்கு முரணாக இருக்கும் வரை நாம் காரணங்களைத் தூக்கி எறிய வேண்டும். சரி, அவள் மேலே சென்றாள், அது அப்படியே இருந்தது, சிறிது நேரம் கழித்து, மற்றவர்கள் அனைவரும் சிகரெட் புகைத்தார்கள், அதனால் அவளால் ஏன் முடியவில்லை-? சரி, மற்ற அனைவரும் தேவாலயத்திற்குச் சென்றனர். 40. நிச்சயமாக, மிச்சிகன் பெண்கள் நீங்கள் அவ்வாறு செய்ய மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும், நீங்கள் செய்வீர்கள் என்று நான் நம்பவில்லை. ஆனால், அவள் அதைச் செய்தாள்: சிகரெட் புகைத்தது, பெண்கள் செய்யாத கேவலமான காரியம். அது சரி. மேலும் அவள் செய்ததில் மிகவும் மோசமான காரியம். பதினெட்டு சதவிகிதம், அதாவது பதினெட்டு மாதங்களுக்கு முன்பே அவர்களின் குழந்தைகள், தொண்ணூறு சதவிகிதம் பேர் இறந்து விடுகிறார்கள், பால் குடிக்கிற குழந்தைகளுக்கு ஆடு மாடுகள் மூலமாக செயற்கை பால் கொடுக்கின்றனர். அது தெரியுமா, நிகோடின் விஷம். அடுத்த தலைமுறையில் நாம் எதைப் பெறப் போகிறோம்-? ரஷ்யா இங்கு வந்து எதையாவது செய்து விடும் என்று பயப்பட வேண்டாம். அதை காயப்படுத்துவது ஆப்பிளைக் குத்திக் கொள்ளும் ராபின் பறவை அல்ல; அது மையத்தில் இருக்கும் புழு. நமது சொந்த அழுகிய காரியங்களே இந்த தேசத்தைக் கொன்று கொண்டு இருக்கிறது. அது நம்முடைய சொந்த ஒழுக்கம். இது மற்ற நாடுகளில் இல்லை. அது... நம்முடைய ஒழுக்கக்கேடான வாழ்க்கை மற்றும் பொருள்கள் மூலம் நம்மை நாமே கொன்று நம்மை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்கிறோம். நமக்கு ஐயோ-! அது சரி தான். நீ ஒழுங்காக சுவிஷேசத்துக்கு செவிக் கொடுத்து, இயேசு கிறிஸ்துவுக்கு செவி கொடுத்து உன்னுடைய இருதயத்தை தேவனோடு சரிபடுத்திக் கொள்ளுங்கள். 41. கவனியுங்கள். மேலும் இந்த பெண்... அதற்கு பிற்பாடு அந்த சுற்று வட்டாரத்தில் ஒரு சிறிய முடியை தொங்க விட்டுக் கொண்டு இருக்கும் ஒரு ஏமாற்றுக்காரன் அங்கே சுற்றுவதை கண்டு அவள் ஒரு அழகான பையன் என்று கருதினாள். மேலும் உங்களுக்கு தெரியுமா, அது ஒரு சிறிய அப்பாவிதனமாக தோன்றியது. ஒவ்வொரு இரவும், படுக்கைக்கு செல்லும் முன்பு, அவள் பின்புறம் பொருட்கள் எடுப்பதற்கு செல்வது போல் தந்திரமாக சென்று, அவன் நள்ளிரவு என்று வாழ்த்தி அவளை வேலியினூடாக முத்தமிடுவான். ஓ, அது ரொம்ப அப்பாவி தனமாக இருந்தது. பாவம் தொடக்கத்தில் ரொம்ப அப்பாவி தனமாகத்தான் பார்வைக்கு இருக்கும். ஓ அதில் ஒன்றுமே, இல்லை, பக்கத்து வீட்டுக்காரன் தான். உங்களுக்குத் தெரிந்த முதல் விஷயம் என்னவென்றால், அவள் ஜான், தன் கணவனை விட்டு விட்டு, இந்த பையனை மணந்தாள். அவருக்கு ஒரு மனைவி மற்றும் குழந்தை இருந்தது, ஒரு வீட்டை உடைத்தார். சரி, தேவாலயத்தில் இரண்டாவது கணவனைக் கொண்ட மற்ற பெண்கள் இருப்பதாக அவள் வாதிட்டாள், அவளால் ஏன் முடியவில்லை-? அது பகுத்தறிவு, ஆனால் அது தவறு என்று வார்த்தை கூறுகிறது. அது தவறு என்று அவளிடம் சொல்லும் ஆத்துமா, அவள் அதை துக்கப்படுத்திக் கொண்டிருந்தாள். மேலும், “பாவம் செய்யும் ஆத்துமா சாகும்” என்று வேதாகமம் சொல்லுகிறது. மேலும் பாவம் என்றால் என்ன-? அவிசுவாசம். இரண்டு விஷயங்கள் மட்டுமே உள்ளன. அது தான் விசுவாசம் மற்றும் அவிசுவாசம். 42. சமீப காலத்தில் நான் ஒரு புகழ் பெற்ற ஆலயத்தில் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். நான் "புகை பிடிப்பது பாவமல்ல, விபச்சாரம் செய்வது பாவமல்ல, பொய் சொல்லுவது பாவமல்ல" என்று சொன்னேன். ஒரு பெண்மணி நேரே என் முகத்தை பார்த்துச் சொன்னாள் "அப்போது பாவம் என்றால் என்ன-?". நான், "அவிசுவாசம்." நான் சொன்னேன், "புகை பிடிப்பது, குடிப்பது, மேலும் குடித்து விட்டு அங்கும் இங்கும் ஓடுவது உங்களுடைய அவிசுவாசத்தின் அறிகுறிகளும், தன்மைகளுமே." என்று சொன்னேன். நீங்கள் இயேசுவை விசுவாசியாமல் போவதால் தான் அதை செய்கிறீர்கள். இயேசு சொன்னார், "என் வார்தைகளை கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு." 43. நீ ஒரு விசுவாசி என்று சொல்லி, அதை செய்தால், உன்னிடத்தில் ஏதோ ஒரு தவறு இருப்பதாக அது காட்டுகிறது. நீ அதை நம்புவதில்லை. நீ நம்புவதை போல காட்டுகிறாய். நீ காரணங்களை எடுத்துக் கொண்டு உன்னுடைய ஆத்துமா என்ன உறுதியாக செல்லுகிறதோ அதை நீ எடுப்பதில்லை, ஏனென்றால் உன்னுடைய ஆத்மா தேவனுடைய ஒரு பகுதியாக இருக்கிறது. அது தான் உன்னில் இருக்கிறது. அது கர்த்தருடைய வார்த்தையை உண்மையாக இருப்பதால் அதை ஏற்றுக்கொள்ளும் இல்லை என்றால் நீ உன்னுடைய சுய அறிவாண்மையை எடுத்துக் கொள்வாய். நீ யோசி. 44. அவள் அப்படியே, அந்த ஏமாற்றுபவனோடு தொடர்ந்து சென்றுக் கொண்டிருந்தாள். அவளுக்கு புத்தி இருந்திருந்தால், ஒரு மனைவியை விட்டு ஒடுபவன், மற்றுமொரு மனைவியோடு ஓடுவான் என்று அவளுக்கு தெரிந்திருக்க வேண்டும். அதனால் அவன் அதை தான் செய்தான். அவள் மிகவும் சிறுமையடைந்தாள். அவள் தொடர்ந்து சபைக்கு சென்றுக் கொண்டிருந்தாள், தொடர்ந்து பியானோ வாசிக்கவும், பொது சட்ட கணவனோடே வாழ்ந்து கொண்டு இருந்தாள். ஆனால் பாவம் அவளை பிடித்துக் கொண்டது. அது உங்களை பிடிக்காது என்று நீங்கள் நினைக்கிறீர்களா-? அது கண்டிப்பாக உங்களைப் பிடித்துக் கொள்ளும். உங்கள் பாவங்களே உங்களை தொடர்ந்து பிடிக்கும். மேலும் கொஞ்ச நாட்களுக்கு பிறகு அவளுக்கு கீழ் பகுதியில் வலி எடுக்க ஆரம்பித்து விட்டது. அவள் அதை கொஞ்ச நாட்களுக்கு அப்படியே விட்டு விட்டாள். டாக்டரிடம் சென்று அது என்னவென்று கண்டு பிடிக்கும் போது, அது மிகவும் முதிர்ந்த நிலை புற்று நோய் என்று கண்டறிந்தாள். ஒன்றுமே செய்ய முடியாத நிலை, மரணம் மட்டும் தான் அதன் முடிவு. நமது ஆலயத்தின் போதகராக அவர் இருந்தார், ஒரு பக்தி உள்ள மனிதன், ஆஸ்பரி காலேஜிலிருந்து வெளியே வந்தவர்..... இப்போது, அவள் ஒரு மெத்தோடிஸ்ட் ஆக இருந்தாள். எல்லாம் சரி, ஆனால் அவர் நம் ஆலயத்தில் ஒரு நல்ல சிறந்த வாலிபனாக, பரிசுத்த ஆவியை பெற்ற ஒரு நல்ல சிறந்த மனிதனாக இருந்தார். இவர் அந்த பெண்மணி இடம் பேசுவதற்காக சென்றார், காரணம் அவள் ஒரு மெதடிஸ்ட்டாக வளர்க்கப்பட்டாள். ஆகையால் அவர் அவளிடம் பேச வேண்டிய கட்டாயம் அவர் எண்ணத்தில் உருவானது. அவருடைய நண்பர்களால் அவளிடம் பேசுவதற்கு அவர் அனுப்பப்பட்டார். மேலும் அவள் அவரிடம், தான் மற்றவர்கள் நன்றாக இருப்பது போல் தானும் இருப்பதாக தெரிவித்தாள். அவள் அதை நம்பினாள், அறிவுபூர்வமாக நியாயப்படுத்தினாள். ஏன்-? "நான் ஆலயத்துக்கு சொந்தமானவள், என்னுடைய கடிதம் அங்கு தான் இருக்கிறது நான் மற்ற எல்லாரையும் போலவும் நன்றாகத்தான் இருக்கிறேன் என்று சொல்லி, "உங்களைப் போலவே நானும் நல்லவளாகத் தான் இருக்கிறேன்" என்றாள் அவர், அது கேள்வி அல்ல பெண்ணே. "நான் ஒரு போதகர், நீயும் அங்கு உட்க்கார்ந்து கொண்டு சிகரெட்டை புகை பிடித்துக் கொண்டே இருக்கிறாய், மேலும் அது போன்ற காரியங்களும் செய்கிறாய், நாம் அதைப் போன்ற காரியங்களை நம்புவதே இல்லை" என்று சொன்னார். அவள் சொன்னாள், "ஒரு போதும் அது உன்னுடைய வேலையே இல்லை. அல்ல, நீ என்னிடம் வருவதற்கு நான் உம்மை அழைக்கவே இல்லை". அவர் சொன்னார், "ஆமாம், ஆனால் தேவன் என்னை உம்மிடம் செல்வதற்கு அனுப்புவதாக எனக்கு தோன்றினது." அவள் சொன்னாள்.... சொன்னாள் "இந்த பொது கணவன் சட்டத்தை பற்றி என்ன-?" என்று கேட்டாள் அவள் சொன்னாள், அது உன்னுடைய வேலையே இல்லை, உங்களைப் போன்ற மற்றவர்களைப் போலவே நானும் நன்றாகத் தான் இருக்கிறேன். நான் ஒரு கிறிஸ்தவள். மேலும் அதை அவள் நம்பினாள். நீங்களும் ஒரு பொய்யை நம்பி, அதனால் நாசமாக போகலாம். வேதாகமம்.. அது சரியாக உள்ளது. 45. "ஒரு மனிதனுக்கு அவன் செல்லும் வழி செம்மையாக தோன்றும், ஆனால் அதின் முடிவோ மரணம்." அது அறிவார்ந்த காரணத்தால் சரியாக தோன்றும். உன்னுடைய ஆத்துமா மறுபடியும் பிறந்திருந்தால், கர்த்தருடைய வார்த்தைக்கு எப்பொழுதுமே சாட்சி கொடுக்கும். உனக்கு ஒரு வேளை அறிவார்ந்த விசுவாசம் இருக்குமேயானால், ஓ, நீங்கள் கண்டிப்பாக, "அந்த வேதாகமம் சரிதான்." என்று அதை ஏற்றுக் கொண்டு சொல்வீர்கள். பிசாசும், அதையே தான் சொல்லுவான். சாத்தான் சொல்லுவான், "பரலோகத்தில் ஒரு தேவன் உண்டு. அங்கே ஒரு இயேசு கிறிஸ்து உண்டு." நிச்சயமாக அதே தான் அவர்கள் நம்புகிறார்கள். ஓ, நீங்கள் "சாத்தான் இயேசு கிறிஸ்துவை நம்புகிறான்-?" என்று சொல்லுகிறீர்கள். நிச்சயமாக. அவைகள் பொது மக்கள் மத்தியிலேயே அவரை அறிக்கையிட்டன, "நீரே தேவகுமாரன். நீரே கிறிஸ்து, அந்த பரிசுத்தர். எங்கள் நேரம் வருவதற்கு முன்னால் ஏன் எங்களை துன்பப்படுத்த வருகிறீர்" நிச்சயமாக, அவைகள் இயேசு கிறிஸ்துவே தேவ குமாரன் என்று பொதுவாகவே அறிக்கையிட்டன. மேலும் அந்த பிரசங்கிமார்கள், ஆழமில்லா அனுபவதோடு ஒரு போலி மதத்தை பிரசங்கித்து, ஈரமில்லா கண்களோடு அது போல அறிக்கை செய்யும்படி ஒரு கூட்ட மக்களை வைத்துக் கொண்டு, உலகத்துக்குள்ளே சென்று, உலகபிரகாரமாகவே வாழ்ந்து தாங்கள் கிறிஸ்தவர்கள் என்று உரிமை கோருகின்றனர். 46. சகோதரனே, அந்த காரியம் போலவே, அனேகர் மரணப்படுக்கையில் அறிக்கை செய்பவர்களை தடுக்கும் பாசாங்கம் செய்யும் ஊழியர்கள் போலவே உள்ளது. ஓ அவள் நினைத்தாள், அவள் சரியாக இருப்பதாக. ஆனால் மரணம் ஏற்படும் நேரம் வந்தபோதோ, ஒரு பின்வாங்கிய போதகர் கூட சுற்றி வந்து........அவள் எல்லாவற்றிலும் சரியாகத்தான் இருந்தாள். நிச்சயமாகவே அவள் சபையில் ஒரு நல்ல உறுப்பினர் ஆவாள். மேலும் சபைக்கு பணத்தை செலுத்தி வந்தாள். அவள் சபையில், பியோனாவை சிறப்பாக வாசிப்பவள். மேலும் அவளால் இன்னும் என்ன செய்ய முடியும்-? அறிவுபூர்வமாக அவள் சரியாத் தான் இருக்கிறாள் என்று அவள் நினைத்தாள். ஆனால் ஒரு கட்டத்திற்கு வரும் போது ....... நீங்கள் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள், உங்கள் உள்ளம் ஆனது இரத்த அனுக்களாலும், மூளை செல்கள் ஆகியவைகளாலும் ஆளுகை செய்யப்படுகிறது. மேலும் மூளை செல்களுக்கு இரத்தம் செல்வது நிறுத்தப்பட்டால், அதற்கு பிறகு அந்த உள்ளம்..... முடங்கும். பின் அந்த அறிவான்மையுடைய பகுதி அந்த பெண்மணியினிடம் இருந்து மரித்து போகும். அது மரிக்க துவங்கும் போது, அவள் பார்க்கத் துவங்குவாள், அந்த... போது, கீழே இந்த.... இருதயத்திலுள்ள ஆவியானது அதாவது, அது அவளுடைய ஆத்துமாவாகும், அது தேவனை நோக்கி சென்றுக் கொண்டிருக்கும்... மரணம் என்றால் பிரிவு என்று அர்த்தமாகும். மேலும் உங்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட்ட பிறகும் நீங்கள் பாவத்தை செய்து, வேன்டும் என்றே அவிசுவாசிதால் உங்களுடைய ஆத்துமத்தின் தன்மையானது படிப்படியாக உங்களிடமிருந்து பிரிந்து போய் விடும். அதற்கு பிறகு அதை உங்களால் உணர்ந்துக் கொள்ளவே முடியாது. உங்களை விட்டே எடுபடும். உங்களுக்கு அது தெரியவே செய்யாது. 47. நீங்கள், "நல்லது எனக்கு தெரியும், நான் சரியானதை தான் நம்புகிறேன் என்று சொல்லலாம்." இந்த காரியம் தான், இந்த இரவு, மிச்சிகனுடைய காரியமாக இருக்கிறது. இந்த காரியம் தான், இந்த இரவு இந்தியானாவுடைய காரியமாய் இருக்கிறது, இந்த காரியம் தான் இந்த இரவு உலகத்தினுடைய காரியமாய் இருக்கிறது. அவர்கள் அந்த ஆள் மாறாட்டம் செய்யப்பட்ட கிறிஸ்துவத்தை, அந்த சிறிய ஹாலிவுட் பாணியில் அடைக்கப்பட்டு உறங்க வைக்கப்பட்டுள்ளனர். நமக்கோ பாவிகளுக்கு நரகமும், "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால், தேவனுடைய இராஜியத்ததில் பிரவேசிக்க மாட்டான்" என்பதையும், பீடத்தின் முன் உண்மையை பிரசங்கிக்கும் அந்த பழைய மாதிரியான நரக நெருப்பு போல கந்தகம் வீசும் பிரசங்கிமார்கள் தான் தேவை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஊழியமானது குருடருக்கும் செவிடருக்கும், ஊமையருக்கும், மரித்தவர்கள் கூட தங்கள் கல்லறையில் இருந்து எழும்பும்படியான ஒரு அர்ப்பணிக்கப்பட்ட ஊழியமாக இருந்தது என்பதை நீங்கள் நம்புகிறீர்களா-? ஞாபகம் கொள்ளுங்கள், நாம் கர்த்தரை குறித்ததான ஒரு தெளிவான விளக்கம் நமக்கு இருக்க வேண்டும், இல்லை என்றால் அந்த காரியங்கள் நடக்கவே முடியாது. அது எது தப்பு எது சரி என்று சொல்லக்கூடிய ஒரு தெய்வீக சுகம் அளிப்பதின் காட்சியாகும். வேதாகமம் அப்படித் தான் சொல்லுகிறது. அது யந்நேயும் யம்பிரேயும் சம்பவத்தில் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. மந்திரவாதிகள் அற்புதங்களை செய்ய முடியும், ஆனால் அவர்களுக்கு சுகம் அளிக்க முடியாது. கர்த்தர் ஒருவர் மட்டும் தான் சுகத்தை அளிக்க முடியும். நானே உன் பரிகாரியாக கர்த்தர், நானே உன் கர்த்தர் உன் வியாதியிலிருந்து உன்னை சுகமாக்குபவர். 48. இன்றைக்கு ஜனங்கள் சொல்வது என்னவென்றால், ஒ-! அந்த சுகமாக்கும் நாட்கள் கடந்து விட்டது. இப்பொழுது அதைப்பற்றி ஒன்றும் இல்லை. ஒரு கூட்ட பரிசுத்த உருளைகள், அல்லது ஒரு கூட்ட ஏமாற்றுக்காரர்கள் இருக்கிறார்கள்... மேலும் அது போல. மேலும், அது பரிசுத்த ஆவியை நிந்திப்பதாக உள்ளது, என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். அது சரி தானே. உங்களுக்கு முதலாவது என்ன நடக்கும் என்று தெரியுமா-? உங்களுடைய ஆத்துமா உங்களை விட்டு சென்று விடும். அந்தத் தவறான உபதேசம் செய்பவர்களோடு கூட நீங்களும் சேர்ந்து கொண்டு, அவ்வளவு தவறாக உபதேசித்து, மேலும் மரணம் உங்களை முறைத்து பார்க்கும் நேரம் வரைக்கும், நீங்கள் சரியாக இருக்கிறீர்கள் என்று நீங்கள் நினைத்து அது போன்ற காரியங்களை செய்வீர்கள். ஆனால் அது வேறு ஒரு காரியம் ஆகிவிடும். நான் அப்பேர்பட்ட அனேகர் படுக்கையின் அருகில் நின்றிருக்கிறேன். அதோ அவள் அங்கு படுத்துக் கொண்டிருக்கிறாள். அவள் தான் சரியாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறாள். 15 நிமிடங்கள் அவள் மரிப்பதற்கு முன்பாக ஒரு சிகரெட்டை புகை பிடித்துக் கொண்டு அவள் சொன்னாள் "இதெல்லாம் பரவாயில்லை, அந்த சிறிய பழைய கெட்ட மாம்சீக பழக்கம் தான்" ஆனால் நான் உங்களுக்கு சொல்கிறேன், சகோதரனே, ஒரு மரம் தன்னில் உள்ள கனிகளை பொறுத்து, அறியப்படும். அவள் எதையுமே நம்பவில்லை, அவள் சொன்னால் "மருத்துவர்களால் எனக்கு உதவி செய்ய முடியாவிட்டால், இந்த பரிசுத்த உருளையான ஏதோ போதகர் எனக்கு ஏதாவது செய்ய கூடுமோ-? அதனால் ஏதாவது பிரயோஜனம் உண்டோ-?" ஓ தேவனே, கிருபையாயிரும். இந்த மாதிரியான அபிப்ராயம் தான் ஆயிரக்கணக்கான மக்களிடம், இந்த இரவு இந்த தேசத்தில் இருக்கிறது. ஆமாம் லட்சக்கணக்கில் லட்சம். 49. மேலும் அங்கே, அவள் அந்த நிலையில் இருக்கும் போது, அவளுடைய அறிவாண்மை செயலிழக்க ஆரம்பித்துவிட்டது, அந்த காரணம் கேட்பது நின்று விட்டது. அவள் தலையில் இருந்த தேவனிடம் உள்ள அந்த அறிவு சார்ந்த விசுவாசமும் குறைந்து விட்டது. பின், அந்த வேதனைபடுத்தப்பட்ட ஆத்துமா அருகில் வர அவள் சொன்னாள்," என் தேவனே, நான் இழக்கப்பட்டு விட்டேன், நான் இழக்கப்பட்டு விட்டேன்-!" மேலும் அவளுடைய போதகர் சொன்னார், " ஓ, அவள்........." அவள் சொன்னாள் "நீ ஏமாற்றுக்காரனே, நான் இழக்கபட்டு விட்டேன்-!" அவர் சொன்னார், "மருத்துவரே, மருத்துவரே, இங்கே வாருங்கள். அவள் அவள் பதட்டத்தோடு இருக்கிறாள். அவள், அவள் நரம்பு தளர்ச்சியால் அவதிபடுகிறாள். ஒரு ஊசி அவள் கரத்தில் போடுங்கள்" ஒரு ஊசி போட்ட பிறகு அவள் சொன்னாள் "நான் இழக்கப்பட்டு விட்டேன்-! நான் இழக்கப்பட்டு விட்டேன்-! மற்றும் ஒரு ஊசி. "நான் இழக்க........நான் இழ........"மேலும் அந்த ஊசி அவள் உதட்டை நின்று போக செய்தது. ஆனால் அது அந்த ஆத்மாவை நிறுத்தவே முடியாது. நீ நித்தியம் முழுவதும் வேதனைபட்டவளாய் தேவனுடைய வார்த்தையைத் அவிசுவாசித்து, உன்னுடைய அறிவுசார்ந்த உள்ளத்தில், உன்னுடைய காரணங்களால் நீ உன்னையே நம்பி உன் மனதில் நீ சரியாக உள்ளாய் என்று நம்பினாய். ஆனால் நீயோ தவறாகவே உள்ளாய். தேவனுடைய வார்த்தையை அவிசுவாசித்து, உன்னுடைய அறிவு சார்ந்த உள்ளத்தில் நீ உன்னை நியாயப்படுத்திக் கொண்டு நீ சரியாகத் தான் இருக்கிறாய் என்று நம்பினாய், ஆனால் நீ தவறாகத் தான் இருந்ததாய். இதினிமித்தம் நீ நித்தியம் முழுவதும் இருப்பாய். ஏனென்றால் உன் ஆத்துமா மரிப்பதில்லை. கிறிஸ்தவத்தைப் பற்றி பிரசிங்கிக்கிற லட்சாதி லட்ச ஜனங்கள் இப்படித் தான் இருக்கிறார்கள். தேவனிடத்தில் செல்வதற்கு முதல் படி எப்படி எடுத்து வைக்க வேண்டும் என்று அவர்களுக்கு தெரியவில்லை. ஆமென். 50. நான் உங்களை பயப்படுத்த முயற்சிக்கவில்லை. நான் உங்களுக்கு இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை மட்டும் தான் பிரசங்கிக்கிறேன். மேலும் அது இதனால்... என்று எனக்கு தெரியும். உங்களுக்கும் தெரியும். வேதாகமம் அது தான் சொல்லுகிறது இயேசு சொன்னார், "ஒருவன் ஜலத்தினாலும், ஆவினாலும் பிறவா விட்டால், தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கவே முடியாது. அவன் எந்த சபையை சார்ந்தவனாக இருந்தாலும், எவ்வளவு நல்லவனாக வாழ்ந்தாலும், அல்லது எந்த உத்தியோகத்தில் அவன் இருந்தாலும், அவன் மறுபடியும் பிறந்தாக வேண்டும். அந்த அறிவார்ந்த காரியங்கள் அவனை விட்டு வெளியே வர வேண்டும். மேலும் கிறிஸ்துவுக்குள் ஒரு புது சிஷ்டியாகவும், ஒரு புதிய ஆன்மாவை பெற்ற இருதயத்தை உடையவனாக இருக்க அது வேரூன்ற செய்ய வேண்டும். மேலும் அது அவனை தேவனுடைய வார்த்தையை ஒவ்வொரு நேரமும் நம்ப செய்து, அது உண்மை என்று கூறும். 51. உங்களுடைய போதகர், "அற்புதத்தின் நாட்கள் முடிவடைந்து விட்டது, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்ற ஒன்று கிடையவே கிடையாது" என்று உங்களிடம் சில வேளை சொல்லலாம். அவர், அவரே மரித்து விட்டார். அது சரி தானே. அதாவது அவர்கள் ஒளியின் தூதர்களாக மாறிவிடுவார்கள் என்று வேதாகமம் சொல்லவில்லையா-? அது தான் ஏவாள், சாத்தானால் வஞ்சிக்கப்பட்ட போது எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்கள் தேவர்களைப் போல ஆவார்கள். ஆனால் அதன் வல்லமையை மறுத்து விடுவார்கள் என்று அவன் சொல்லவில்லையா. அப்படிப்பட்டவைகளில் இருந்து திரும்புங்கள். 52. சுவிசேஷமானது அதன் எளிமையில் உள்ளது. அது சுவிசேஷமாய் இருக்கும் பட்சத்தில் அது இயேசுவின் வல்லமையாய் இருக்கிறது. கர்த்தர் உங்களில் ஜீவித்து கொண்டிருந்தால், அந்த மகிமையின் நம்பிக்கையானது உங்கள் இருதயத்தில் உண்டாகி கர்த்தருடைய வார்த்தையை ஒவ்வொரு நேரமும் அது சரி என்று ஒப்புக் கொள்ள சொல்லும். ஆனால் அந்த பிசாசானவன் மிகவும் பக்திக்குரியவனாக, "நீர் தேவனுடைய குமாரனானால் ஒரு அற்புதத்தை எனக்கு முன்பாகவே செய், அதை என் கண்களால் நான் பார்க்கட்டும்." என்று இயேசுவிடம் சொன்னான். இயேசு, "மனிதன் அப்பத்தினால் மாத்திரம் பிழைப்பான் என்று சொல்லவில்லை" என்று எழுதி இருக்கிறதே என்று சொன்னார். அவர் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது, "நீ தேவனுடைய குமாரனானால்" என்ன என்றான்-? அதே ஆவி, அந்த அறிவார்ந்த போதகர்கள் மூலமாக, அறிவுக்கூர்ந்த பேச்சுகளால் மறுதலித்தது. சபை தான் அவரை சிலுவையில் அறைந்தது, சபைதான் அவரை கொன்றது, சட்டத்திற்கு ஊழியம் செய்யும் அறிவார்ந்த சுவிஷேசகர்கள் அதை செய்தனர். அது சரி தானே. அவர்கள் அவரைக் கொன்று; சிலுவையில் தொங்க வைத்தனர். அன்று பக்திமானாய் இருந்த அந்த ஜனங்கள், இயேசுவை கொன்றனர். இது தான் இன்று சபையை கொல்கிறது, அன்றைய மதவாதிகள் இயேசுவைக் கொன்றார்கள். அது தான், நாட்டின் மதவாதிகள், அவர்களின் வழிபாட்டு முறைகள் மூலம் இன்று தேவாலயத்தைக் கொன்று கொண்டு இருக்கிறது. நீங்கள் சொல்வது வழிபாட்டு முறைகள் அல்ல. பல சமயங்களில் குருதியற்ற, மற்றும் இதயமற்ற, மற்றும் எல்லாவற்றையும் கொண்ட ஒரு சில வழிபாட்டு முறைகள் நமக்கு கிடைத்துள்ளன. நிச்சயமாக, அது சரி தானே. ஆனால் சில சிறந்த அறிவு சார்ந்த மனோதத்துவ ஆசிரியர்கள் சபைக்குள்ளாக இருந்து சொல்லிக் கொண்டு திரிவது என்னவென்றால், "நல்லது, நீங்கள் அதை நம்புங்கள். அதெல்லாம் அங்கு இருக்கட்டும். உங்கள் பெயரை மட்டும் அந்த புத்தகத்தில் செலுத்திவிட்டு ஜீவியுங்கள்." 53. ஓ, மனிதனே, உன்னுடைய காரியம் என்ன-? நீ கர்த்தருடைய பிள்ளையாய் இருப்பாய் என்றால், உன்னுடைய ஆவி சொல்லும் "கர்த்தருடைய வார்த்தை சரியாக தான் இருக்கிறது" மேலும் நீ அந்த வார்த்தைக்கு ஒத்தவாறு வாழ்ந்து, அது சரி என்று நிரூபிப்பாய். மேலும் இயேசு, "என்னை விசுவாசிப்பவர்களுக்கு இந்த காரியங்கள் பின் தொடரும் என்று சொன்னார்." அது சரியா-? "என்னுடைய நாமத்திலே பேய்களை துரத்துவார்கள், வியாதியஸ்தர்களை குணமாக்குவார்கள், மேலும் அது போன்ற காரியங்களை செய்வார்கள் என்று சொன்னார்." இன்றைக்கு, அவர்கள்... என்று நீங்கள் "அற்புதத்தின் நாட்கள் முடிவடைந்தது." பாருங்கள்-! நீங்கள் எங்கு வாழ்ந்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்லுகிறீர்கள். அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள். அறிவார்ந்த காரியங்கள் மீது சார்ந்து இராதேயுங்கள். கர்த்தரோடு ஒரு அனுபவத்தை பெற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய அனுபவம் இந்த வேதத்தோடு ஓத்து போனால், “ஒவ்வொரு வார்த்தையும் உண்மை” "நீர் யெகோவா" என்று அது சொல்லும். மேலும் என்னுடைய ஆவி அவருடைய ஆவியோடு இனங்கி இருக்கிறது என்று சாட்சி பகரும் என்றால் நாம் கர்த்தருடைய புதல்வர்களும், புதல்விகளும் ஆவோம். நாம் மரணத்திலிருந்து ஜீவனுக்குள் கடந்து விட்டோம். இது உண்மை. 54. இப்போது கவனியுங்கள், அந்த ஜனங்கள் சற்று... அவர்களுக்கு சாப்பிடுவதற்கு மன்னா கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் கானானுக்குள் பிரவேசிக்கும் வரைக்கும், பிரயாணத்தில், அவர்கள் வாழ்வதற்கு மன்னா உணவாக கொடுக்கப்பட்டிருந்தது. அவர்களது பிரயாணம் மூன்று கட்டத்தில் இருந்தது. பாவத்தில் இஸ்ரவேலர்கள் எகிப்தில் இருந்தது; இங்கே இஸ்ரவேலர்கள் ரத்தத்தின் மூலமாக நியாயந்தீர்க்கப்பட்டது, அதாவது, சிவந்த சமுத்திரம்; மேலும் பாலஸ்தீனத்தில் இஸ்ரவேலர்கள் தரித்திருந்தது. இன்றும் மூன்று கட்டங்களாக நம்ம பிரயாணம் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதே விதமாக, மேலும் நாம் இங்கே பிரயாணத்தின் கடைசி கட்டத்துக்குள் நாம் உள்ளே நுழைகிறோம். வாழ்வதற்கு தேவையான எல்லாவற்றையும் கொடுப்பதாக தேவன் வாக்களித்திருந்தார். அங்கு செல்வதற்கு இறைச்சி... மேலும் வானத்திலிருந்து மன்னா, இது பரிசுத்த ஆவிக்கு அடையாளம். மேலும் அந்த மன்னா கீழே விழும்போது அந்த ஜனங்கள் வெளியே சென்று, அந்த மன்னாவை புசித்தனர், அதை நன்றாக அரைத்து, சிறிய கேக் போல செய்து அதை அவர்கள் உண்டனர். மேலும் அது தேன், தேனை போல நன்றாக சுவையாக இருந்தது. தரையின் மீது சிறிய பனித் துளிகளைப் போல இருந்தது. மேலும் அவர்கள் அதை நன்றாக அரைத்து அதில் அப்பங்களை சுட்டனர். அந்த வனாந்திர பயணத்தால் அவர்கள் வாழ்வதற்கு அது போதுமானதாக இருந்தது. அந்த பெந்தகோஸ்தே நாளில், பரிசுத்த ஆவியானவர் கீழே விழுந்தது ஒரு அழகான மாதிரியாக இருக்கிறது. அது தான் நம்முடைய அப்பம். அவர்களின் முதல் நாள் பிரயாணத்தில் அந்த மன்னா எப்படி கீழே விழுந்ததோ, அதே போல அவர்களுடைய பிரயாணத்தின் கடைசி நாளிலும் அந்த மன்னா அப்படியே கீழே விழுந்தது. மேலும் அவர்கள் பிரயாணம் முழுவதும் அது விழுந்தது. கர்த்தர் கொடுத்த அந்த பரிசுத்த ஆவியானவரை, சபையை விட்டு வெளியே எடுப்பதாக எங்கேயாவது இருக்கிறதா என்று மனிதன் எனக்கு காட்ட வேண்டும் என்று விருப்பப்படுகிறேன். நான், அதை அவர் நமக்கு எங்கே கொடுத்தார் என்றும், எங்கே வாக்குத்தத்தம் பண்ணி இருந்தார் என்றும் உங்களுக்கு காட்ட முடியும். உலகத்தின் முடிவு பரியந்தம் அது நம்மோடு இருக்கும் என்றார். அவர் அதை எங்கே எடுத்து போட்டார் என்று எங்கே காட்டுங்கள்-? அது எடுக்க கூடாததாக இருந்தது. மேலும் அது இயேசு, வருமளவும் எடுக்கக்கூடாததாக இருக்கிறது. அது உண்மை. பரிசுத்த ஆவியாகிய மன்னா அந்த பெந்தேகோஸ்தே நாளில் விழுந்தது போலவே இன்றும் அதே விதமாக விழுந்துக் கொண்டு இருக்கிறது. 55. நிறைய ஆள் மாறாட்டக்காரர்களும், வெறியர்கள் நிறைய உண்டு என்பதை நமக்கு தெரியும். அது ஒரு பொருட்டல்ல, ஆனால் அது நிச்சயமாகவே ஒரு பரிசுத்த ஆவி உண்டு என்பதை நிரூபிக்கிறது. கிறிஸ்தவர்களை போல நடிக்க கூடிய நிறைய ஆள் மாறாட்டக் காரர்கள் சபையில் உண்டு என்பதை அறிந்திருக்கிறோம், அது ஒன்றுமே பொருள்படாது. ஒரு உண்மையான கிறிஸ்தவன் உண்டு என்பது தான் அதின் பொருள். அது வெறும் ஒரு பார்க்கக் கூடிய கண்ணாடி போல தான் உள்ளது. கவனியுங்கள், பரிசுத்த ஆவி கீழே விழும் போது, கவனியுங்கள். அந்த மன்னா தான் முதலில் கீழே விழுந்தது. தேவன் மோசேயை நோக்கி, பொன் ஓமர்கள் சிலவற்றை எடுத்து அதை முழுவதுமாக நிரப்பி மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு கொண்டு போக சொன்னார். அங்கே கொண்டு போக சொன்னதன் காரணம், அது பின் வரும் அநேக சந்ததிக்கு காண்பிக்கும்படி அதை வைக்க சொன்னார். அந்த உண்மையான கீழே விழுந்தன மன்னாவை போல இருந்ததை உணர, அவர்கள் அதை தொடவும், அதை ருசித்து பார்க்கவும் செய்யலாம். இது பெந்தேகோஸ்தே நாள் அன்று கீழே இறங்கின பரிசுத்த ஆவிக்கு ஒரு அழகான ஒப்பனையாக உள்ளது. மேலும் ஜனங்கள் மிகுந்த சந்தோஷத்தோடு களிகூர்ந்து இருந்தனர். 56. அந்தப் பெந்தேகோஸ்தே நாள் அன்று "வாக்குத்தத்தமானது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது" என்று பேதுரு சொன்னார். கீழே இறங்கின அதே பரிசுத்த ஆவி, அதற்குப் பிறகு வரும் அநேக சந்ததிக்கும், புறஜாதிகளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உரியது. பேதுரு சொன்னார், நீங்கள் மனம் திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தை பெறுவீர்கள். வாக்குதத்தமானது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்தில் உள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொன்னார். மேலும் தேவன் இன்னும் எவ்வளவு காலம் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறாரோ, அவ்வளவு காலம் வரைக்கும் பரிசுத்த ஆவியை கொடுத்துக் கொண்டு இருக்கிறார். அவர்கள் அந்த மன்னாவை ஓமர் முழுவதுமாக வைத்திருந்தார்கள், அதனால் ஒவ்வொரு மனிதனும் அந்த மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்கும் போது, ஒவ்வொரு ஆசாரியனும் வாய் நிறைய அந்த உண்மையான மன்னாவை முதன் முதலாய் கீழே விழுந்த மன்னாவை புசித்தனர். மேலும் அது போல தான் இன்றைக்கும் உள்ளது. அந்த உள்திரை எடுக்கப்பட்டாகி விட்டது. மேலும் அழைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் உள்ளே வந்து, பெந்தேகோஸ்தே நாளன்று விழுந்த அதே விதமான பரிசுத்த ஆவியை இருதயம் முழுவதும் பெற்றுக் கொள்ளலாம். அது உலகத்தின் முடிவு பரியந்தமும் இருக்கும். 57. கவனியுங்கள், முதல் காரியம் அங்கு நடந்தது என்னவென்றால், அந்த பரிசுத்த இடத்தில் ஒரு பேழை இருந்தது. இப்போது பாருங்கள், சிறு பிள்ளைகளாகிய நீங்கள் அந்த சுவரை கவனியுங்கள், இப்போது உங்களுக்கு கிடைக்கும். அங்கு ஒரு பிரதானமும் (பிரகாரம்) அங்கு ஒரு பரிசுத்த ஸ்தலமும், அதற்கு பின் மகா பரிசுத்த ஸ்தலமும் இருந்தது. மூன்று படிகள். தேவன் எப்பொழுதுமே மூன்றில் பூரணப்பட்டவர், ஏழில் முடிவடைபவர், பனிரெண்டில் தொழக்கூடியவர், நாற்பதில் சோதிக்கபட்டவர் மேலும் ஐம்பதில் யூபிலி. எல்லா...... அந்த எண்களை கவனியுங்கள். மேலும் அதை நீங்கள் ஒரு போதும் குழப்பத்திற்க்குள் ஆக மாட்டீர்கள். பாருங்கள்-? தேவன், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாய் பூரணப்பட்டு இருப்பதை: நீதிமானாக்கப்படுத்தல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் ஞாஸ்நானம், இந்த எல்லாம் பூரணபட்டு இருக்கிறது. எப்படி இதெல்லாம் அவர் செய்தார். கவனியுங்கள், மேலும் அந்த அந்த ஆசரிப்பு கூடாரத்தில், நீங்கள்.......கர்த்தர் மூன்று அறைகளில் வசித்தார். நீங்கள் மூன்று அறைகளில் வசிக்கிறீர்கள். நீங்கள் சொல்லலாம் "சகோதரன் பிரன்ஹாமே, எனக்கு 10 அறைகள் என் வீட்டில் உள்ளது, ஆனால் நீங்கள் வெறும் 3 அறைகளில் தான் வசிக்கிறீர்கள். அது சரியா-? அதாவது சமையலறை, உணவு உட்கொள்ளும் அறை, அல்லது...... சமையலறை, ஹால், மேலும் படுக்கை அறை. உங்களுக்கு மூன்று படுக்கை அறை இருக்கலாம். உங்களுக்கு ஒரு உணவு அருந்தும் சிறிய சமையலறை கூட இருக்கலாம். ஆனால் வெறும் மூன்று அறைகள் தான் உங்கள் வீட்டில் இன்னும் இருக்கிறது. 58. நீங்கள் உங்கள் வீடாகிய ஆவி, ஆத்துமா, சரீரம் ஆகிய இவற்றிற்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இப்படித்தான் தேவனும் இயேசு கிறிஸ்துவுக்குள், ஆத்துமா சரீரம், மேலும் ஆவியாகிய இவ்விரண்டிற்குள் வாழ்ந்து கொண்டிருந்தார். "நான் நான் சுயமாக எதையும் செய்யவில்லை, எனக்குள் வாசம் செய்யும் பிதாவே இவற்றை செய்கிறார்" பாருங்கள்-? மேலும் இந்த கூடாரத்துக்குள் அது முழுமை அடைகிறது. மேலும் இது லூத்தர் காலத்தில் நீதிமானாக்கப்படுதலின் மூலமாகவும், வெஸ்லி காலத்தில் பரிசுத்தமாக்கப்படுதலின் மூலமாகவும், மேலும் கடைசி காலங்களில் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தினாலும் அது மூன்று கட்ட பிரயாணத்தை அவருடைய சபையை பரிபூரணப்படுத்துகிறது. எல்லாவற்றிலும், எல்லா காரியங்களிலும் மூன்றுக்குள் அடங்குகிறது. கவனியுங்கள் பின்பு தேவன் இந்த சிறந்த கூடாரத்திலிருந்து தம்முடைய சபையை எடுத்துக் கொண்டார். இப்போது அந்த வெளிப்புறத்தில் உள்ள பிரதானத்தில் அந்த மன்னா விழுந்தது. மற்றும் ஞாபகம் கொள்ளுங்கள், ஜனங்கள் அந்த மன்னாவை புசித்தனர், ஆனால் கர்த்தர் இந்த மன்னாவை கொஞ்சம் எடுத்து பரிசுத்த ஸ்தலத்தில் வைக்க சொன்னார். அங்கு தான் அந்தப் பேழை இருந்தது. அந்த பேழை மனித இதயத்திற்கு ஒப்பனையாக உள்ளது. அந்த பேழை, அந்த இடம் அது மறைந்திருந்த இடம். 59. கர்த்தர் தீர்க்கதரிசியின் மூலமாக, "நான் என் கட்டளைகளை அவர்கள் இருதயத்தில் போட்டு, அவர்களுடைய இருதயமாகிய பலகைகளில் எழுதுவேன்" என்று சொன்னது. இது தேவன் மனிதனுடைய இருதயத்தில் தான் வாசம் செய்கிறார் என்று காட்டுகிறது. மனிதனுடைய தலையில் அல்ல, ஆனால் மனிதனுடைய இருதயத்தில் தான். ஆமென். "நான் அவைகளை என்னுடைய இருதயத்தில் - அவர்களுடைய இருதயத்தில் எழுதுவேன். மேலும் அவர்கள் என்னுடைய பிரமாணங்களை காத்துக் கொள்வார்கள், மேலும் அது போன்று," என்று கர்த்தர் உரைத்தார். கர்த்தர் இன்னும் ஒரு இடத்தில் அதாவது எசேக்கியேல் புத்தகத்தில், அவர் சொன்னார், அந்த நாளில் நான் உன்னுடைய பழைய சதையான கல்லான இதயத்தை எடுத்து போட்டு புதிய ஆவியை கொடுப்பேன், மேலும் நான் “என் ஆவியை உன்னில் போடுவேன்.” இப்பொழுதும் அநேக ஜனங்கள், நீங்கள் கூட பெந்தேகோஸ்தை சேர்ந்தவர்கள், நிறைய நேரங்களில் தவறாக எண்ணுகிறீர்கள். நீங்கள் ஒரு புதிய ஆவியை பெறுகிறீர்கள், அது தேவனுடைய ஆவி அல்ல, அது உங்களுடைய ஆவி. அது கர்த்தருடைய ஆவி அல்ல. உங்களுக்கு ஒரு புதிய ஆவி கிடைத்தது என்ற சந்தோஷத்தில், மேலும் கீழுமாக குதிக்கிறீர்கள், தரையில் அங்கும் இங்குமாக ஓடுகிறீர்கள், கொஞ்சம் சத்தம் போடுகிறீர்கள், மேலும் அந்நிய பாஷை பேசுகிறீர்கள் மற்றும் சுற்றி ஓடி உங்களுக்கு பரிசுத்த ஆவி பெற்றதாக நினைக்கிறீர்கள். அது, அது அல்ல. அது கர்த்தர், உங்களுக்கு கொடுத்த ஒரு புதிய ஆவி. அது நீங்கள். அதற்கு பிறகு, அவர், உங்களுக்கு, உங்களுடைய ஆவியை கொடுகிறார், பின்பு அவர் சொன்னார், "என்னுடைய ஆவியை போடுவேன் என்று... " அதுதான் இன்றைக்கு உணவை உண்ணாததால் ஏற்படும் தசைப்பிடுப்பு காரியமாக உள்ளது. அது சரியா. அதனால் தான் நீங்கள் தேவனோடு கூட எங்கும் போக முடியாமல் இருக்கிறது. 60. கவனியுங்கள், நீங்கள் ஒரு புதிய ஆவியை பெற்றுக் கொள்கிறீர்கள். உங்களுக்கு ஒரு புதிய ஆவியை கொடுத்தே ஆக வேண்டும் அல்லது அவரோடு கூட நீங்கள் இருக்க முடியாது. அந்த பழைய சாத்தானின் ஆவியோடு கூட, நீங்கள் உங்களோடு கூடவே சரியாக இருக்க முடியாது. அவருடைய ஆவியோடே நீங்கள் ஒன்று சேர்ந்து போவதற்குத் தான், ஒரு புதிய ஆவியை உங்களுக்குள் போடுகிறார். ஆமென். "நான் ஒரு புதிய ஆவியை அவர்களுக்குள் போடுவேன் மற்றும் என்னுடைய ஆவியை அவர்களுக்குள் போடுவேன்". அவர் சொன்னார் ஒரு புதிய ஆவியை கொடுத்த பிற்பாடு, அது நீங்கள். கர்த்தருடைய ஆவியோட குழப்ப வேண்டாம். அது அல்ல. அது உங்களுடைய புதிய ஆவி. ஒரு வேலை புதிய ஆவியை உங்களுக்கு கொடுப்பாராகில், அது பரிசுத்த ஆவியோட சேர்ந்து போவதற்காகவே கொடுக்கிறார். காரணம், நீங்கள் இருக்கும் உங்களுடைய நிலமையில் ஒத்து போகவே முடியாது. உங்களுடைய மனைவியோடு ஒத்துப் போக முடிவில்லை. உங்கள் கணவரோடு ஒத்துப் போக முடிவில்லை. உங்களுடைய அண்டை வீட்டாருடன் உங்களால் ஒத்துப் போக முடிவில்லை. எப்படி உங்களால் ஆண்டவரோடு கூட ஒத்துப் போக முடியும்-? ஆகையால் அவரோடு கூட ஒத்துப் போவதற்கு அவர் உங்களுக்கு புதிய ஆவியை கொடுக்கவேண்டிய உள்ளது. அவர் உங்களுக்கு ஒரு புதிய ஆவியை போட வேண்டியதாய் உள்ளது. ஆகையால் அவர் ஒரு புதிய ஆவியை உங்களுக்கு கொடுத்து அதற்கு பிறகு அவருடைய ஆவியை உங்களுக்கு வைக்கிறார். உங்களுக்குள் ஒரு புதிய ஆவியை கொடுத்து, ஒரு புதிய தோற்றமும், புதிய விசுவாசமும் தந்து, அதற்குப் பிறகு அவருடைய பரிசுத்த ஆவியை உங்களுக்குள் வைக்கிறார். கவனியுங்கள், ஆதியிலே அதே மன்னா கீழே தரையில் விழும்போது ஜனங்கள் அனுதினமும் அதை புசித்தார்கள். ஆனால் கவனியுங்கள், அந்த மன்னாவை சாப்பிட்ட அவர்களுக்கு 9:00 மணிக்குள்ளாக பசி எடுக்க ஆரம்பிக்கும். 61. நான் நிறைய முகாம் கூடுகைகளில் பார்த்திருக்கிறேன். ஜனங்கள் அங்கு சென்று, கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் போதே கொஞ்ச நேரம் வெற்றி முழக்கமிடுவர். அந்த நாள் இரவு முடியும் முன்னே அவர்கள் கவலைப்பட்டு சொல்வார்கள். நல்லது, உங்களுக்கு ஒன்று தெரியுமா, நான் அந்த வெற்றியை என்னோடு கூட வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறேன் அல்லேலூயா "ஓ, என்ன" அந்த வெற்றி என்னோடே கூட இருக்க விரும்புகிறேன். நான் சொல்லுகிறேன், இது-இது-இது இவராக இருக்கும், மேலும் இது அவராக இருக்கும். ஓ என்ன, இதற்கு காரணம் என்னவென்றால், நீங்கள் சரியான இடத்திலிருந்து அந்த மன்னாவை புசிக்கவில்லை. அது சரி தானா-? நீங்கள் பார்த்தீர்கள் என்றால், நான் ஜனங்களை சந்திக்கும் போது, அவர்கள் "இந்த வருடம் நாங்கள் மிகவும் நேர்த்தியாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறோம்" என்று சொல்வார்கள். மேலும் உங்கள் பரிசுத்தவான்களில் மருத்துவர் சர்ச் (Dr.Church) என்பவர் ஒரு புத்தகத்தை எழுதி, அதில் என்னுடைய பெயரை அதில் போட்டார். ஒரு மனிதன், ஒரு புத்தி உள்ள மனிதன் மற்றும் ஒரு மனிதனுடைய பெயரை சொல்லி கூப்பிட்டு கீழே குறிப்பிட சொன்னார், நான் அந்த மனிதனை பார்த்ததே கிடையாது, அவரை பற்றி ஒன்றுமே தெரியாது என்று சொன்னார். மேலும் எனக்கு அவரை பற்றி ஒரு காரியமும் இல்லை, ஏன் என்று நான் சொல்கிறேன், "அவர் சொன்னார்" ஒரு மனிதன் அவருடைய கூட்டங்களில் இருந்ததாக சொன்ன வரை நான் சந்தித்தேன். "அவர் சொன்னார். சகோதரன் பிரன்ஹாமுக்கு என்னை தெரியாது. நான் பால்கனியிலோ அல்லது வேறே எங்கயோ இருக்கும் போது சொன்னார் "ஐயா, அங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கிற உங்களுக்கு விரை வீக்கம் உண்டு." மேலும் நான் யார் என்றும், எங்கிருந்து வந்தேன் என்றும் சொன்னார். ஒவ்வொரு துளியும் உண்மையாக இருந்தது. மேலும் "நீ சுகம் அடைந்து விட்டாய் என்றும் கூறினார்." மருத்துவர்.சபை (Dr.Church) அவனிடம் "நீ சுகம் அடைந்தாயா-?" என்று கேட்டார். அவர் சொன்னார் ஆமாம் ஐயா, ஒரு வருடத்திற்குத்தான் அது சுகமாய் இருந்தது. அதை பற்றி நான் கவலை கொள்ளவே இல்லை. மேலும் அவர் "உங்களுக்கு ஒன்று தெரியுமா-? அது மீண்டும் எனக்கு வந்துவிட்டது என்று," சொன்னார். திரு.சபை (Mr. Church) சொன்னனார் "அப்படி என்றால், அது பொய் என்று தான் நிரூபிக்கப்பட்டுள்ளது" மேலும் அவர் "கர்த்தர் சுகம் தந்திருப்பார் என்றால் அது சுகமாகவே தங்கி இருந்திருக்கும்" என்று சொன்னார். 62. அந்த நசரேயர்களுள் எத்தனை பேர் சுத்திகரிக்கப்பட்ட பின்பும் மீண்டும் அடுத்த வருடம் சுத்திகரிப்புக்கு வந்தனர் என்பதை சுட்டி காட்ட விரும்புகிறேன். அவர் அதை வைத்துக் கொண்டார் என்று நினைத்தேன்; உன்னால் பின்வாங்க முடியாது என்று நினைத்தேன்... ஓ, சகோதரனே, சில மனிதர்கள் மிகவும் குறுகிய மனப்பான்மையோடு இருக்கின்றனர். நீங்கள் ஒரு எழுதுகோலை அவர்கள் கண்களுக்கு இடையில் வைப்பீர்கள் என்றால் அவர்கள் முழுவதும் குருடராகி விடுவார்கள். அது சரியா. அவ்வளவு குறுகிய பார்வை... நிச்சயமாக இரட்சிப்பு என்பது விசுவாசம் இருக்கும் வரை நிலைத்திருக்கும். மேலும் தெய்வீக சுகம் அளிப்பது விசுவாசம், எதுவரைக்கும் இருக்குமோ அது வரைக்கும் நீடிக்கும். 40-ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் அனுபவிக்க வேண்டியதுதான்; அப்படி ஒரு அனுபவம் இருந்ததை மறந்து விட்டு, இன்றிரவு இங்கிருந்து வெளியே போய் "நான் அதை நம்பவே இல்லை, நான் தேவனுடைய ஊழியக்காரனாய் இருப்பதில்லை" என்று சொல்வீர்கள், எவ்வளவு காலம் உங்களுடைய அனுபவம் நீடிக்கிறது என்று பாருங்கள். உண்மையாகவே. “அசுத்த ஆவி மனிதனைவிட்டு நீங்கிய பின், உலர்ந்த இடங்களில் நடமாடுகிறது. அது திரும்பி வரும்போது முன்பை விட பொல்லாத ஏழு ஆவிகளுடன் வருகிறது. அந்த வீட்டின் நல்ல மனிதர் அசுத்த ஆவியை வெளியே வைத்திருக்கவில்லை என்றால், அது பலவந்தமாக உள்ளே நுழைகிறது. நீங்கள் உங்களுடைய உணர்வுகளின் மூலமாக செல்வதில்லை. நான் என்னுடைய உணர்வுகளின் மூலமாக இரட்சிக்கப்படவில்லை. நான் நலமாக இருக்கிறேன் என்ற உணர்வினால் நான் இரட்சிக்கப்படவில்லை. நான் ஏன் இரட்சிக்கப்பட்டேன் என்றால் தேவனுடைய வாக்குத்தத்தத்தை சந்தித்ததினால். அது சரியா-? பிசாசானவன் உங்களுடைய உணர்வுகளால் உங்களை ஏமாற்றப் பார்ப்பான், ஆனால் அவனுக்கு கர்த்தர் உரைக்கிறதாவது என்று சொல்லி ஜனங்களை கண்டிக்க முடியாது. நான் இயேசு என்ன சொன்னாரோ அதையே செய்கிறேன். நான் இன்றிரவு இரட்சிக்கப்பட்டேன், ஏனென்றால் நான் தேவனின் கோரிக்கையை நிறைவேற்றினேன். இன்றிரவு நான் குணமடைந்து விட்டேன். 63. 6 அல்லது 7 ஆண்டுகளுக்கு முன்பு, இன்னும் சில நாட்கள் வாழ்வதற்காக, மாயோ பிரதர்ஸ் என்னை நிராகரித்த போது... நான் இன்று இரவு ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருக்கிறேன், ஏனென்றால் நான் நம்புகிறேன். கர்த்தர் என்னிடம் என்ன சொன்னாரோ, அதை அப்படியே, நான் அவருடைய வார்த்தையில் எடுத்துக் கொண்டேன். அவ்வளவுதான். அது நீங்கள் கர்த்தரிடத்தில் வைத்திருக்கிற விசுவாசம் தான். திகைக்க வைக்கும் ஒரே விஷயம். நோய்வாய்ப்பட்ட ஒருவரைக் குணமாக்கும் ஒரே விஷயம் அது தான், கர்த்தர் மீது அவர்கள் வைத்திருக்கும் தனிப்பட்ட விசுவாசம் தான். சில மனிதர்கள் உங்களுக்காக என்ன செய்ய முடியும் என்பதல்ல, மனிதனாகிய கிறிஸ்து இயேசு உங்களுக்கு ஏற்கனவே உங்களுக்காக என்ன செய்து முடித்து விட்டார் என்பதே ஆகும். மேலும் நீங்கள் அதை பெற்று கொள்ளுங்கள். மேலும் நீங்கள் அறிகுறிகளையோ அல்லது வேறே எதையாகிலும் பார்க்க துணியாதீர்கள். விசுவாசத்தில் மட்டும் நடந்து செல்லுங்கள். நீதிமான் அதினால் பிழைப்பான். சொல்லுங்கள், நான் பக்தி பரவசமடைகிறேன். நான் உண்மையாகவே செய்கிறேன். உரத்த குரலில் சத்தம் போட வேண்டும் போல உணர்வு உள்ளது. ஒரு பாப்டிஸ்ட் கூச்சலிடச் செல்லும் போது, அது உண்மையில் ஏதோ ஒன்று அல்லவா-? ஓ, என்ன-! கர்த்தருக்குச் சேவை செய்வதும், அதை அறிவதும் அற்புதமானது என்று கர்த்தர் கூறுகிறார். அனைத்து பயமுறுத்தும் மற்றும் பயமுறுத்தும் வெளியே எடுத்து, பரிசுத்த ஆவியை அங்கே வைத்து, சாந்தம் மற்றும் அமைதி மற்றும் உங்கள் இதயத்தில் நித்திய நம்பிக்கையின் புறாவுடன் உங்களுடன் வாழ செய்கிறார். எல்லா யூகங்களையும், மற்றும் அனைத்து ஏமாற்று வித்தைகளையும், மற்றும் உங்கள் இதயத்திலிருந்து அனைத்து சம்பிரதாயங்களையும் வெளியே எடுத்து, ஒரு உண்மையான அறிவையும், நித்தியமான உண்மையான நம்பிக்கையையும் அதில் வைக்கிறது. ஆமென். அது உண்மை தான். 64. சீக்கிரமாக இப்போது, நீங்கள் ஒரு நல்ல சபையார். இரவு முழுவதும் நான் உங்களோடு பிரசங்கிக்க முடியும், ஆனால் உங்களுக்கு எல்லா நேரமும் கேட்க விருப்பம் இருக்காது. ஆனால் கேளுங்கள், உங்களுக்கு ஒன்று காட்ட விரும்புகிறேன், ஒரு காரியத்தை பற்றி பேச விரும்புகிறேன். இப்போது, இங்கே அந்த மக்கள், சாப்பிட்ட மன்னாவானது வெளியில் உள்ள பிரகாரத்தில் இருந்த மன்னா, மேலும் அதே மன்னா தான் அந்த திரைக்குள் இருந்த மன்னா. அதே மாதிரியான மன்னா. மற்றும், இங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் ஆணும் பெண்ணும் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். அங்கு தான் நீங்கள் குழப்பமடைகிறீர்கள். ஒரு வேளை, நாளை, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்கும், ஒரு குமாரனை அழைப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நான் உங்களுக்குப் பிரசங்கிப்பேன். பாருங்கள்-? 65. தேவாலயத்தில் தேவன் எவ்வாறு அமைக்கிறார் மற்றும் அவர் என்ன செய்கிறார் என்பதைக் கவனியுங்கள். நீங்கள் அதே மன்னாவை தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அங்கே நியாய தீர்ப்பின் திரை ஒன்று இருந்தது. பரிசுத்த ஆவி ஒருவனை அழைக்காவிட்டால் ஒருவனும் இயேசு கிறிஸ்துவின் இடத்தில் வர முடியாது. பரிசுத்த ஆவி என்பது ஆண்டவர், மற்றும் அது உங்களுக்கு தெரியும். ஒரு மனிதனாலும் முடியாது, அதே பரிசுத்த ஆவி தான். மற்றும் அந்த மகா பரிசுத்த ஸ்தலத்தில் வைக்கப்பட்டுள்ள அதே மன்னாவை தான், அந்தப் பிரகாரத்தில் கர்த்தரை சேவித்துக் கொண்டிருக்கிற மனிதனும், மற்றும் அங்கு நியாயம் தீர்க்கபட்ட நிலையில் உள்ள ஜனங்களும் புசித்தனர். ஆனால் காரியம் என்னவென்றால் அது தீர்ந்து விட்டது. அது_அது கெட்டுப் போய்விட்டது. அது... கெட்டுப்போய் விட்டது. அதற்குள் புழுக்கள் இருந்தது என்று அவர்கள் எல்லோரும் சொன்னார்கள். இது தான், இன்று இரவு அநேக ஜனங்களின் அனுபவத்திற்கு காரணமாக இருக்கிறது. அவர்களுக்குள் புழுக்களும், அழுகிப் போன முட்டைகளும் இருக்கின்றன. அதற்கு காரணம் நீங்கள் அதை அனுமதித்தீர்கள். இப்போது அந்த மனிதன் இங்கே சாப்பிடலாம்; அவன் சாப்பிட்டான். எல்லாம் சரி. ஆனால் அவனுக்கு சீக்கிரத்தில் பசி எடுத்து விட்டது. "இதை என்னால் தக்கவைக்கவே முடியவில்லை" இப்படித்தான் அநேக ஜனங்களின் வழியும் உண்டு. இன்னும் நீ அதற்குள்ளாக இல்லை. நீ பரிசுத்த ஸ்தலத்திற்கு வர வேண்டும். அந்தப் பிரதான ஆசாரியன் ஆரோனை கவனியுங்கள். ஒரு வருஷத்துக்கு ஒரு முறை அபிஷேகிக்கப்பட்டு, அந்த திரைக்கு பின்னால் சென்ற பிறகு, அந்த திரை அவனுக்கு பின்னால் கீழே விழும் போது, உலகமே அவனுக்கு மூடபட்டு விட்டன. 66. இன்றைக்கு மக்களின் பிரச்சினை அது தான். அவர்கள் உலகத்திலிருந்து விலகி இருக்க விரும்பவில்லை. ஹாலிவுட்டில் கலிபோர்னியாவில் அடுத்த பிரபலமான பெண் யார் என்பதை நீங்கள் தொடர்பு கொள்ள விரும்புகிறீர்கள். அவர்களில் சிலர் 6 மற்றும் 7 முறை திருமணம் செய்து கொண்டார்கள், நீங்கள் அதை ஒரு உதாரணம் செய்கிறீர்கள். மேரி, சூசி அல்லது இந்த நாடகங்கள் என்னென்ன வருகின்றன என்பதைப் பார்க்க இரவில் உங்கள் தொலைக் காட்சியை இயக்குவீர்கள், மேலும் பிரார்த்தனைக் கூட்டத்தில் இருந்து வீட்டிலேயே இருங்கள், பிறகு ஏன் உங்களால் தாங்க முடியவில்லை என்று யோசிப்பீர்கள். நீங்கள் போதுமான அளவு மரித்து விடவில்லை. ஆமென். நீங்கள் ஒரே நேரத்தில் இருவராக இருக்க முடியாது; நீங்கள் உலகிற்கு மரித்தவராகவும் கர்த்தருக்கு உயிருடன் இருக்கவும் வேண்டும்; அல்லது நீங்கள் உலகில் உயிருடன் இருக்கிறீர்கள் மற்றும் கர்த்தருக்கு மரித்திருக்கிறீர்கள். ஒரே நேரத்தில் இரண்டு எஜமானர்களுக்கு சேவை செய்ய முடியாது. சகோதர சகோதரிகளே அது கடினமான உபதேசம் என்று எனக்கு தெரியும். ஆனால் அது தான் வேதாகமம் கூறுகிறது. உங்களுக்குள் உலகத்தை நுழைய விட்டு, அறிவார்ந்த விசுவாசமானது அதை ஏற்றுக் கொண்டிருப்பதினால், உங்களுக்கு தேவனை பற்றி ஒன்றுமே அறியவில்லை என்பது தெளிவாக உள்ளது. அது உண்மை என்று உங்களுக்கு தெரியுமா-? நான் அதை நகைச்சுவைக்காக சொல்லவில்லை. இல்லை ஐயா. ஆனால் அது தான் உண்மை. ஆனால் அது உண்மை தான். அது சரி தான். நீங்கள் உலகை நேசிப்பதால்... வேதாகமம் சொல்லுகிறது, "ஒருவன் உலகத்தையும் அதில் உள்ளவைகளையும் நேசிப்பான் ஆனால் அவனிடத்தில் தேவனுடைய அன்பு இல்லை." அது சரிதானே-? ஆனால் நீங்கள் சொல்லுகிறீர்கள், "நான் சபைக்கு சொந்தமானவன். அந்த மற்றவர்களைப்........ போலவே நான் நல்லவனாக தான் இருக்கிறேன்." நல்லது, அந்த பெண்மணியும் அதே விதமாகத்தான் நினைத்தாள், அவள் மட்டுமல்ல ஆயிரம் ஆயிரமாக மற்றவர்களும், கோடி கோடியான மக்களும் அப்படித்தான். 67. ஆனால் காத்திருங்கள், துன்மார்க்கர்கள் பச்சையாக இருக்கக்கூடிய பச்சை விரிகுடா மரத்தைப் போல பரவியிருப்பதை நான் பார்த்திருக்கிறேன், ஆனால் அவனுடைய முடிவை கவனியுங்கள். அங்கே தான் அது சொல்லப்பட்டிருக்கிறது. அங்கிருந்து தான் அது வருகிறது. மேலும் நீங்கள் பரிசுத்தாவியை புறக்கனித்து, எல்லா புத்தியீனத்தோடும் நடந்து கொண்டு, உங்கள் அறிவார்ந்த ஆன்மாவை உடைத்து, இந்த நாட்களில் ஒன்றில் உங்கள் மரண படுக்கையில், அந்த தலையணையை அழுத்திக் கொண்டு இருக்கையில், உங்கள் மருத்துவர் உங்களை கடந்து சென்று, உங்கள் இரத்த நாளங்கள் குளிரடைந்து கரங்களின் ஊடாக மேலே செல்லும் போது, அந்த மரண படுக்கை வருவதை குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். உங்கள் ஆத்துமா அங்கே வந்து அதுதான் உண்மை என்று அறிந்து கொள்ளும். மற்றும் நீங்கள் இழந்து போய் விடுவீர்கள். உங்களுடைய சொந்த மனசாட்சி உங்களை நித்தியம் முழுவதிலும் சாத்தானால் வேதனைப்படுத்தப்பட்டிருப்பீர்கள். பக்தியாய் இருப்பது போல ஒரு பாவனை பண்ணிக் கொண்டு, தேவனுடைய வார்த்தையை மறுத்தலித்து "அவர் ஒரு காலத்தில் ஆண்டவராக இருந்தார், ஆனால் இப்போது அவர் சென்று விட்டார். முன்பு ஓர் காலத்தில் அவர் செய்தார், ஆனால் இன்று அவரால் முடியாது" என்று சொல்வீர்கள். இதை மட்டும் செய்யவே செய்யாதீர்கள். நித்தியம் முழுவதும் சாத்தானால் வேதனைப்படுத்தப்பட்டிருபீர்கள். 68. கவனியுங்கள், ஆரோன் அந்த மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும் போது அங்கு வாழ்ந்து கொண்டு இருக்கிற மனிதன், எல்லா நேரங்களிலும் முற்றிலுமாக பூரணப்பட்டு இருப்பான். அந்த மன்னவானது புதிதாக இருக்கும். அது அது காய்ந்தும் போகாது, கெட்டும் போகாது. நீங்கள் எப்போதாவது தேவனிடம் மறைந்திருக்கக்கூடிய இடத்திற்குச் சென்றால், வெளி உலகம் மரித்துவிடும் வரை, மற்றும் திரை உங்கள் மீது விழும் வர... நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா-? அந்த திரை உங்களை வெளி உலகத்தில் இருந்து நிழலிட்டு... எப்போதாகிலும் நீங்கள் கிறிஸ்துவுக்குள் உங்களை இழந்து, இந்த உலகத்தோடு எந்த சம்பந்தமும் கொஞ்சமும் இல்லாமல், மிகுதியாக ஜெபம் செய்து இருந்தால்; நீங்கள் மிகவும் மன தாழ்மையோடு கிறிஸ்துவுக்கு முன்பாக நடந்து அவரை முதலாவது நேசித்திருப்பீர்கள். அதுதான் உங்களுக்கு தேவை. உள்ளத்தின் ஆழத்திற்குள், அந்த மன்னாவை புசியுங்கள். 69. அந்த மன்னா ஒன்பது மணிக்கு நன்றாக இருந்தது. அது 12 மணிக்கு நன்றாக இருந்தது. ஒரு வருடம் முழுவதும் நன்றாக இருந்தது. அது என்றென்றைக்கும் நன்றாக இருந்தது. நூறு ஆண்டுகளுக்கும், மற்றும் காலங்கள் உருண்டோடிக் கொண்டே இருந்த போதும், கெட்டு போகவில்லை. அது நன்றாக, இனிப்பாக மேலும் எல்லா நேரமும் புதிதாக இருந்தது. எந்த மனிதன் அந்த இடத்தில் இருக்கிறானோ அவனுக்கு எப்பொழுதுமே வெற்றி தான். தேவனுடைய பிரசன்னத்தில் அவன் இருந்தான். அவனுக்கு எப்பொழுதுமே வெற்றி தான் கிடைக்கும். ஒன்பது மணியானாலும் ஒரு காரியமே இல்லை, சபை நடந்து கொண்டு இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. அவன் இன்னும் கிறிஸ்துவுக்குள் நங்கூரமிட்டுக் கொண்டு இருக்கிறான். வெளி உலகம் முழுவதும் அவனுக்கு மரித்துப் போய் இருக்க, அவன் கர்த்தருக்குள் தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறான். அவனுடைய இருதயம் தேவனுடைய சிங்காசனமாய் இருக்கிறது. கர்த்தர் அவனுக்கு ஒரு புதிய ஆவியை கொடுத்து அந்த திரைக்குள் அவனை எடுத்த பிறகு, அனுதினமும் அவனுக்கு அந்த மகா பரிசுத்த ஸ்தலத்தில் இருந்த அந்த பொன்னாலான ஓமரிலிருந்து மன்னாவை ஊட்டுகிறார். அது மட்டுமல்ல ஆரோன் அவனுடைய கோலை எடுத்து 24-மணி நேரமும் அங்கே வைத்தார். உங்களுக்கு ஒன்று தெரியுமா அந்த கோலுக்கு என்ன நடந்தது என்று-? அது வளர்ந்து, பூ பூத்து வாதுமை பழங்களை 24 மணி நேரமும் கொடுத்தது. 70. இன்றிரவு ஸ்டர்கிஸில் அதே வழியில் நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். அந்த பழைய செயலற்ற குச்சி ஒரு ஒலிவ மரத்தின் வெளியேற்றப்பட்ட குச்சி. அது சரி. இந்த பெரிய தேவாலயங்களில் ஒரு ஆணும் பெண்ணும் பலர் உள்ளனர், அது ஒரு மரத்தின் வெளியேற்றப்பட்ட குச்சியாக இருக்கலாம். அவர்கள் கிறிஸ்தவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு அந்த இயற்கைக்கு மேம்பட்ட காரியங்களை பார்க்க முடியாது. அவர்கள் ஒரு போதும் அதை பெற்றிருக்கவே இல்லை. அவர்களுக்கு மறுபிறப்பு என்பதற்கு அர்த்தமே தெரியாது. அவர்களுக்கு தெரியாது. அவர்களுக்கு அனேக பொய் காரியங்களும், அலங்கார சாதனங்களும் உள்ளது, மேலும் அது அவர்கள் கண்களை குருடாக்கி விட்டது. ஆனால் அது நிஜமான காரியத்தில் இருந்து எடுத்து போடுவதில்லை; என்னுடைய வார்த்தையை கேளுங்கள். அது நிஜத்தை அதிக நிஜமாகவே காட்டுகிறது. என்ன நடந்தது-? 71. நீங்கள் கிறிஸ்துவை உண்மையாகவே ஏற்றுக் கொண்டு, அவரை விசுவாசிப்பீர்கள் என்றால், அப்பொழுது சகோதரர்களை, நீங்கள் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் வந்து விடுவீர்கள். அதன் பிறகு ஆவியின் கனிகளை கொடுப்பீர்கள். மரித்த கோல் 24-மணி நேரத்துக்குள் உயிர் பெற்று, பூ பூத்து, வாதுமை பழங்களை கொடுக்கும். ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ இயற்கைக்கு மேம்பட்டவரை விசுவாசிக்க முடியவில்லை என்றால், ஒரு ஆணோ அல்லது பெண்ணோ அற்புதத்தின் நாட்களை நம்ப முடியவில்லை என்றால், அவர்கள் அந்த மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு பின்னால் ஒளிந்து கொள்ளட்டும். அப்பொழுது அந்த தேவகுமாரனின் திரையானது அவர்களுக்கும் உலகத்துக்கும் நடுவாக கீழே விழுந்து 24 மணி நேரத்துக்கு குறைவாகவே கர்த்தருடைய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்று நம்புவார்கள். ஆமென். அந்தத் திரைக்குப் பின்னால் நீங்கள் போகாததின் காரணம் என்னவென்றால்.............நீங்கள் சொல்லுகிறீர்கள், "நல்லது, நான் ஒரு கிறிஸ்தவன். நான்_ நான்_ நான் தேவனுடைய நலமானவைகளை எடுத்துக் கொண்டேன். ஆமாம், ஆனால் நீங்கள் அந்த பிரகாரத்தில் தான் இருக்கிறீர்கள். உள்ளே ஓடி வந்து உங்களை மறைத்துக் கொள்ளுங்கள். நான் உங்களிடம் சத்தம் போட்டுக் கொண்டு இருக்கவில்லை, நான் உங்களிடம் உண்மையாய் மட்டும் பார்க்கும்படி முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். பின்பு வெளிப்பாடுகள் ஒன்றுமே இல்லாமல் இருக்கும். பின்பு தேவனுடைய பிரசன்னத்தில் நீங்கள் இனிமையாக தேவாட்டுக்குட்டியோடு அனுதினமும் நடந்து கொண்டே இருப்பீர்கள். நீங்கள் ராஜாவின் பிரசன்னத்தில் அனுதினமும் ஒவ்வொரு மணி நேரமும் வாழ்ந்துக் கொண்டு இருப்பீர்கள். 72. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை. உங்கள் சபை மக்கள், "நீங்கள்_ நீங்கள், உங்கள் சிந்தனையை இழந்து விட்டீர்கள் என்று சொல்லட்டும். அது உங்களை ஒரு துளியும் தொந்தரவு செய்யாது. ராஜாவின் பிரசன்னத்தில் மட்டும் நீங்கள் சரியாக வாழுங்கள், ஏனென்றால் இந்த உலகத்தின் ஞானம் கர்த்தருக்கு பைத்தியமாக உள்ளது. உங்கள் அறிவார்ந்த விசுவாசமானது கர்த்தருக்கு முன்பாக பைத்தியமாக உள்ளது. மற்றும், அது போல தான் கர்த்தருடைய ஞானமானது உலகத்திற்கு பைத்தியமாக உள்ளது. ஆனால் அந்த பைத்தியக்காரத்தனமான பிரசங்கத்தின் மூலமாக அந்த இழந்து போனவர்களை இரட்சிப்படைய செய்வது கர்த்தரை சந்தோஷப்படுத்துவதாகும். நண்பர்களே புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் சாத்தானின் உலகத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இது கர்த்தருடைய உலகம் அல்ல. சாத்தான் அது அவனுடையது என்று சொன்னான். "சாத்தான் இயேசுவை மேலே எடுத்துச் சென்று சொன்னான், "எல்லா இராஜ்ஜியத்தையும் பாரும்-?" ஐக்கிய நாடுகளையும், மற்றும் எல்லா நாடுகளையும் அவன் சொன்னான். "இதெல்லாம் என்னுடையது, நான் என்ன செய்ய விரும்புகிறேனோ அதெல்லாம் நான் அதற்கு செய்வேன். மேலும் நீ என்னை பணிந்து கொண்டால் அதெல்லாம் உமக்கு தருவேன்." இயேசுவுக்கு தெரியும் அவர் ஆயிரம் வருட அரசாட்சியில் அவர் அதை சுதந்திரத்துக் கொள்வார் என்று. அவர் சொன்னார் "அப்பாலே போ சாத்தானே-! உன் தேவனாகிய கர்த்தரை....-?.... பாருங்கள் பரிசுத்த ஆவியானவர் வார்த்தையுடன் ஒத்துப் போவதைப் பாருங்கள். "உன் தேவனாகிய கர்த்தரை பணிந்துக் கொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே" ஆமென். அவன் மோசேயை அங்கே சந்திக்கவில்லை என்று அவனுக்கு நிச்சயமாக தெரியும். 73. இயேசுவுக்கு தெரியும். வெளிப்படுத்தின விசேஷத்தில் வேதாகமம் சொல்லுகிறது "பரலோகமே-! பரிசுத்தவான்களாகிய அப்போஸ்தலர்களே-! தீர்க்கதரிசிகளே-! அவளைக் குறித்துக் களிகூருங்கள். உங்கள் நிமித்தம் தேவன் அவளை நியாயந்தீர்த்தாரே-! என்று தூதன் சொன்னான்." அவர் தான் எல்லோருக்கும் ராஜாவாக வருவார் என்று இயேசுவுக்கு தெரியும். ஆனால் இதுவோ சாத்தானின் உலகம். அதனால் தான் நீங்கள் எல்லாரும் சண்டை போட்டுக் கொண்டு, யுத்தங்களை செய்து, பிரச்சனைகளை உண்டு பண்ணி, அனுகுண்டுகளை உண்டாக்கி, கொலை, கற்பழிப்பு மற்றும் எல்லாவற்றையும் செய்கிறீர்கள். ஏனென்றால் இது பிசாசின் உலகமும், எல்லாம் பிசாசுக்குட்பட்டு இருக்கிறது என்று. ஆனால் நீங்களும் இந்த உலகத்துக்கு உரியவர்கள் அல்ல. நீங்கள் கர்த்தருடைய இராஜ்ஜியத்திற்குள் இருப்பவர்கள். ஒரு பாவி பாவம் செய்வதை குறித்து நான் குறை சொல்லவில்லை. ஒரு பாவி கீழே சென்று பீர் அருந்தி விட்டு, சிகரெட்டை புகைத்து விட்டு, சினிமாவுக்கு சென்று, மற்றும் அதுபோல காரியங்களை செய்து, உலகத்தில் இருப்பவர்கள் போல நடித்தால், அவனை நான் குறை சொல்ல முடியாது. இப்போதைக்கு அவனுக்கு மகிழ்ச்சி தருவது அவைகள் மட்டும் தான். மேலும் அவனுக்கு மகிழ்ச்சி என்று ஒன்று அவனுக்கு கிடைக்கும் என்றால் அது இதுவாக மட்டும் தான் இருக்கும். அது சரியா. ஒரு பன்றி தனது மூக்கை குவிந்திருக்கும் அழுக்கு குவியலுக்குள் நுழைத்துக் கொண்டு, அழுக்கை சாப்பிட்டுக் கொண்டிருக்குமென்றால் நான் அதை குறை சொல்ல மாட்டேன். நிச்சயமாக இல்லை, அது ஒரு பன்றி. அவனை தனியே விட்டு விடுங்கள். 74. ஆனால் கிறிஸ்தவர்கள் என்று சொல்லக்கூடிய நீங்கள், அப்பேர்ப்பட்ட காரியங்களை செய்வீர்கள் என்றால், உங்களைப் போன்ற ஆட்களுக்கு பின்னாலே தான் நான் இருக்கிறேன். உங்களுடைய இருதயத்திற்கு மாற்றம் ஏற்படுகிறது. உங்களுக்கு உணவில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. அது சரியா. உலகத்தின் காரியங்கள் இதற்கு மேல் உங்களுக்கு தேவையே படாது. நிச்சயமாகவே இல்லை. கர்த்தருடைய மகிமைக்குள் வந்து சேருங்கள். ஒப்புக் கொடுங்கள்... அங்கு ஆரோன் அதற்குள் நடந்து, அந்த திரை அவனுக்கு பின்னால் விழுந்தது போல, சகோதரனே, அதற்கு மேல் என்ன நடந்தது என்று உலகத்திற்கு அறிந்து கொள்ளவே முடியவில்லை. உலகம் அவனிடம் இருந்து தள்ளப்பட்டு விட்டது. மேலும் ஒரு மனிதன் தன்னுடைய இருதயத்தையும், வாழ்க்கையும் நிச்சயமாக கொடுத்தால், ஒரு ஆணோ, பெண்ணோ, சிறுவனோ அல்லது சிறுமியோ, அவருடைய வார்த்தையில், அவரை எடுப்பதற்கு துணிந்து, மற்றும் இதை சொன்னால், கர்த்தாவே நான் உம்மிடத்தில் தூய்மையாக வருகிறேன். எனக்கு என்னுடைய இதயத்தில் ஒரு புதிய பிறப்பு தாரும் தேவனே, இரத்தம் தோய்ந்த சிலுவையின் கீழ் நின்று அதை உங்கள் முழு இருதயத்தோடும் நம்புங்கள். மேலும், உங்கள் முழு மனதோடு அதை விசுவாசியுங்கள். ஏதோ ஒரு காரியம் கண்டிப்பாக நடக்கும். சகோதரனே தேவன் உங்களை உலகத்தினின்று அடைத்து விடுவார். மேலும் இந்த உலகம் உங்களுக்கு மரித்து போய் இருக்கும். உலகத்துக்குரிய எல்லா காரியங்களும் மரித்து போய் இருக்கும். உங்களை நீங்களே மறைத்துக் கொள்ள வேண்டும். 75. நிறைய முறை நான் கூறியிருப்பது போல, எனக்கு வேட்டையாட பிடிக்கும். கோலரோடோவுக்கு மேலே நானும் எனது நண்பனும் உட்காருவது உண்டு. சில வேலைகளில் நாங்கள் மிகவும் சோர்வுற்று, தாங்க முடியாமல் இருக்கும் போது, நானும் சகோதரன் வுட்டும் (Bro.Wood) இலை உதிர் காலத்தில் வேட்டையாடுவதற்கு அப்படியே சென்று விடுவோம். அதிகமாக மிருகங்களை கொள்ளுவதற்கு என்று அல்ல. இல்லை, இல்லை ஐயா. ஏன் அப்படி-? தேவனோடு ஒரு தனிப்பட்ட நேரத்தை செலவிடுவதற்காக சொல்லுவோம். 76. நான் காட்டு மான்களை வேட்டையாடிக் கொண்டு இருந்தேன். நான் உயர மேலே இருந்தேன். அந்த இலை உதிர் காலத்தின் மழையும் பனியும் அவைகளை கீழே விரட்டவில்லை. ஒரு நாள் ஒரு பெரிய மழை வந்தது. அது கொஞ்ச நேரம் மழை பெய்யும், கொஞ்ச நேரம் பனி விழும், அதற்குப் பிறகு வெயில் அடிக்கும். மற்றும் ஒரு பெரிய புயல் வந்தது. நான் உயரத்தில் இருந்தேன். அந்த மனிதன் என்னோட கூட இருந்தார். இரண்டு நாட்களாக அவரை நான் பார்க்கவில்லை. அதாவது அந்த இடம் நகரத்திலிருந்து 70 மைல் தூரத்தில் இருந்தது. ஒரு ரயில் வண்டி ஓடுவதின் சத்தத்தைக் கூட கேட்க முடியாது. ஒன்றுமே கேட்க முடியாது. ஓ இருப்பதற்கு என்ன ஒரு இடம். நான் அங்கு நடந்து கொண்டு இருந்தேன், புயல் காற்று வீசிக் கொண்டிருந்தது. ஒரு மரத்துக்கு பின்புறம் புயல் நிற்கும் வரை நின்று கொண்டு இருந்தேன். மரத்தின் உச்சியில் உள்ளவைகள் கீழே விழுந்துக் கொண்டிருந்தன. புயல் நின்ற பிறகு குளிர்ந்த மழை, ஏன்-? பனி கட்டிகள் மரத்தையெல்லாம் மூடிவிட்டது, சூரியன் தெற்கிலிருந்து சந்துக்கள் வழியாக பிரகாசித்தது. இப்படியே சூரியன் பிரகாசித்து ஒரு வானவில்லை அந்த இடத்தில் உண்டாக்கியது. ஓ-! நான் அதை பார்த்த போது... பின் புறமாக இந்த இடத்தில் அந்த காட்டு மான்கள் ஒன்றொடு ஒன்று ஓசை எழுப்பிக் கொண்டு கூட்டமாக வந்துக் கொண்டிருந்தது. அவைகள் புயலில் வழி மாறிவிட்டன. உயர மலை மீது அந்த சாம்பல் நிற ஓநாய்கள் ஊளையிட்டுக் கொண்டிருந்தன, அதன் துணை கீழே பள்ளத்தாக்குகளில் இருந்து பதிலுக்கு ஊளையிட்டன 77. என்னுடைய தாயார் பாதி செவ்விந்தியர். மேலும் ஓ, அப்போது தான் அந்த ஆழத்தை ஆழம் என் உள்ளார்ந்த இதயத்திலிருந்து கூப்பிடத்துவங்கியது. நான் சொன்னேன், ஓ கர்த்தாவே, இங்கு தான் நான் சொந்தமானவன். இந்த இடத்தில் இந்த மலைகளில் என்னை தனிமையாக விட்டுவிடும். இது தான் என்னுடைய வீடு. ஒரு துப்பாக்கியை பிடித்துக் கொண்டு, காடுகள் வழியாக நடந்துக் கொண்டு, காட்டு மிருகங்களின் சத்தத்தை கேட்டுக் கொண்டு, இதில் ஏதோ ஒன்று உண்டு. இயற்கையை தான் நேசிப்பேன். அது தான் என்னுடைய வீடு. நான் அங்கு தான் வளர்க்கப்பட்டேன். என் முழு இருதயத்தோடு அங்கு தனிமையில் இருப்பதைத்தான் விரும்புகிறேன். நான் தேவனை அங்கு பார்க்கிறேன். சிறிது நேரம் கழித்து, நான் ஏதோ கேட்டேன். மற்றும் ஒரு சிறிய பழைய பைன் அணில்… உங்களிடம் அவை இருக்கிறதா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை, கொஞ்சம் வயதான சக, காடுகளில் அதிக ஓசை எழுப்பி கொண்டிருப்பவன். பழைய புயலால் மரங்களின் உச்சி எல்லாம் அடிபட்டு, வெறும் மரத்தண்டுகளின் மீது குதித்துக் கொண்டு இருந்தான். அந்த சின்ன அணில் குதித்துக் கொண்டு, ஏதோ ஒருவரை, தூள்த்தூளாக கிழித்து கொண்டிருப்பது போல பேசிக்கொண்டு, பேசிக் கொண்டு, பேசிக் கொண்டு, பேசிக்கொண்டு, பேசிக்கொண்டு இருந்தன. நான் அங்கு பார்த்து சொன்னேன், இப்போது நீ, ஒன்றுமில்லாதற்கு இவ்வளவு சத்தம் போடுகிறாயே, ஒருவரும் உன்னை கண்டு பயப்படவில்லை. 78. ஆகையால் அந்த நேரத்தில், அவன் என்ன பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை நான் பார்த்தேன். அங்கே ஒரு பெரிய வயதான கழுகு வலுக்கட்டாயமாக கீழே தள்ளப்பட்டது, மேற்கில் எங்களிடம் இருக்கும் பெரிய பழைய பழுப்பு நிற கழுகுகளில் ஒன்று. அந்த காற்று அவன் மீது வீசி, கீழே தள்ளிக்கொண்டு வந்தது. அதனால் தான் அந்த அணில் அவனைப் பார்த்து குரைத்து கொண்டிருந்தது. அவன், அங்கு குதித்துக் கொண்டிருந்தான். மற்றும் நான் சற்று அழுது கொண்டு இருந்தேன். மேலே அந்த வானவில்லை பார்த்தவாறு சொன்னேன் "ஓ, தேவனே, தூரத்தில் அந்த ஓநாய்கள் ஊழையிட்டு கொண்டிருக்கும் சத்தத்தை கேட்கும்போது என் இதயம் நொறுங்கிக் கொண்டிருப்பதை கேளும். அதில் ஏதோ ஒன்று உண்டு அதை நான் நேசிக்கிறேன்" நான் சொன்னேன். அந்த வானவில்லை பாருங்கள், அது கர்த்தர் உன்னோடு செய்த உடன்படிக்கை. சரிதானா. நீர் இந்த உலகத்தை தண்ணீரால் அழிக்க மாட்டீர். ஆனால், அடுத்தது அது அக்கினியால் அழிக்கப்படும். ஓ, இயேசு கிறிஸ்து அந்த வெளிப்படுத்தல் ஒன்றில் நின்று கொண்டிருப்பதை நான் பார்க்கிறேன். அவர் பார்ப்பதற்கு வச்சிர கல்லுக்கும், பதுமராகத்துக்கும் ஒப்பாய் இருந்தார்: அல்பா, ஒமேகா, ஆதியும் அந்தமும்; ரூபன், மற்றும் அந்த இளையவன், மேலும் அந்த முதிர்ந்தவன். மேலும் அவரை சுற்றி அந்த வானவில், மற்றும் தேவன் அவருக்கு ஒப்புவித்ததை காப்பாற்றி வைத்துக் கொள்வதற்கு, அவருடைய இரத்தத்தினால் உண்டான உடன்படிக்கை... அவரை நான் அங்கு பார்க்க முடிந்தது, மேலும் என்னுடைய இருதயம் என்னை நொறுக்கிக் கொண்டிருந்தது. நான்_ அங்கு இரட்சன்யபடை இருந்தது என்று அவர்கள் நினைத்தார்கள். என்னுடைய துப்பாக்கியை ஒரு மரத்தின் அருகில் வைத்துவிட்டு, நான் அந்த மரத்தை சுற்றி சுற்றி என்னுடைய மிகுந்த சத்தத்தோடு கூக்குரலிட்டுக் கொண்டு என் உணர்ச்சிகளை வெளியே தள்ளுவதற்காக; ஓ, என்னால் இயன்ற மட்டும் மிகவும் அதிகமாக கூக்குரலிட்டுக் கொண்டிருந்தேன். யார் என்னை கேட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதை பற்றி ஒரு கவனமும் செலுத்தவில்லை. அங்கு யாருமே என்னுடைய சத்தத்தை கேட்பதற்கு இல்லை. நான்_நான் தேவனை துதித்துக் கொண்டிருந்தேன். என்னை மட்டும் அவர்கள் பார்த்திருப்பார் என்றால் நான் ஒரு பைத்தியக்கார பள்ளியிலிருந்து வந்தேன் என்று நினைத்திருப்பார்கள் என்பதை யூகிக்கிறேன். யார் என்னை பற்றி என்ன நினைத்தார்களோ என்பதைப் பற்றி எனக்கு ஒரு கவலையும் இல்லை. எப்படி என்னுடைய ஆத்மா தேவனுடைய மகிமைக்காக பொங்கிக் கொண்டிருந்தது என்பதை விவரிக்க முடியவில்லை. 79. அந்த உடன்படிக்கை பெட்டி பார்த்த போது, தாவீது, தேவனுக்கு முன்பாக நடனம் ஆடியது போல எனக்கு ஒரு உணர்ச்சி ஏற்பட்டது. மேலும் அவனுடைய அந்த சின்ன பழைய பின் மாற்றம் அடைந்த மனைவி, அங்கு நின்று கொண்டு, "நீ என்னை கேவலப்படுத்துகின்றாய்" என்று சொன்னாள். நான் சொன்னேன், "நீ.....-?.....அதை விருப்பப்பட போகிறாயா, இதை கவனி." மேலும் அவன் கீழே சென்று சுற்றி, சுற்றி மீண்டும் அப்படியே சுற்றி வந்தான். அவனுடைய மனைவியோ அவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்றாள். இப்பவும் இந்த உலகம் அப்படி தான் செய்கிறது. ஆனால் கர்த்தர் சொன்னார் "தாவீது, நீ என்னுடைய இதயத்திற்கு ஏற்றவன். இந்த உலகம் என்ன சொன்னாலும் அதை பொருட்படுத்தாதே. கர்த்தர் என்ன நினைக்கிறாரோ அது போதும்" சீக்கிரமாக... நான் கொஞ்ச நேரத்துக்கு பிறகு அந்த அணிலானது அந்த வயது சென்ற கழுகோடு பேசிக் கொண்டிருந்ததை பார்த்தேன். நான் நினைத்தேன் “கர்த்தாவே, உம்மை பார்த்துக் கொண்டும், உம்மை கேட்டுக் கொண்டும் இருக்கிற, இந்த மகத்தான நிகழ்ச்சியில், ஏன் இடைப்பட்டீர்.” 80. சில நேரம் கழித்து, நான் அந்த கழுகை கவனித்தேன், “நீ ஏன் பயப்பட மாட்டேன் என்கிறாய்-?” நான் சொன்னேன், "என்னுடைய துப்பாக்கியை எடுத்து உன்னை சுட முடியும்". அந்தப் பெரிய வெள்ளை வெல்வெட் போன்ற கண்கள் என்னை பார்த்துக் கொண்டேயிருந்தது. அவன் என்னைப் பார்த்து பயப்படவே இல்லை. அவன் அந்த அணிலை பார்த்துக் கொண்டு இருந்தான், பின்பு என்னை பார்த்தான். மறுபடியும் அந்த அணிலை பார்த்தான், மீண்டும் அந்த அணிலை பார்த்தான், பின்பு என்னை பார்த்தான். நான் நினைத்தேன். ஏன் அங்கே நீ உட்கார்ந்து கொண்டிருக்கிறாய், அதனால் தான்... நீ புத்திசாலி, அதுதான் அது. அதை தான் கர்த்தர் என்னை பார்க்கும்படி செய்கிறார். 81. உங்களுக்கு தேவனை பார்க்க வேண்டும் என்றால் அவரை எங்கு வேண்டுமானாலும் பார்க்கலாம். இங்கே பார்க்க வேண்டுமா-? அவரை நீங்கள் இங்கேயே பார்க்கலாம். அதற்கு காரணம் கேட்கமாட்டீர்கள். "நல்லது, இது என்னவாயிருக்கும் என்று ஆச்சரியப்படுகிறேன்." பாருங்கள்-? தேவன், தன்னை இங்கேயே வெளிப்படுத்துவார். ஆகையால் அவன் பார்த்தான். மேலும் அந்த வயதான கழுகு என்னை பார்த்துக் கொண்டு இருப்பதை நான் கவனித்தேன். சிறிது நேரம் கழித்து நான் சொன்னேன், அவன் பயப்படாமல் இருப்பதைக் குறித்து, ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. அது தான் இன்றைய கிறிஸ்தவர்களுடைய பிரச்சனையே. உங்களுடைய வேலை ஸ்தலங்களில் நீங்கள் சாட்சி பகிர்வதற்கு பயப்படுகிறீர்கள். இயேசு கிறிஸ்துவை பற்றி தேவனுடைய நாமத்தை வீனிலே வழங்குகிற அந்த மனிதனிடம் அது சபிக்கப்பட்டது என்று சொல்வதற்கு நீங்கள் பயப்படுகிறீர்கள். தேவன் தம்முடைய வல்லமையால் குணமாக்கினார் என்று எழுந்து சொல்வதற்கு நீங்கள் பயப்படுகிறீர்கள். தேவனுக்கு கோழைகள் தேவை இல்லை. வளைந்த எலும்பை எடுத்து போட்டு முதுகெலும்பை உடையவர்களாய் இருங்கள். பட்டி ராபின்சன் சொன்னார் "கர்த்தாவே, ஒரு சா-லாக் (saw log - வெட்டப்பட்ட மரத்தின் தண்டு மரத்தில் வெட்டுவதற்கு ஏற்றது) போன்ற முதுகெலும்பை எனக்குத் தாரும். என் வாயில் ஒரு பல் இருக்கும் வரைக்கும், நான் மரிக்கும் வரைக்கும் அவன் திறம்பட செயல்படாமல் செய்யும்படி நான் பிசாசோடு போராடட்டும்." அது சரி. அது தான் நமக்கு வேண்டியது: என் ஆத்துமாவின் கூர் முனையில் (கூரையின் இரண்டு பகுதிகளுக்கு இடையில் ஒரு வீட்டின் வெளிப்புறச் சுவரின் மேல் உள்ள கூர்மையான பகுதி.) மிகுதியான அறிவு. அது தான் உனக்கு வேண்டியதாய் இருக்கிறது. 82. கவனியுங்கள், சிறிது நேரம் கழித்து நான் அந்த வயது சென்ற கழுகை பார்த்துக் கொண்டு இருந்தேன். ஏன் அவனுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லாமல் இருந்தது. அவனுக்கு இரண்டு இறக்கைகள் இருந்ததது. தேவன் அவனுக்கு இரண்டு இறக்கைகளை கொடுத்திருந்தார். நான் அந்த துப்பாக்கியில் கை வைப்பதற்கு முன்னால், அவனுக்கு அந்த கேதுரு மரங்களிலோ, அல்லது ஊசியிலை காடுகளிலோ இருப்பான் என்று அவனுக்கு நன்றாக தெரியும். தேவன் அவனுக்கு கொடுத்த அந்த தப்பிக்கும் முறையை நம்பினான். எப்படி ஒரு கழுகானது தனது பாதுகாப்பிற்காக அதின் இறக்கைகளை நம்புமோ, அதை விட எவ்வளவு அதிகமாக ஒரு கிறிஸ்தவன் அந்த பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் தன்னை பாதுகாக்கும் என்பதை அறிந்து அதை நம்ப வேண்டும். அது தன்னுடைய பெரிய இறக்கைகளை அசைக்கும் போது, அது என்னை பார்த்தது. அவன் கொஞ்சம்கூட பயப்படவே இல்லை. அதனுடைய இறக்கைகள் செயல்பட்டு கொண்டு இருந்தவரைக்கும் அவன் பயப்படவே இல்லை. நீங்கள் சுகவீனமாய் இருப்பீர்கள் என்றால் இந்த இரவு தேவனுடைய வாக்குத்தத்தத்தில் அவரை எடுங்கள். பரிசுத்த ஆவி உங்களுக்கு வாக்குத்தத்தம் கொடுப்பதை உணருங்கள். உங்களுடைய பெரிய இறக்கைகளை கொண்ட விசுவாசமானது உங்களை அப்படியே பறக்க செய்யும். சிறிது நேரம் கழித்து, அந்த சிறிய பைன் அணில் போடும் சத்தத்தை கேட்டு, கேட்டு அவனுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. அவன் ஒரே விசை பெரிதளவில் தாண்டி, இரண்டு தரம் இறக்கைகளை அடித்துக்கொண்டு பறந்து சென்றான். அவன் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கும், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கும், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கும் பறந்து செல்லவில்லை. அவனுக்கு தனது சிறகுகளை எவ்வாறு சரியாக பொருத்திக் கொள்ள வேண்டும் என்று நன்றாக தெரியும். அவன் தன்னுடைய சிறகுகளை பொருத்திக் கொண்டு, ஒரு கர்ஜிக்கும் காற்று வந்தவுடன் அவன் தன்னை அதனுடைய இழுத்துக் கொண்டான். மீண்டும் ஒரு கர்ஜிக்கும் காற்று வந்தவுடன், அவன் தனது சிறகுகளை அடிக்கவில்லை ஏன், அவன் அதினோடே மேலே, மேலே, மேலே ஒரு தூசியை போல தென்படும் வரைக்கும் அந்த பூமிக்குரிய... பைன் அணில் கூச்சல் இட்டு கொண்டிருக்க, கூச்சல் இட்டு கொண்டிருக்க, கூச்சல் இட்டுக் கொண்டிருக்க, கூச்சல் இட்டு கொண்டிருக்க, கூச்சல் இட்டுக் கொண்டிருக்க, கூச்சல் இட்டுக்கொண்டிருக்க அதை கீழே விட்டு விட்டு சென்றான். 83. நான் நினைத்தேன், "அது உண்மைதான் ஆண்டவரே", ஓ, ஒரு கிறிஸ்தவன் மட்டும், தேவனுடைய வல்லமைக்குள் விசுவாசம் என்னும் சிறகுகளை பொருத்திக் கொண்டால், அது அலைகளை போல அவர்கள் மேலே பரிசுத்த ஆவியின் மகிமை விசுவாசிகளின் சபைக்குள் வந்ததது போலிருக்கும். மற்றும் அவர்களுக்கு மட்டும், அவர்களுடைய சிறகுகளை தேவனுடைய விசுவாசத்துக்குள் பொறுத்துக் கொள்ளத் தெரிந்திருந்தால், அசையாமல், தேவனுடைய மகிமை மேல் சவாரி செய்து கொண்டு, இந்த உலகத்தோடு கட்டப்பட்டிருந்த கட்டுகளை விட்டு, "அற்புதத்தின் நாட்கள் கடந்துவிட்டன" பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்னும் ஒன்று கிடையவே கிடையாது என்று "சத்தமிட்டுக் கொண்டு, சத்தமிட்டுக் கொண்டு சத்தமிட்டுக் கொண்டிருக்கிற கட்டுகளிலிருந்தும் விடுபட்டு சரியாக அதினின்று பறந்து கொண்டே இருப்பீர்கள். உங்களுக்கு என்ன தேவை என்றால்... ஆமாம், ஐயா. முடிவாக நான் இன்னும் ஒரு காரியத்தை சொல்லுகிறேன். உங்களுக்குள் இருக்கிற, அந்த இரகசிய இடத்தில் தேவனோடு நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த இடத்தில் ஒரு வித்தியாசம் உண்டு. பாருங்கள், ஒரு மனிதனை மூன்று வெளிச்சங்கள் அவனை நடத்தி சென்றன. இன்று, ஒரு மனிதனை மூன்று வெளிச்சங்கள் அவனை நடத்தி செல்கின்றன. முதல் காரியம் என்னவென்றால், அந்த மன்னாவில் மூன்று கட்டங்கள் இருந்தன. எல்லாவற்றிலும் மூன்று கட்டங்கள் இருக்கின்றன. உங்கள் அனுபவங்களில் மூன்று கட்டங்கள் இருக்கின்றன. மேலும் சீக்கிரமாக இப்போது கவனியுங்கள். நாம் சீக்கிரமாக முடிக்க போகிறோம். 84. கவனியுங்கள், இப்போது அந்த வெளிப்புறத்தில் உள்ள பிரகாரத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிற மனிதன், அந்த முதல் ஸ்தலத்திற்குள் சென்றதே இல்லை. அவன் சூரியனின் வெளிச்சத்திலும், சந்திரனின் வெளிச்சத்திலும், நட்சத்திரங்களின் வெளிச்சத்திலும்... அந்த ஆகாயத்தின் கீழும்... வாழ்ந்துக் கொண்டிருந்தான். சில நாட்கள் மழை பெய்தது. சூரியன் சில நாட்களுக்கு வெளிச்சத்தை தராது, இது ஒரு மனிதன் மறுபடியும் பிறவாததற்கு முன்பு அவனுடைய சிற்றின்ப வாழ்கையின் அனுபவத்தை சித்தரிப்பதாக இருக்கிறது. அதற்குப் பிறகு அடுத்த மனிதன் அந்த முதல் அரங்குக்குள் வருகிறான். அங்கு ஏழு பொன் குத்து விளக்குகள் இருந்தன. அது ஒரு நல்ல வெளிச்சத்தை தரக்கூடியதாக இருக்கும். ஆனால் அநேக நேரங்களில் அந்த குத்து விளக்குகள் அணைந்து விட்டது. அதின் புகை மேலே எழும்பிற்று. அவன் செயற்கை வெளிச்சத்தில் வாழ்ந்து கொண்டிருந்தான். சில நாட்களுக்கு சந்தோஷமாக இருப்பான், சில நாட்களுக்கு கவலையாக இருப்பான். அது தான் ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையின் அனுபவமாகும். நீங்கள் ஒரு நியாயப்படுத்தபட்ட நிலையில் வாழ்ந்து கொண்டு, ஆலயத்துக்கு சென்று "என்னால் இயன்ற மட்டும் நல்லதை செய்தேன்" என்று சொல்வீரகள் என்றால் உங்களுக்கு மழையின் நாட்கள் தான் உண்டு. நீங்கள் ஒரு கிறிஸ்தவனா இல்லையா என்று உங்களால் அறிந்த கொள்ள முடியாமல் இருக்கும் நாட்கள் வரும். நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு அற்புதங்கள் சரியா இல்லையா என்பதை அறிய முடியாமல் இருக்கும் நாட்கள் வரும். நீங்கள் ஆச்சரியப்படக்கூடிய அளவிற்கு சரியான சபையில் இருக்கிறீர்களா இல்லையா என்பதை அறிய முடியாமல் இருக்கக்கூடிய நாட்கள் வரும். அது போன்ற மனசாட்சியின் உருத்தல்களும், மற்ற காரியங்களும் தான் மனதில் சென்று கொண்டிருக்கும். 85. மீண்டும் நீங்கள் அதோடு சபைக்குள்ளே அந்த சிறு தோழமையோடே நடந்தால், மீண்டும் அங்கே ஏழு பொன் குத்து விளக்குத் தண்டுகள் தான் இருக்கும், அங்கு காணிக்கை மட்டும் செலுத்தப்பட்டு பலி சுட்டடெரிக்கப்படும். உங்களுக்கு இன்னும் புகையின் நாட்களும் மழையின் நாட்களும் மேக மூட்டத்துடன், வெளிச்சம் வெளியேறப்பட்ட நாட்கள் தான் இருக்கும். விளக்குகள் அனுபவங்களை புகைக்கபட்ட நாட்கள் தான் இருக்கும். அங்கே செல்வி ஜோன்ஸ் அவர்களை பார்க்கிறீர்கள். அவள் தன்னை கிறிஸ்தவள் என்று கோரிக்கொண்டு தவறான காரியங்களை செய்து கொண்டு இருக்கிறாள். நீங்கள் சொல்கிறீர்கள் ஓ, அதை பற்றி ஏதாவது காரியம் இருக்குமோ என்று நான் ஆச்சரியப் படுகிறேன். பாருங்கள்-? உங்கள் கண்கள் இன்னும் செல்வி ஜோன்ஸ் மேலே தான் இருக்கிறது. நீங்கள் இன்னும் செயற்கை வெளிச்சத்தில் தான் நடந்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அந்த மகா பரிசுத்ததிற்கு பின்னால் நடப்பவனுக்கோ சூரியன் பிரகாசித்தாலோ அல்லது பிரகாசிக்காமல் போனாலோ, அது ஒன்றுமில்லை. அந்த விளக்குகள் எரிந்தாலோ எரியாமல் போனாலோ, அது அவனுக்கு ஒரு காரியமும் இல்லை. அவன் அந்த மேக ஸ்தம்பம் இருக்கக் கூடிய..! அந்த ஷெக்கினா மகிமையின் வெளிச்சத்தில், ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்ட கேருபினின் இறக்கைகளின் கீழ், எந்நேரமும் அந்த பரிபூரண வெளிச்சத்திலும் தோழமையிலும் அவன் நடந்து கொண்டே இருக்கிறான். அவன் வெளியே அந்த மழை நாட்களை அவன் பார்க்கவில்லை. அங்கு மழையின் நாட்களே இல்லை, ஒரு சந்தேகமும் அங்கு இல்லை, தேவன் மேல் பசிதாகம் ஏற்பட்ட நேரமே இல்லை. ஏனென்றால் அவனுக்குள், தேவனின் மன்னா சேகரிக்கப்பட்டு இருந்தது. வார்த்தையானது நீதியுள்ள அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டிருந்தது. அவன் இதற்கு மேல் கவலை கொள்ளவே வேண்டாம். நிச்சயமாகவே வேண்டாம். அவர் அவனுக்குள் இருந்தார். உலகம் அவனுக்கு வெளியே இருந்தது. 86. அந்த ஷெக்கினா மகிமையின் கீழ், எல்லா திரைகளும் கீழ விழபட்டு, உங்களை, உலக பிரகாரமான காரியங்களிலிருந்து மறைத்துக் கொண்டு, தேவனுடைய பிரசன்னத்தில் வாழ்ந்து கொண்டு, அவருடைய சிறந்த வல்லமையின் கீழ், பரிசுத்த ஆவியின் பினைக்கப் பட்ட இறக்கைகளின் கீழ், சிலுவைக்குள் நீங்கள் நின்று கொண்டிருக்க செய்யும், அந்த அனுபவம் தான் இன்று சபைக்கு தேவைப்படுகிறது. மேலும் அந்த சிலுவை உங்களுக்கு எப்பொழுதுமே ஒரு பாரமாகவே இருக்காது. அது இறக்கைகளை...... பறந்து போய் விடும். நீங்கள் அந்த பாரங்களை நினைக்கும் போது, சூரியன் அனுதினமும் பிரகாசித்துக் கொண்டு இருக்கிறது. ஓ, நான் அதை மிகவும் நேசிக்கிறேன். நான் அந்த நதி போன்ற திரையை கடந்து விட்டேன். நான் அந்த பரிசுத்தமாக்கப்பட்ட பீடத்தின் மேல் இருக்கிறேன். கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும். ஒரு பழைய பாடலை கேட்டிருப்பீர்கள். அங்கு தான் ஒரு மனிதன் ராஜாவின் பிரசன்னத்தில் வாழ்கிறான். ஓ, வாழ்வதற்கு என்ன ஒரு அருமையான இடம். நீங்கள் அதைப் பெறலாம் நண்பர்களே. உங்கள் கூட்டாளிகளிடமிருந்தும் உலக நண்பர்களிடமிருந்தும் உங்களைத் துண்டித்துக் கொள்ள நீங்கள் தயாராக இருந்தால், நீங்கள் கிறிஸ்துவுடன் நடக்கத் தயாராக இருந்தால், இது உங்கள் ஒவ்வொருவருக்கும். அப்பொழுது நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் கண்கள் கிறிஸ்துவின் மேல் இருக்கிறது; நீங்கள் கிறிஸ்துவோடு சூரிய ஒளியில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். அங்கே வெளிப்புறமும் இல்லை, வானம் மங்கி இருப்பதும் இல்லை. இங்கு சூரியன் எப்பொழுதுமே வெளிச்சத்தை தந்து கொண்டிருக்கிறது இங்கு வானம் எப்பொழுதுமே பிரகாசமாய் இருக்கிறது. கவலை கிறிஸ்தவர்கள் வாழ்வதற்கு அங்கே இடமே தருவதில்லை நான் வேலை செய்யும்போது, கவனமாகவும் ஜெபத்துடனும் இருக்கிறேன். என் ஆத்துமாவோ எடுத்துக் கொள்ளப்படுவதினால் நிறைந்திருக்கிறது. மற்றும் நாம் அந்த அல்லேலூயா பக்கமாக வாழ்கிறோம். சூரியன் வெளிச்சத்தை தருகிறதோ இல்லையோ, அவர்கள் எல்லா நாளும், எல்லா நேரமும், அவர்களை சந்திக்கும் எல்லா நேரமும் வெற்றியை பெற்றுக் கொண்டு, கர்த்தரை துதித்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ராஜாவின் பிரசன்னத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உனக்கும் அந்த மறைக்கப்பட்ட ஜீவியம் வேண்டாமா-? அதற்குள் ஏதோ ஒரு நிஜமான காரியம் உண்டல்லவா-? ஓ என்ன-! எனக்கு மட்டும் நேரம் இருந்தால், நீங்கள் இவ்விடத்தை விட்டு ஒரு வித்தியாசமான நபராக வெளியே செல்வீர்கள். இங்கே சமீப காலமாக, தெற்கு பகுதியில் அடிமைத்தனம் இருக்கையில், அடிமைகளைப் பற்றி ஒரு சில காரியங்கள் உண்டு. நீக்ரோ மக்களைப் பற்றி ஒரு காரியம் ஒன்று. அது நான் நான் அவர்களுடைய தாழ்மை குணத்தை விரும்புகிறேன். 87. நான் இங்கே, இல்லினாய்சில் ஒரு முறை ஒரு ஒரு ஒரு கலை அரங்கிற்குள் நடந்து கொண்டு இருந்தேன். மேலும் அங்கே ஒரு வயது சென்ற நீக்ரோ ஒருவரை பார்த்தேன். அவர் தலையின் ஓரத்தை சுற்றி வெள்ளை நிற முடி மட்டும் இருந்தது. அவருடைய தொப்பி கையில் வைத்தவாறு எல்லா இடமும் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் ஏதோ ஒன்றை பார்த்து அப்படியே நின்று விட்டார், அவர் கண்களில் இருந்து கண்ணீர் தார் தாரையாக அவர் முகத்தில் ஓடியது. நான் அவர் ஜெபம் செய்வதை பார்த்தேன். நான் அவரை சிறிது நேரம் கவனித்துக் கொண்டே இருந்தேன். பின்பு நான் அவர் அருகே சென்று, அவர் தோழை தட்டியவாறு சொன்னேன், "மாமா நான் ஒரு போதகர்" உங்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். நான் சொன்னேன் "உங்களுக்குள் ஜெபம் செய்ய ஏதோ ஒன்று தூண்டியதே, அது என்ன" என்று கேட்டேன். அவர் சொன்னார் "போதகரே இங்கே வாரும், "மேலும் அவர் சொன்னார்" அதை பார்க்கவும். எனக்கு ஒன்றும் அங்கு தெரியவில்லையே, "ஒரு பெண்ணுடைய உடை மட்டும் தான் தெரிகிறது" என்று சொன்னேன். அவர் சொன்னார், "ஆனால் அதில் இரத்தம் இருப்பதை பாருங்கள்-?" நான் சொன்னேன், "ஆமாம்" என்று. அவர் "அது ஆபிரகாம் லிங்கனுடைய இரத்தம்" என்று சொன்னார். மேலும் அவர் சொன்னார், "இந்தப் பக்கத்தில் இருக்கும் இந்த தழும்பானது நான் அடிமைத்தனத்தில் இருக்கும் போது ஏற்பட்ட ஒன்றாகும்." அவர் சொன்னார் அந்த இரத்தமானது என்னை அடிமைத்தனத்திலிருந்து விடுதலை ஆக்கிற்று, உங்களையும் அது கிளர்ச்சிக்குள் ஆக்காதோ-? நான் அவர் மீது என்னுடைய கரங்களை போட்டு சொன்னேன் ஆப்ரஹாம் லிங்கனின் இரத்தமானது உங்களை அடிமைத் தனத்திலிருந்து விடுவித்ததின் நிமித்தம், உங்கள் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு, கிளர்சிக்குள்ளாகும் என்றால், ஜீவிக்கிற தேவனின் ஆலயத்தில், பரிசுத்தாவியின் வல்லமையின் கீழ் பிரசங்கிக்கப்பட்ட, இயேசு கிறிஸ்துவின் இரத்தமானது, என்னவெல்லாம் செய்யும். ஆமாம், நிச்சயமாக. அது உண்மை. வெளிப்பாடு உள்ள மனிதர்களும், புரிந்து கொள்ளக்கூடிய மனிதர்களும், தேவனை அவருடைய வார்த்தையில் எடுத்துக் கொள்ளக்கூடிய மனிதர்களும்... அதை நாம் செய்ய வேண்டும் நண்பர்களே. நாம் தேவனை விசுவாசித்து கிறிஸ்தவர்கள் போல நடக்க வேண்டும். 88. ஒரு முறை அடிமைகள் விற்கப்படும்போது, அவர்கள் அடிமைகளை மாற்றிக் கொண்டு சுற்றிச் சுற்றி வருவார்கள். இன்றிரவு நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள், உங்களில் பலர் இங்கே இருக்கிறீர்கள். உங்களில் பலர் நகரம் மற்றும் நாடு முழுவதும், தேவாலய அடிமைகள், கிறிஸ்தவத்திற்கு அடிமைகள் தவிர வேறொன்றுமில்லை, நீங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும். ஆமென். அது சரி. ஒரு முறை, நான் வசிக்கும் வீட்டின் கீழே, ஒரு பெரிய பண்ணையில், ஒரு வயதான வாங்குபவர் அங்கு வந்தார். பல வருடங்களுக்கு முன்பாக இந்த கதையை நான் கேட்டிருக்கிறேன். மேலும் அங்கு ஒரு கூட்ட அடிமைகள் இருந்தனர். அவர்கள் மிகவும் சோர்வுற்றிருந்தனர். அவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெகு தூரத்திற்கு அப்பால் இருந்தனர். அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி போவதே இல்லை, என்பதை நன்கு அறிந்திருந்தனர். டச் ஜனங்கள் அவர்களை கொண்டு வந்து அடிமைகளாக விற்று விட்டனர். அவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வெகு தூரம் பிரிந்து இருந்தனர். அவர்களுடைய நண்பர்களும், அவர்கள் நேசித்தவர்கலும் அங்கே இருந்தனர். இன்னும் ஒரு முறைகூட திரும்பி அங்கே அவர்களால் செல்லவே முடியாது. அவர்கள் மிகவும் வேதனைப் பட்டுக் புறக்கணிக்கப்பட்டு இருந்தனர். அந்த எஜமான்கள் இவர்களை ஓட்டிச் சென்றனர். அவர்களே அநேக முறை அவர்களை சாட்டையால் அடித்து வேலை செய்ய வைப்பார்கள். மேலும், அங்கு ஒரு வாலிபனை அவர்கள் கவனித்தார்கள். அவனை சாட்டையால் அடிக்க தேவைப்படாமல் இருந்தது. அவனுடைய தோள்கள் திடகாத்திரமாய் இருந்தது. ஒருவர் அவனை சாட்டையால் அடித்தாலும் அவன் அதை கண்டு கொள்ளாமல் நடந்து செல்வான். மற்றவர்களை ஊக்குவிப்பதற்காக, தான் ஒரு பெரிய வழியில் நடப்பான். ஆகையால் அந்த வாங்குபவர், "நான் அந்த அடிமையை வாங்க விருப்பப்படுகிறேன்" என்று சொன்னார். அவன், "அவன் விற்பதற்கானவன் அல்ல" என்று சொன்னான். அவர் சொன்னான், "ஏன் அப்படி" அவர் சொன்னார் "ஏன் அவன் அப்படி தன்னை ஊக்குவிக்கப்பட்டு இருக்கிறான்-? மற்றும் ஏன் அவன் மிகவும் தைரியமாகவும் வீரமுள்ளவ னாகவும் இருக்கிறான்-?" "ஏன் அவன் மற்றவர்களை காட்டிலும் வித்தியாசமானவனாக நடந்துக் கொள்கிறான். அவனை மற்றவர்களுக்கு அதிகாரியாக வைத்தாயோ-?" என்று கேட்டார். அவன் சொன்னான் "இல்லை அவன் ஒரு அடிமை தான்" என்று சொன்னான். அவர் கேட்டார் "மற்றவர்கள் உணவைக் காட்டிலும் அவனுக்கு கொஞ்சம் நலமான உணவு கொடுத்தாயோ-?" அவன் சொன்னான், "இல்லை அவன் வெறும் ஒரு அடிமை தான்". அவர் கேட்டார், "அவன் அப்படியாக நடப்பதற்கு என்ன காரணம்-?" அவன் சொன்னான், நானும் அவ்வாறு தான் ஆச்சரியப்பட்டேன், பின்பு ஒரு நாள், நான் கண்டு பிடித்தேன். அவன் அந்த இனத்தின் ராஜாவுடைய மகன். வீட்டுக்கு வெளியே அவன் ஒரு அந்நியனாக இருந்தாலும் மற்றவர்களை தக்க வைத்துக் கொள்ள அவன் தன்னை ஒரு ராஜ குமாரனாகவே நடந்துக்கொள்கிறான். 89. ஆண்களே மற்றும் பெண்களே, நாம் இங்கே அன்னியர்கள். இந்த பூமிக்கு நாம் அன்னியர்கள். நாம் அன்னியர்கள், நாம் பிரயாணிகள் மற்றும் இந்த உலகத்திற்கு முன் பின் தெரியாதவர்கள். நமது ஆண்டவரும், மற்றும் நமது கிறிஸ்துவும் அந்தப் பக்கத்தில் உள்ளனர். நாம் ராஜாவின் புதல்வர்களும் புதல்விகளும் ஆவோம். சூதாட்டத்தில் ஈடுபடவோ, புகை பிடித்தலோ, சினிமா பார்ப்பதோ, தொலைக்காட்சியில் வரும் காட்சிகளை பார்ப்பதோ, மற்றும் ஊழல், பொய் பேசுதல் மேலும் இதுபோன்ற காரியங்களை செய்யாமல் நம்மை சீராக நடத்திக் கொள்ள வேண்டும். ராஜாவின் வெளிச்சத்தில், தலை நிமிர்ந்து, தேவனுடைய புதல்வர்களும் புதல்விகளுமாக நம்மை நடத்திக் கொள்ள வேண்டும். ஆமாம் ஐயா உங்களுக்கு வேணும் என்றால் அது உங்களுடையது. உங்களுக்கு நிச்சயமாக வேண்டும் என்று நம்பவீர்கள் என்றால் அது உங்களுக்கு உரியது. இன்று இரவு அது உங்களுடையது. 90. நம்முடைய தலைகளை கவிழ்த்தவாறு ஒரு நிமிஷம் ஜெபத்தில் தரித்திருப்போம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. பியோனா வாசிப்பவர், உங்களால் முடியும் என்றால் சகோதரியே பியோனாவிடம் தயவு கூர்ந்து வரவும். ஒவ்வொரு தலையும் கவிழ்ந்தவாறும், மற்றும் கண்கள் மூடியவாறு இருக்கவும். இப்போது நமக்கு நிறைய நேரம் உண்டு. மணி ஒன்பதரை தான் ஆகிறது. சகோதரி "இயேசு என்னை உம் அருகில் வைத்துக்கொள்ளும்." என்ற பாடலையோ அல்லது உங்கள் விருப்பத்துக்கு எந்த பாடலானாலும் வாசிக்கவும். வெறும் இசைக்காக வேண்டித்தான். அவர்கள் வாசிக்கும் போது, நான் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். 91. நான் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். ஒரு வேளை இது பூமியின் மேல் கடைசி முறையாக உங்களை சந்திப்பதாக இருக்கும். நான் ஒரு சிறந்த போதகர் இல்லை. ஒரு போதகருக்கு உதிரி சக்கரமாக இருப்பவன். என்னுடைய சேவைகள் அதிகபட்சமாக சுகமாக்குவதிலும் மற்றும் அது போல காரியங்களில் தான் உண்டு. ஆனால் நான் என்ன பேசுகிறேன் என்பது எனக்கு நன்றாக தெரியும். நண்பர்களே, ஒரு மனிதன் புது சிருஷ்டியாக இல்லாத பட்சத்தில் தேவனுக்கு அன்னியனாகத் தான் இருப்பான். ஒரு வேளை பரலோகத்துக்கு சொல்வீர்கள் என்றால் இந்த அனுபவத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று நான் அறிவேன். இயேசு சொன்னார், "ஒருவன் ஜலத்தினாலும், ஆவியினாலும் பிறவாவிட்டால்....சொன்னார்". காற்றானது எங்கிருந்து வருகிறது, அது எங்கே செல்கின்றது என்பதை பற்றி ஒருவராலும் சொல்ல முடியாது. அது போல தான் பரிசுத்தாவியால் பிறந்த ஒவ்வொருவரும் இருக்கின்றனர். அவர்களுக்கு இந்த அனுபவம் இல்லாவிட்டால் தேவனுடைய இராஜியத்தில் பிரவேசிக்க முடியாது. 92. நீங்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரி, எப்படி உங்கள் பக்கத்து வீட்டாரை நன்றாக கவனித்திருந்தாலும் சரி, எவ்வளவு நேர்த்தியாக ஆலயத்துக்கு சென்று ஆலயத்து காரியங்களுக்கு உருதுணையாக இருந்திருந்தாலும் சரி, அவை எல்லாமே நல்ல காரியங்கள் தான். அதை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. எவ்வளவு கல்வி கற்றிருந்தாலும் அது நல்லது தான். ஆனால் அதற்கு இதனுடன் எந்த சம்பந்தமும் இல்லை. "ஒருவன் மறுபடியும் பிறவா விட்டால்" இது ஒரு இரகசியமான பிறப்பு, அது நீங்கள் ஒரு அன்னியனாக இருக்கும் போது, உங்களுக்கு ஒன்றுமே அறிந்திராத ஒரு அப்பாற்பட்ட உலகத்திற்கு எடுத்து செல்லும். நீங்கள் ஆலயத்துக்கு சென்று சரியான காரியங்களை செய்திருந்தாலும், நண்பனே-! அது ஒன்றுமே இல்லை. ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால் கழுவப்பட்டு மீண்டும் பிறந்திருக்கிறீர்களா-? உலகத்தின் எல்லா காரியங்களும், மற்றும் உங்கள் பாவங்களும் உங்கள் இருதயத்தை விட்டு நீங்கி விட்டதா-? அந்த ஷேகினா மகிமையின் கீழ் மறைந்து கொண்டு, இயேசு கிறிஸ்துவோடு நடந்து கொண்டு இருக்கிறீர்களா-? ஒவ்வொரு நாளும் ஆசீர்வாதம் தான், ஏற்றத்தாழ்வுகளே இல்லை. நீங்கள் அந்த ராஜாவின் பிரசன்னத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். நண்பர்களே-! கேளுங்கள், உங்களுடைய அண்டை வீட்டார் இங்கே உட்காந்து கொண்டு இருந்தாலோ, உங்களுடைய போதகர் இங்கே உட்கார்ந்துக் கொண்டு இருந்தாலோ, வேற யாராவது உட்கார்ந்து கொண்டு இருந்தாலோ, எனக்கு அதைப்பற்றி ஒரு கவலையும் கிடையாது. நீங்கள் அந்த அனுபவத்தில் குறைவுற்றிருந்தால், இந்த இரவு இங்கே வந்து இயேசு கிறிஸ்துவை பெற்றுக் கொள்ள உங்களிடம் கேட்கிறேன். 93. மற்றும், அந்த சகோதரி பியோனாவை வாசித்துக் கொண்டிருக்க, உங்களில் எத்தனை பேருக்கு ஜெபத்தில் நினைவுகூர்ந்து, அந்த அனுபவத்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்-? உங்கள் கரங்களை உயர்த்தியவாறு தேவனே என் மேல் இரக்கமாயிரும். நான் கர்த்தருடைய பிரசன்னத்திற்குள் வர வாஞ்சிக்கிறேன். உங்களுடைய கரங்களை உயர்த்துவீர்களா-? இங்கே இருக்கின்ற ஏறக்குறைய முன்னூறு ஆத்மாக்களும், மேலும் நின்று கொண்டிருக்கிற தேவனுடைய ஊழியக்காரனாகிய என்னையும் பரிசுத்த ஆவினால் அபிஷேகிக்கப்பட்டு உங்களுடைய இருதயத்தை அறிந்து, மேலும் நீங்கள் அதை மறைத்து கொண்டு இருக்க விரும்பியும் மறைக்க முடியாமல், அங்கு கைகளை உயர்த்தாமல் கர்த்தர் உங்களோடு கூட பேசி "நான் தான் அந்த நபர்" என்பதை அறிந்தும், கைகளை உயர்த்தாமல் உட்கார்ந்து கொண்டு இருக்கிறீர்கள். மேலும் நீங்கள் உயர்த்த மாட்டீர்கள், நீங்கள், நீங்கள் கைகளை உயர்த்தவே மாட்டீர்கள்-? நியாயத்தீர்ப்பில் என்ன செய்யப் போகிறீர்கள்-? அவரை இப்படியாக நடத்துவதற்கு நீங்கள் வெட்கப்படவில்லையா-? நீங்கள் வெட்கப்படவில்லையா-? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் பெண்ணே. கரத்தை தூக்குவதற்கு ஏற்ற துணிவு அது. நிச்சயமாக, நீங்கள் எதை கேட்டுக் கொள்கிறீர்களோ அதை கர்த்தர் அருளுவார். உங்கள் பெருந்தன்மையான இருதயத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. 94. வேற யாரோ கரங்களை உயர்த்தி "கர்த்தாவே என்மேல் இரக்கமாயிரும்" என்று சொல்கிறார்கள். நான் காண்கிறதை நீங்கள் பார்ப்பீர்களானால், ஒரு சிறுவன் இங்கே நின்று கொண்டு, மேலே என்னையே பார்த்தவாறு, தன்னுடைய கரங்களை மேல தூக்கி கொண்டு என்னையே பார்க்கிறான். "அவனுக்கு தெரியாது. அவன் ஒரு சிறுவன் மட்டுமே என்று சொல்லுவீர்களா-?". அவன் உங்களை விட அதிகமாக அறிந்திருக்கிறான். ஒரு சிறு குழந்தைக்கு தெரிவது கூட உங்களுக்கு தெரியவில்லையா-? இங்கே பரலோகத்தின் தேவனுக்கு, பார்வை அளிக்க முடியும், குருடர்களை காண செய்ய முடியும், கேளாதவர்களுக்கு கேட்கச் செய்ய முடியும். ஊமையனை பேச செய்ய முடியும். சர்வ வல்லமையுள்ளவரின் தவறாத இந்த அடையாளங்கள், அவர் இங்கே இருக்கிறார் என்பதை நிரூபிக்கிறது... அப்போது அவருடைய பிரசன்னத்தில், போதகர்கள் இங்கே கூடி இருக்கையில், நீங்கள் "நான், ஓ, நான் சரியாக தான் இருக்கிறேன். நான் உங்களைப் போலவே நல்லவனாகத் தான் இருக்கின்றேன்" என்று சொல்கிறீர்கள். ஞாபகம் கொள்ளுங்கள் அது தான் சுவிசேஷம். நீங்கள் ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதும் அது உங்களைப் பொறுத்தது. 95. எங்கள் பரலோகத்தின் பிதாவே, கரங்களை தூக்கின அந்த பெண்மணிக்கும், அந்த சிறுவனுக்கும், ஓ நித்திய யெகோவாவாகிய உம்மிடம், சுவிசேஷத்தின் போதகராக இந்த இரவு உம்மடத்தில் ஜெபிக்கிறேன். அது, ஏதோ ஒரு நாளில், உம்முடைய பிரசன்னத்தில் நான், நின்று கொண்டு, மக்களுக்கு நான் என்ன உபதேசித்தேனோ அதற்கு உம்மிடத்தில் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவனாய் இருக்கிறேன்... நான் உத்தமமாக உம்மிடத்தில், உம்முடைய பரிசுத்த மகனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிப்பது என்னவென்றால், நீர் அவர்களை ஏற்றுக் கொண்டு, இந்த இரவு உம்முடைய ராஜ்ஜியத்தில் அவர்களை சேர்த்துக் கொண்டு, அவர்களுக்கு பின்னால் திரையை அடைத்து, தொடர்ந்து இந்த இரவிலிருந்து உலகத்திற்கு மரித்து கிறிஸ்து இயேசுவுக்குள், என்றென்றைக்கும் அவர்கள் ஜீவிப்பார்களாக. நித்திய பிதாவே அவர்களுக்கு இதை அருளுவீராக. "என் நாமத்தினால் பிதாவினிடத்தில் எதை கேட்கிறீர்களா, அதை அவர் உங்களுக்கு அருளுவார்" என்று உரைத்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உத்தமமாக கேட்கிறேன். 96. தேவனே, எங்களுடைய ஜெபத்தில் நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும், உம்முடைய வாக்குத்தத்தத்தின் மேல் நம்பிக்கை வைத்து, அது எவ்வளவு சிறிதாக இருந்தாலும், அது என்னவாக இருந்தாலும், அது எவ்வளவு பலவீனமான எங்களுடைய ஜெபமாக இருந்தாலும் அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. நீர் அதை வாக்குத்தத்தம் பண்ணினீர் கிறிஸ்துவே. மேலும் இந்த ஜனங்களை உம்முடைய பிரசன்னத்திற்குள் இப்போது கொண்டு வருகிறேன். மற்றும் அவர்கள் இருதயத்தின் வாஞ்சையை சமர்ப்பிக்கிறேன். நான் இன்று இரவு பிரசங்கித்தது போல உம்மோடு நெருங்கி நடப்பதும், மற்றும் அந்த ஷெக்கேனா மகிமையின் வல்லமையின் கீழ் மறைவதும், உலகம் அவர்களுக்கு பூட்டப்பட்டதாயும் இருப்பது ஒரு தெய்வீக வாஞ்சையாயும், நீதியாயும் உள்ளது. மேலும் ஆண்டவரே, இப்போது நான் என்ன வேண்டுகிறேனோ அதை நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நம்புகிறேன். மேலும் நான் இயேசுவின் வார்த்தைகள் உண்மை என்பதை நம்புகிறேன். நான் எதையெல்லாம் கேட்கிறேனோ அதை எல்லாம் பெற்றுக் கொள்வேன். ஆகையால் பிதாவே அதற்காக இப்போது உமக்கு நன்றி சொல்கிறேன். மேலும் நான், திரும்பி சாத்தானாகிய பகைவனிடம் சொல்லுகிறதாவது, சாத்தானே, நாங்கள் தேவனுடைய பிரதிநிதிகளாக நின்றுக் கொண்டிருக்கையில், உன்னை தோற்றுவித்த தேவனுடைய குமாரனின் மரணத்தை பிரதிநிதிபடுத்தும் ஒரு இரத்தம் படிந்த சிலுவை எங்களுக்கு முன்னே சென்று கொண்டிருக்கிறது. மேலும் நீ ஒரு பொய்காரனே தவிர வேறு ஒன்றும் இல்லை. "நம்முடைய மீறுதல்களின் நிமித்தம் அவர் காயப்பட்டு, அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறோம்." மேலும் நீ ஜனங்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிற ஒரு ஏமாத்துக்காரன். ஆனால் உன்னுடைய ஏமாற்றுதல் இப்பொழுது கூப்பிடப்பட்டுள்ளது. நீ அதிக நாள் அதை உன்னிடம் தக்க வைத்துக் கொள்ள முடியாது. ஜீவிக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இன்றிரவு அவர்களை விட்டு அகன்று போகும் படியாகவும், அவர்களை இதற்கு மேல் உபத்திரவம் படுத்தாதபடி, உன்னை கடிந்துக் கொள்கிறேன். "என்னுடைய நாமத்தினாலே நீங்கள் பிசாசுகளை துரத்துவீர்கள்" என்று இயேசுகிறிஸ்து சொன்ன, இந்த வாக்குத்தத்தம் நமக்கு உண்டு என்பதை அறிந்து அதை விசுவாசிக்கிறோம். மேலும் நீ அவர்களை உபத்திரவப்படுத்திக் கொண்டு, பயமுறுத்தி கொண்டிருக்கிறாய். ஆனால் இதற்கு மேல், நீ அப்படி செய்ய முடியாது. அவர்கள் இந்த மணி நேரத்திலேயே விடுவிக்கப்பட்டு விட்டனர். மேலும் தேவனுடைய பிரசன்னத்தில், மரணம் வரும் வரைக்கும் அவர்கள் விடுதலை பெற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 97. சர்வ வல்லமை உள்ள தேவனே நீர் எங்களுக்கு செய்த எல்லா நன்மைகளுக்கும், இரக்கங்களுக்கும் உமக்கு நன்றி சொல்ல மீண்டும் உம்மிடம் திரும்புகிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம் ஆமென். அன்பான கிறிஸ்தவர்களே, இதுவே நாம் சந்திக்கும் கடைசி நேரமாக இருக்கலாம். எனக்கு ஒரு மோசமான வழி உண்டு. நான் படிப்பறிவு இல்லாதவன். ஆகையால் நான் என்ன செய்ய முயற்சிக்கிறேனோ... அதை ஒரு படிப்பறிவு இல்லாதவன் செய்வது போல செய்கிறேன். அதை ஒரு நேர்த்தியான விதத்தில் அளிக்க நான் விரும்புகிறேன். என்னால் முடியாது. நான் எதற்கும் முன்னமே தியானிப்பது கிடையாது. நான் என்ன சொல்ல வேண்டுமா அது அப்படியே வருகிறது. எனக்கு அவ்வளவு தான் செய்ய முடியும். ஆனால் கர்த்தர் எனக்கு எப்பொழுதுமே உதவி செய்வார். மேலும் நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை என் முழு உள்ளத்தோடு நேசிக்கிறேன். மற்றும், நீங்கள் எல்லாரும் இன்று இரவு இங்கே ஒரு நோக்கத்திற்காக இருக்கிறீர்கள் என்பதை அறிவேன். நீங்கள் இங்கே அதற்காக வந்திருப்பீர்கள் என்றால் எல்லாவற்றுக்கும் உங்களுக்கு ஒரு ஊற்று உண்டு. அது சரி தானே. 98. இங்கு சில நாட்களுக்கு முன்பாக, ஒரு சிறு கதையை படித்து மிகுந்த ஆச்சரியத்துக்கு உள்ளானேன். அதை படித்திருப்பீர்கள் என்று யூகிக்றேன். ஒலி நாடாக்களில் பதிவு செய்யும் என்னுடைய இரண்டு பையன்கள் ஜென், லியோ (Gene, Leo) மிச்சிகனை பரம்பரையாக கொண்டவர்கள். அதில் ஒருவன் கத்தோலிக்கத்திலிருந்து பிராட்டஸ்டன்டக்கு சற்று முன்பாக மாறியவன். ஆர்வத்தின் நிமித்தம் அவர்கள் ஹம்மொண்ட் (Hammond Indiana) இந்தியானாவிற்கு வந்தனர். அவர்கள் வந்து, தேவன் கிரியை செய்யும் காரியங்களை பார்த்து, இந்த கூட்டங்களை கவனிப்பத்தற்காக அவர்களுக்குள்ளே ஒரு இரகசிய அமைப்பை ஏற்படுத்தினர். நான் இருக்கும் அந்த நகரத்திற்கே ரகசியமாக துப்பறிய வந்து அது உண்மையா அல்லது பொய்யா என்று பார்ப்பதற்கு வந்தனர். இரண்டு பேரும் ஒரு வைராக்கியமான கிறிஸ்தவ விசுவாசிகள் ஆனார்கள். சென்ற வெயில் காலத்தில்.........ஒரு காலைப் பொழுதில் அந்த வெராண்டாவில் (porch) உட்கார்ந்து கொண்டிருக்கையில், அவர்களுக்கு போதித்துக் கொண்டிருந்தேன். 99. நான் பல வருடங்களாக வனவிலங்கு பாதுகாப்பு துறையில் விளையாட்டு பாதுகாவலராக வேலை பார்த்த போது, வன விலங்குகளை பற்றி அறிந்து கொண்டேன். நான் வன விலங்குகளை மிகவும் நேசிப்பவன். நான் நேசிக்கும் சில காரியங்கள் அதில் உண்டு. வன விலங்குகளில், தேவன் செய்யும் அநேக காரியங்களை பார்த்ததுண்டு. மிகவும் மோசமான காரியங்களை அவர் வன விலங்குகளின் மூலமாக ஜெயித்ததை பார்த்திருக்கிறேன். மேலும் நான்-நான் அனேக காரியங்களை பற்றி சொல்வேனானால் அது உங்களுடைய அபிப்பிராயத்தை மாற்றிவிடும்..........அவற்றினுள் இருக்கக்கூடிய ஒரு மறைந்த ஜீவன் ஒரு ரகசியமாக இருப்பதை நீங்கள் உலகத்துக்கு சொல்ல முடியாது. பாருங்கள்-? தேவன் இன்னும் அந்த-அந்த-அந்த வன விலங்குகளை ஜெயிக்க முடியும் என்பதை நீங்கள் நம்புவீர்களா-? அவர் விரும்பினால், தன்னை அவர் எந்த ஒரு காரியத்திற்கும் ஒப்புக்கொடுக்க முடியும்-? அவர் சர்வ வல்லமையுள்ள ஆண்டவர். உங்களுக்கு சொல்வேனானால், சில நேரங்களில் என்னுடைய வாழ்கையில், நான் மிகவும் இக்கட்டான நேரத்தில் நின்றுக் கொண்டிருக்கையில், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நான் சொல்கிறேன், என்று சொன்னால் உடனடியாக அழிந்து போவதையும் பார்க்க முடியும். பிசாசுகள், வெறி பிடித்தவர்கள், நின்று கொண்டு என்னை கொல்வதற்கு தயாராகும் போது ஒரே நிமிடத்தில் கீழே விழுவதை நான் பார்த்து, கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று சொல்லி இருக்கிறேன். அது சரி தானே. 100. ஒரு முறை என் முற்றத்தில் உள்ள புல்லை வெட்டியது எனக்கு நினைவிருக்கிறது, அங்கே... நான் பின்பக்கம் சென்றேன். ஜனங்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். என்னுடைய மைதானத்தை வெட்ட முடியவில்லை, மக்கள் வந்து செல்வதால், எனது முற்றத்தில் உள்ள புல்லை கூட வெட்ட முடியவில்லை. நான் பின்னால் இருந்தபோது, முன்புறத்தில் களைகள் வளர்ந்து கொண்டிருந்தன. மேலும் நான் என் சட்டையை கழற்றினேன்; அது கோடைக்காலம். நான் - நான் என் சட்டையை கழற்றினேன். மற்றும் நான் ஒரு பவர் அறுக்கும் இயந்திரம் மூலம் வெட்டிக் கொண்டிருந்தேன். அங்கு ஒரு பெரிய குழவி கூடு இருந்ததை மறந்து விட்டேன். அவைகள் என்ன செய்யும் என்பதை உங்களுக்கு தெரியுமா என்பது எனக்கு தெரியாது. நான் மேல் சட்டை இல்லாமல் அதன் மீது அடித்து விட்டேன், ஒரு நொடிக்குள் அந்த குழவிகள் என்னை சுற்றி சூழ்ந்து விட்டன. அவைகளை வெறுக்கவே கூடாது. அன்பு அன்பு ஒன்றே அவைகளை ஜெயிக்க முடியும். இரண்டு குழவிகளே போதும் உங்களை கொன்று விடுவதற்கு. அவைகள் என்னை சூழ்ந்து ஓசை எழுப்பிக் கொண்டு இருக்கையில் அவைகளை வெறுக்கவே இல்லை. அவைகளில் ஒன்று போதும் சரியாக உங்களை கீழே தள்ளுவதற்கு. மூன்று அல்லது நான்கு உங்களை கொன்றே விடும். மேலும் நான் அங்கே ஒரு மேல் சட்டை கூட இல்லாமல் அவைகளால் முழுவதும் சுற்றி மூடப்பட்டு இருந்தேன். அவைகளை வெறுக்காமல் அவைகளை நேசித்தேன். அதை கேட்பதற்கு வினோதமாக இருக்கும். ஆனால் அது உண்மை. நான் சொன்னேன், "கடவுளின் சிறிய உயிரினங்கள், நான் உங்களை தொந்தரவு செய்ததற்கு மன்னிக்கவும், இது உங்கள் வீடு. ஆனால் நான் தேவனுடைய வேலைக்காரன், அவருடைய நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்காக நான் ஜெபிக்கிறேன், பலர் காத்து இருக்கிறார்கள். உன்னுடன் விளையாட எனக்கு நேரமில்லை, இயேசுவின் நாமத்தில் விரைவாக உன் கூட்டில் ஓடி, என்னை விட்டுவிடு. இனி நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்." தேவனே, என் நித்திய நீதிபதி அவர்கள் ஒரு வட்டத்தை உருவாக்கி, நேராக மீண்டும் தங்கள் கூட்டிற்குச் சென்றார்கள் என்பதை அறிவார்: அன்பு. 101. எனக்கு ஆப்பிரிக்காவில் இது போல ஒன்று இருந்தது. அங்கே மந்திரவாதி மருத்துவர்கள் நின்று கொண்டு, என்னிடம் சவால் விட்டனர். நீங்கள் பேசுவது என்னவென்று தெரியாமல் இருக்கும் பட்சத்தில் ஒரு அறிக்கையும் விடாதீர்கள். மனித மண்டை ஓட்டிலிருந்து இரத்தத்தை குடித்து, தங்களை தாங்களே வெட்டிக் கொண்டு மேலும் அது போன்ற காரியங்களை செய்கின்றனர். நான் அங்கே நின்று கொண்டு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சவால் விட்டு அவரை அறிக்கை செய்யும் போது அவர்கள் சாஷ்டாங்கமாய் கீழே விழுந்ததை பார்த்தேன். அது சரியா. அவர்கள் உள்ளே நின்று கொண்டு, என்னையே வசியம் செய்ய முற்பட்டனர். மேலும் அங்கே என்னை ஒரு நாய் குறைப்பது போல, மேலும் அது போல காரியங்களை செய்ய முயற்சித்தனர். என் மேல் அபிஷேகம் இருக்கையில், அந்த விசித்திரமான ஆவியை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. நான் சுற்றிப் பார்த்து சொன்னேன் "பிசாசின் பிள்ளையே நீ ஏன் அப்படி செய்கிறாய்-?" நான் சொன்னேன் "நீ சபிக்கப்பட்டு இருப்பாய்; இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தேவனுக்கு மகிமை உண்டாக அவ்விடத்திலிருந்து நீ அசைய முடியாமல் இருப்பாய். மேலும் அவன் அப்படியே பக்கவாதம் வந்து அதே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தான், அவனை அப்படியே தூக்கி சென்றனர். பாருங்கள்-? நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை கவனிக்க வேண்டும். தேவனுடைய சபையோடு ஒரு போதும் விளையாட கூடாது. அது சரியா-? 102. ஒரு தாழ்வாரத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த நான், பகல் பத்து மணியளவில் ஒரு பழைய ஓபஸ்ஸம் சாலையில் வருவதைக் கவனித்தேன்.. நீங்கள் அதைப்பற்றி என்ன... இங்கே அவைகள் இருக்கும் என்பதை யூகிக்கிரேன். இந்த மாகானத்தில் அவைகள் இருக்கின்றன. யாருக்காவது வன விலங்கு பாதுகாப்பு பற்றி தெரிந்திருந்தால், ஒரு ஓபஸ்ஸம், பகல் வேலையில் குருடாக இருக்கும். இரவில் அவைகள் சுற்றி திரியும். மேலும் இங்கே பத்து மணி இருக்கும். அவைகள் கால்களை இழுத்துக்கொண்டு வந்தது. மற்றும் நான் சொன்னேன் "அந்த ஓபஸ்ஸம்" நான்கு அல்லது ஐந்து வீடுகளை கடந்து காட்டிலிருந்து, அந்த வீதிகள் வழியாக மேலே எனது வலது பக்கமாக வந்துக் கொண்டிருந்தன. எனக்கு மட்டும் ஒரு வேலி இருந்தது, ஆனால் அவன் என் வாயிலுக்கு வந்து, உள்ளே திரும்பி, மேலே நடக்க ஆரம்பித்தன. நான் சொன்னேன், “அந்த ஓபஸ்ஸம் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. பார்க்கிறீர்களா-? அது... அது தான் விஷயம். அது பைத்தியமாகிவிட்டது. இப்போது, அங்கே பழைய முற்றத்தில் புல் வெட்டும் கருவி கிடக்கிறது, அங்கு மிஸ்டர் வுட் அங்கே இருந்தார், திருமதி வுட் அங்கே இருந்தார், பால் வியாபாரி என்னுடன் பேசிக் கொண்டிருந்தார், மிஸ்டர் கில்மோர் எனது நண்பர், இரண்டு பையன்கள், அவர்கள் அனைவரும் அங்கு அமர்ந்திருந்து பேசிக் கொண்டு இருந்தனர். மேலும் நான் அவர்களுக்கு கற்பித்துக் கொண்டிருந்தேன். ஒரு இளம் நிறப் பெண், முந்தைய நாள் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள், துணியால் சுற்றி அதை மூச்சி முட்ட கொன்று ஆற்றில் போட்டு விட்டதை பற்றி அந்த பெண்ணிடம் என்ன ஒரு இதயம் இருக்கிறது என்று நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். 103. மேலும் நான் அங்கே சென்று, அந்த புல் வெட்டும் கருவியை எடுத்து அதன் மீது வீசினேன். எப்போதுமே "விளையாடு ஓபஸ்ஸம்" என்று அவர்கள் செய்யும் போது, அது அப்படி படுத்து கொண்டு பற்களை இளித்துக் கொண்டிருக்கும். ஆனால் இதுவோ அப்படி செய்யாமல், அப்படியே சுற்றி சுற்றி ஒரே இடத்தில் அசைந்து கொண்டிருந்தது. நான் அதனை பார்த்தேன் மேலும் இது ஒரு... உங்களுடைய வயிற்றை கலக்கும்படி செய்யவில்லை, ஆனால் அதனுடைய உடம்பை சுற்றி ஈக்கள் முட்டை இட்டு, அதிலிருந்து புழுக்கள் வெளியே வந்து அதன் உடம்பை சுற்றி பரவி இருந்தது. அதனுடைய கால்கள் வெளியே இழுக்கப்பட்டு வீங்கி இருந்தது. ஒரு வண்டி அதன் மேல் ஏறி இருந்திருக்கும், அல்லது நாய்கள் அதனை சாடி கடித்து தொந்தரவு செய்திருக்கும். நான் சொன்னேன், ஓ, அது அடிபட்டுள்ளது. "மேலும் அது எழுந்திருக்க முயற்சி செய்து கொண்டிருந்ததை பார்த்தேன். அதற்கு 9 குழந்தைகள், குட்டி ஒப்போசங்கள் இருந்ததை பார்த்து, சொன்னேன்" அதற்கு பேச முடியாததாய் இருந்தாலும், அந்த இளம் பெண்ணுக்கு பதிலாக இது தான் ஒரு தாயாக காணப்படுகிறது. மேலும் நான் சொன்னேன், "ஒரு வேளை அதற்கு உயிர் வாழ ஒரு அரை மணி நேரம் கூட இல்லாமல் இருக்கலாம், ஆனால் அந்த அரை மணி நேரத்தைக் கூட தன்னுடைய குழந்தைகளை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறது. "நான் சொன்னேன் அந்த ஓபஸத்திற்கு அந்த பெண்ணை காட்டிலும் அதிக நல்லொழுக்கம் இருக்கிறது". அது சரி தானே. மேலும் நான் அந்த பையன்களுக்கு அதிலிருந்து போதித்துக் கொண்டிருந்தேன். மேலும், அது அப்படியே, நான் புல் வெட்டும் கருவியை மேலே தூக்கின பிறகு, அது நேரே எழுந்து தன்னால் இயன்ற மட்டும் ஓடி, மேலே செல்லும் என்னுடைய படிகட்டுக்கு வந்து, கீழே படுத்துக் கொண்டு.......... களைத்துப் போன நிலையில் காணப்பட்டது. 104. நான் எழுந்து அதனிடம் சென்று குத்தினேன். அது அசையாமல் இருந்தது. மற்றும் அதனால், அவள்... அந்த சிறு குட்டிகள் தங்கள் தாயிடம் இருந்து பால் குடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தன. அவர்கள் சொன்னார்கள் "ஏன், அதன் தாய் இறந்து விட்டதே". மேலும் நான் சொன்னேன், "எனக்கு தெரியாது. அது இறந்து விட்டது போல் தோன்றவில்லை." மீண்டும் அதனை குத்தினேன். அதன் உதடுகளை அசைந்து, பற்களை சிறிதளவு இளித்துக் கொண்டிருந்தது. மீண்டும் நான் அதை குத்தினேன். திருமதி வுட் அவர்கள் ஒரு கால் நடை மருத்துவரை போல அங்கே உட்கார்ந்து கொண்டு, சொன்னார்கள் "சகோதரன் பிரன்ஹாம் அவர்களே, மனிதாபிமான ஒரே ஒரு காரியம் மட்டும் தான் இப்போது செய்ய முடியும். "அந்த குட்டிகள் இறந்துவிடும்." "ஒரே ஒரு காரியம் மட்டும் தான் செய்ய முடியும், அந்த ஓபஸத்தை கொன்று விட்டு பிறகு அந்த குட்டிகளையும் கொன்று விடுங்கள் என்று சொன்னார்கள்". "ஏனென்றால் அவைகள் மிகவும் சிறிய குட்டிகள்... மிகவும் சிறியதாய் இருப்பதால் அவைகளால் அதிக நேரம் தாக்கு பிடிக்க முடியாது" அவர்கள் சொன்னார்கள் "நீங்கள்... அவைகள் அவைகள் இறந்து விடும் என்று சொன்னீர்கள்" மேலும் "அந்த சிறு குட்டிகள் பட்டினி கிடந்து தாங்களாகவே மடிந்து விடும் என்று சொன்னார்கள்". மேலும் நான் சொன்னேன், "திருமதி வுட் அவர்களே, சரி தான், ஆனால் என்னால் அந்த ஓபஸத்தை கொல்ல முடியாது." ஏன்-? அவர்கள் "நீங்கள் ஒரு வேட்டைக்காரன், உங்களுடைய துப்பாக்கிகளில் ஒன்றை எடுத்து, அவைகளை சுட்டு விடுங்கள் என்று சொன்னார்கள்". 105. மற்றும் நான் சொன்னேன் "நான் ஒரு வேட்டைக்காரன் தான், ஆனால் ஒரு கொலைகாரன் அல்ல". நான் "எனக்கு எனக்கு அந்த ஓபஸத்தின் குட்டிகளை கொல்ல முடியாது என்று. சொன்னேன்" இங்கே வந்து படுத்துக் கொள்ளும் வரைக்கும் அந்த ஏழை தாய் பட்ட துயரங்களை பார்த்து விட்டு, நான் "அந்த தாயையும் அதன் பிறகு அங்கே இருக்கும் அந்த குட்டிகளையும் கொல்ல என் இருதயம் ஒத்துக் கொள்ளவில்லை என்று சொன்னேன்". அவர்கள் சொன்னார்கள், அது சரி தான். "ஆனால் சொன்னார்கள்" சகோதரன் பிரன்ஹாமே, மனிதாபிமாக செய்யக்கூடிய காரியம் இது தான். அந்த குட்டிகளை சிந்தித்துப் பாருங்கள், அந்த மரித்து போன தாயிடம் இருந்து வரக்கூடிய அந்த பழைய பால், ஏன் அவைகள் அவைகள், எப்படி ஆயினும் அந்த குட்டிகளை கொன்று விடும். அவர்கள் சொன்னார்கள் "திரு வுட் அவர்கள் அவைகளை எடுத்துக் கொல்லட்டும்". நான், "சகோதரி வுட் அவர்களே, என்னால் அதை செய்யவே முடியாது, மேலும் மற்றவர்கள் அதை செய்யவும் விடமாட்டேன்" என்று சொன்னேன். 106. மதியம் முழுவதும் அந்த கொதிக்கிற வெயிலில் அது படுத்து கிடந்தது. அங்கு தான் படுத்து கிடந்தது. அன்றைய இரவு, நாங்கள் வெளியில் வண்டி ஒட்டிக் கொண்டு போகையில், திரு வுட் சொன்னார் "நல்லது, சகோதரன் பிரன்ஹாமே, இன்று நீங்கள் அதிகமாக ஊழியம் செய்து விட்டீர்கள். அது போதும். உங்கள் உள்ளத்திற்கு சற்று இளைப்பாறுதல் தேவை படுகிறது, ஆகையால் சென்று இளைப்பாறுங்கள்" என்றார். மேலும் நாங்கள் அந்த சாலையை சுற்றி வாகனத்தை ஓட்டிக் கொண்டு வந்தோம். மேலும் நான் அங்கே ஒரு சிறிய நாய் படுத்துக் கொண்டிருப்பதை பார்த்தேன், என்னுடைய மனைவி தான் அதை முதலாவதாக பார்த்தாள். (ஒலி நாடாவில் காலி இடம்-ஆசி) தரையில் பனி இருந்தது, அங்கே தான் அந்த நாய் படுத்துக் கொண்டிருந்தது. நான் சொன்னேன் "நல்லது, நான் அது போய் விட்டது என்று நினைத்தேன். "சில முறை அதை குத்தி பார்த்தேன், மற்றும் அதனுடைய காலை இப்படி ஆட்டி பார்த்தேன். அதனுடைய அந்த பழைய கால் அப்படியே அசைவற்று கிடந்தது. மேலும், அதன் மேல் பச்சை நிற ஈக்கள் அதை மொய்த்துக் கொண்டிருந்தது. மேலும் நான் சொன்னேன் "ஐயோ பாவம்". என்னுடைய சிறிய பெண், ரேபேக்கா இப்பொழுது தான் காட்சிகளை பார்ப்பதற்கு தொடங்கி உள்ளாள், இவ்வளவு உயரம் தான் இருப்பாள், அவள் வெளியே வந்து "அப்பா-! அந்த ஓபஸத்தை என்ன செய்யப் போகிறீர்கள்" என்று சொன்னாள். மேலும் நான் சொன்னேன், "தேனே, எனக்கு தெரியாது". மேலும், அவள் சொன்னாள், "ஓ, அந்த வயது சென்ற ஏழை தாய், அந்த குட்டிகளுக்காக வாழ முயற்சிக்கிறாளா, ஏன்-?................ நான் சொன்னேன், "ஆம் தேவனே அது பரிதாபத்துக்குரியது." அவள் சொன்னாள், "அவள் மரித்துபோய்விட்டாளா-?" மேலும் நான் சொன்னேன், "இல்லை, அவள் மரிக்கவில்லை, அவள் உயிருடன் தான் இருக்கிறாள் என்று நம்புகிறேன், காரணம் நீ கூர்ந்து கவனிப்பாயானால், அவள் மூச்சி எடுக்கும் போது அவளுடைய சரீர ஓரமாகப்பட்டது விட்டு விட்டு நடுங்கிக் கொண்டு, அது போல இருக்கும். சரீரத்தின் ஓரம் தவிர மற்ற பாகம் அசையாமல் இருக்கும். மற்றும் நான் சொன்னேன், "அவள் உயிருடன் தான் இருக்கிறாள் என்பதை நம்புகிறேன்". நான், "தேனே நீ படுக்கைக்கு செல்வது நல்லது, நீ எழும்புவதற்கு இது மிகவும் அதிகாலை நேரம் ஆக உள்ளது" என்று சொன்னேன். 107. மேலும் நான் உள்ளே சென்று என்னுடைய அறையில் உட்கார்ந்து கொண்டேன். மற்றும் நான் என் தலையை தேய்த்துக் கொண்டு இது போல உட்கார்ந்துக் கொண்டு இருந்தேன். மேலும் நான் சொன்னேன் "நல்லது, என்ன செய்வதென்றே எனக்கு ஒன்றும் தெரியவில்லை." மேலும் ஒரு சத்தம் என்னோடு கூட பேசியது. அதை நம்ப வேண்டும் என்றால் அது உங்களைப் பொருத்தது, எனக்கு தெரியாது. ஆனால் ஒரு சத்தம், நல்ல தெளிவான சத்தம் என்னுடன் "24 மணிநேரமாக உன்னுடைய வாசலில் ஒரு பெண் படுத்து கிடப்பதுபோல் அங்கே ஜெபிப்பதற் காக தன்னுடைய தருணம் வருவதற்காக அவள் காத்துக் கொண்டு கிடக்கிறாள்." என்று பேசி சொன்னது. நான் சொன்னேன், "எனக்கு அது தெரியாது." மேலும் அந்த சத்தம் சொன்னது "நல்லது, அவள் அங்கு வந்தாள், மேலும் அங்கு படுத்து கொண்டாள், மேலும் நீ அவளுக்காக இன்னும் ஜெபிக்கவில்லை. அவளோ காத்துக் கொண்டு, காத்துக் கொண்டு இருக்கிறாள்". நான் சொன்னேன் "நல்லது, எனக்கு தெரியாது நான் நினைத்தேன்" நான் எங்கு இருக்கிறேன்... நான் என்னிடமே பேசிக்கொண்டு இருக்கிறேனா-? "நான் நினைத்தேன், அந்த சத்தம் எங்கே-?" நான் அந்த ஓபஸம் இருக்கும் இடத்துக்கு சென்றேன். நான் சொன்னேன் "அன்புள்ள இயேசப்பா, உங்களுடைய சர்வ வல்லமையுடைய வல்லமையால், ஒரு சிட்டு குருவி தெருவில் உம்மை அறியாமல் கீழே விழுவதில்லை என்பதில் எத்தனை கரிசனை உமக்கு உண்டு என்பதை நான் அறிவேன். அப்படி இருக்க இந்த ஓபஸத்திற்கு ஒரு ஆத்துமா கூட இல்லை; வெறுமனமே ஒரு மிருகம் தான், ஆகையால் மற்றும் அந்த வயதான தாய் ஒப்போசத்தை இங்கே செல்லும்படி ஒரு வேளை நீர் அனுப்பினீர் என்றால்....... மேலும் அவர் அங்கேயும் அதே தான் சொன்னார், "நீ அவளை உன்னுடைய பிரசங்கத்துக்காக நேற்று உபயோகித்தாய், மேலும் அவள் ஒரு நிஜமான தாய் என்று சொன்னாய், மேலும் இங்கே அவள் தன்னுடைய குழந்தைகளுக்காக வாழ விரும்புகிறாள், ஆனால் நீயோ அவளுக்காக ஜெபிக்கவே இல்லையே. 108. மேலும் நான் சொன்னேன், "ஆண்டவரே, நீர் தான் அதை பேசினீர் என்றால், உம்முடைய ஊழியக்காரனின் அறியாமைக்கு மன்னிப்பு கேட்கிறேன். அதற்குத் தான் அந்த ஓபஸம் அங்கே கிடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. நான் சொன்னேன், கர்த்தாவே ஒரு வேளை அது... உமக்கு எனக்கு இதை செய்ய வேண்டும் என்றால், பின்பு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நான் ஜெபிக்கிறேன், பிதாவே, அந்த ஓபஸத்திற்கு திரும்பவும் அதன் உயிரை தாரும். நான் அதை சொன்ன மாத்திரத்தில், இதோ உண்மை இங்கிருக்கிறது. அந்த ஓபஸம் எழுந்து நின்று, என்னை உற்றுப் பார்த்தது, அதன் குழந்தைகளை தன்னுடைய சிறிய... சேர்த்துக் கொண்டது. விலங்கினத்திலே, ஓபஸத்திற்கும், கங்காருக்கும் மட்டும் தான் குழந்தைகளை வைக்க பை உள்ளது. அது தனது குட்டிகளை சேர்த்துக் கொண்டு, எந்த ஒரு எந்த ஒரு ஓபஸம் செய்வது போல வெளியே நடந்து சென்றது. என்னை பார்க்க அது திரும்பிய போது, எனக்கு "நன்றி ஐயா" என்று சொல்வது போல் இருந்தது. சரியாக கீழே அந்த சாலையில் தன்னுடைய குட்டிகளுடன் சந்தோஷமாய் வாழ்வதற்கு காட்டுக்குள் சென்றுவிட்டது. சர்வ வல்ல தேவனுக்கு... மேலும் அது தான் உண்மை, சாட்சி மேல் சாட்சிகள் பகர எனக்கு முன்பாக பரிசுத்த வேதாகமம் இருக்கிறது. அங்குள்ள செய்தித்தாள்கள் அதைப் பற்றி விமர்சித்து மேலும் எல்லாவற்றையும் செய்தனர். ஒரு அறிவு இல்லாத ஓபஸம் மேல் கரிசனை யோடு தேவன், இவ்வளவு பரிதவிப்பார் என்றால், தேவையில் இருக்கும் ஒரு மகனோ அல்லது மகளை பற்றி எவ்வளவு சிந்தனை உள்ளவராக இருப்பார். என்னுடைய சகோதர சகோதரிகளே உங்களால் அதை பார்க்க முடிகிறதா-? கர்த்தர் இன்றும் ஜீவித்து அரசாளுகிறார். நீங்கள் அதை நம்புகிறீர்களா-? இன்றிரவு அவர் உங்களுடையவராய் இல்லாமல் இருந்தால் அவரை ஏற்றுக் கொள்ளுங்கள். 109. இங்கு யாராவது சுகவீனராக இருந்து சுகம் பெற, பிராத்தனை செய்ய வேண்டும் என்று இருக்கிறீர்களா-? ஓ கரங்கள், ஆறு, எட்டு, ஆறு, எட்டு, வரை இருக்கின்றன. எல்லாம் சரி, இப்போது உங்களுடைய தலைகளை தாழ்த்தியவாறு இருக்கவும். ஜெபிக்க வேண்டும் என்று இருப்பவர்கள், உங்களுடைய கரங்களை உங்கள் பக்கத்தில் உள்ள யார் மேலாவது வையுங்கள். மேலும் கரங்களை அவர்கள் மீது வைத்தவாறு உங்கள் முழு மனதோடு விசுவாசியுங்கள். 110. நீங்கள் இதை செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள்... இப்போது இதை நீங்கள்... செய்ய வேண்டாம். நான் இப்போது ஜெபிக்க போகிறேன். நீங்கள் இதை வெறுமனே சொல்ல மாத்திரம் செய்ய வேண்டாம். நீங்கள் ஜெபிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மேலும் நீங்கள் அறிக்கையிட்டு, என்னை தொடர்ந்து, நான் சொல்வதையே சொல்லுங்கள். சர்வ வல்லமையுள்ள ஆண்டவரே, (சபையார் சகோதரன் பிரன்ஹாம் சொல்வதையே திருப்பி சொல்கின்றனர்) வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்தவரே, நித்திய ஜீவனை உடையவரே, நன்மையான ஈவுகளை அருளுபவரே, உம்முடைய உழியக்காரனாகிய நான், தேவைக்காக நிற்கிறேன். என்னுடைய பாவங்களிலிருந்து இரட்சிக்கபட உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மரித்தார் என்பதை விசுவாசிக்கிறேன். மேலும் என் இரட்சிப்பை ஏற்றுக் கொள்கிறேன். என்னுடைய மீறுதலின் நிமித்தம் அவர் காயப்பட்டு, அவருடைய தழும்புகளால் நான் குணமானேன் என்பதை நம்புகிறேன். மேலும் நான் அதை விசுவாசிக்கிறேன். மேலும் நான் அதை ஏற்றுக் கொள்கிறேன். மேலும் என் முழு மனதோடு அதை நம்புகிறேன். அவருடைய தழும்புகள் இப்போதே குணமாக்குகிறது. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். நான் அதற்கு சாட்சியாக இருப்பேன். தேவனை அதன் மூலமாக மகிமைப்படுத்துவேன். மேலும் இந்த இரவிலிருந்து அவர் தந்த சுகத்திற்காக அவரை துதிப்பேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் பிதாவே. 111. இப்போது, நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள். உங்கள் தலைகள் வணங்கியவாறு இருக்கட்டும். அது உங்களுடைய ஜெபம். நீங்கள் தேவனிடம் கேளுங்கள். "என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் எதையாகிலும் கேளுங்கள், அதை நான் செய்வேன்" என்று இயேசு சொன்னார். அவர் பொய் சொல்வாரோ-? அவர் ஆண்டவராக இருந்துக் கொண்டு அதை செய்ய முடியாது. அவர் பொய் சொன்னதில்லை. உங்கள் ஜெபத்தில் நம்பிக்கை வைக்க வேண்டாம் அவர் என்ன சொன்னாரோ அதன் மேல் நம்பிக்கை வையுங்கள். அவர் சொன்னார், ஒவ்வொரு சாத்தானும் நடுங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது கர்த்தருக்குள் உங்களை பூட்டிக் கொள்ளுங்கள். தலைகளை வணங்கியவாறு இருங்கள். அவருக்குள் உங்களை பூட்டிக்கொண்டு சொல்லுங்கள். அன்புள்ள ஆண்டவரே இந்த நேரமே உங்களை நான் நம்புகிறேன். "உங்களுடைய இருதயத்தில், சொல்லுங்கள்" உம்முடைய மகத்துவமான பரிசுத்த ஆவியானவர் இப்பொழுதே எனக்குள் வருவதை அறிகிறேன். என்னுடைய வியாதி என்னை விட்டு நீங்குவதை உணருகிறேன். கர்த்தாவே என்னுடைய விசுவாசத்தின் அறிக்கையின் மேல் நம்புகிறேன். மற்றும், தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய வலது பாரிசத்தில் பிரதான ஆசாரியனாக வீற்றிருந்து நாம் அறிக்கையிட்டதின் மேல் பரிந்து பேசுறவராக இருக்கிறார். இப்பொழுது அதை உங்கள் இருதயத்தில் நம்பி, இதை சொல்லுங்கள். ஆண்டவரே நான் அதை ஏற்றுக் கொண்டேன். அது என்னுடையது. அது எனக்குரியது. இப்போது நான் சுகமானேன். இனிமேல் எனக்கு அந்த வயிற்று பிரச்சனையும், பெண்களுக்குரிய பிரச்சனையும், என் மேல் இருந்த இந்த காரியம் இதற்கு மேல் எனக்கு வரவே வராது. நான் இப்போது நம்புகிறேன். நான் அதை ஏற்றுக் கொள்கிறேன். என் முழு இருதயத்தோடு அதை நம்புகிறேன். 112. மற்றும் நீங்கள் பூட்டப்பட்ட நிலையில் இருக்கும் போது, இப்பொழுது நான் உங்களுக்காக ஜெபிக்க போகிறேன். இப்பொழுது இது தான் எனது ஜெபம். அது உங்களுடையதாய் இருந்தது. நீங்கள் அதை ஏற்றுக் கொண்டீர்கள். இப்போது ஒரே ஒரு காரியம் மட்டும் உங்களை சுகமாக்குவதற்கு தடையாக இருக்கிறது, ஒரு சிறிய நிழல் உங்கள் மேல் தொங்கிக் கொண்டு இருக்கிறது, அதற்கு பெயர் அவநம்பிக்கை. பரலோகத்தில் இருக்கும் தேவன் தான் எனக்கு அந்த நிழலை உங்களை விட்டு நீங்கும்படி செய்ய முடியும். அப்படி ஒரு வேலை அது நீங்கும் என்றால் கக்கத்தண்டங்களோடு இருக்கும் நீங்கள், அதனை விட்டு நடக்க முடியும். வியாதியஸ்தராய் இருந்து, கரங்களை ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் உங்களுக்கு... வேதம் என்ன சொல்கிறது என்றால் "அவர்கள் கரங்களை அவர்கள் மீது வைப்பார்கள், விசுவாசம் உள்ளவனுக்கு இந்த அடையாளங்கள் பின் தொடரும். அவர்கள் கரங்களை அவர்கள் மீது வைப்பார்கள் அவர்கள் குணமடைவார்கள் பாருங்கள், சுகவீனமுள்ளவர்கள் மீது, அவர்கள் குணமடைவார்கள்" ஒருவர் மீது ஒருவர் வைக்கும் கரங்களானது, அது உங்களுடைய கரம். அவர் அதைப் பார்க்கிறார். உங்களுடைய அறிக்கையை அவர் கேட்கிறார். நீங்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது அவருக்கு தெரியும். அவர் உங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவர் அப்படித் தான் செய்ய வேண்டும். இயேசு கிறிஸ்துவுக்கு பொய் சொல்ல முடியாது. அவர் ஆண்டவர். பொய் சொல்வது அவரால் செய்ய முடியாத காரியமாய் இருக்கிறது. நீ இப்போது குணமாக்கப்பட்டிருக்கிறாய். இப்போது அந்த நிழல் ஒருவேளை உன்னை விட்டு செல்லுமானால்... இப்போது தேவனுடைய ஊழியக்காரனாக இருக்கும் பட்சத்தில், தேவன் இடத்தில் ஜெபித்து அந்த பயம் என்னும் பிசாசை வெளியேற்றும்படி தேவனிடத்தில் ஜெபிக்கிறேன். அந்த பயம் உன்னை அவரை அவருடைய வார்த்தையில் எடுக்காதபடிக்கு, அந்த பயம் உன்னை தொடர்ந்து "உன்னால் முடியாது" என்று பயமுறுத்துகிறது. அது உன்னால்... அது_ அது ஏதோவொன்று... நீ... நீ செய்ய முடியாது. மற்றும் நான் நம்புகிறேன், கர்த்தர் உங்கள் ஒவ்வொரு நபரையும் குணமாக்கி மேலும், நீங்கள் எல்லாரும் இன்றைய இரவு எழுந்து வெளியே சுகமாக நடந்து செல்வீர்கள். 113. இப்போது உங்கள் தலைகளை வணங்கியவாறு... எங்கள் பரலோகத்தின் பிதாவே, இந்த அரங்கில் கூடியிருக்கும் ஒரு கையளவு மக்கள், எங்களுக்கு விசுவாசமும் இல்லாமல் இருக்கிறோம். துவங்குவதற்கு, நாங்கள் தோல்வியாகவே உள்ளோம் என்பதை அறிந்து இருக்கிறோம். மற்றும் இந்த ஜனங்களுக்கு ஜெபிப்பதற்கு நான் அருகதை அற்றவன். சாத்தானுக்கு என்னைப் பற்றி கவலை இல்லை அவனுக்கு நன்றாக தெரியும். மற்றும், அவனுக்கு என் மேல் பயமே கிடையாது. இங்கு இருக்கும் ஒரு கிறிஸ்தவனை கண்டும் அவனுக்கு பயமே இல்லை. ஆனால் அவன் எதைக் கண்டு பயப்படுவான் என்றால், நமக்கு முன்னே சென்று கொண்டிருக்கும் இயேசுவின் இரத்தத்தை கண்டு. அது தான் அவனுக்கு தெரியும். அவனுக்கு அதை மீறி உள்ளே செல்ல முடியாது. அந்த இரத்தத்தின் மேல் அவனால் கடந்து செல்ல முடியாது. அவனுக்கு அதை செய்ய முடியாது. பிதாவே, அதை அவன் உணர்ந்து; தான் தோல்வி உற்றவன் என்பதை அறிந்திருக்கிறான். இயேசு கிறிஸ்து கல்வாரியில் அவனுடைய எல்லா அதிகாரத்தையும் உரிந்து போட்டார் என்பதை அவன் நன்கு அறிந்து இருக்கிறான். சட்டபூர்வமாக அவனுக்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது. சட்டப் பூர்வமாக அவனுக்கு ஒரு காரியமும் இல்லை. பாவத்திற்கும், சுகவீனத்திற்கும் கிடைக்க வேண்டிய தண்டனை முழுவதையும் கல்வாரியில் செலுத்தி விடபட்டுவிட்டது. மற்றும் நாங்கள் தான், எல்லாவற்றிற்கும் மரித்த இயேசு கிறிஸ்துவின் இயற்பண்புகளாய் இருக்கிறோம். மற்றும் அவனுக்கு நன்றாக தெரியும், அவன் தோற்கடிக்கப்பட்டவன் என்று. அவனுக்குத் தெரிந்த ஒரே ஒரு காரியம் என்னவென்றால் மக்களை பயமுறுத்தி வைக்க வேண்டும் என்று. அவர்களை அவன் உரிமையாக்க முடியாது. ஜீவன் இருக்கும் கலப்படமற்ற இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மேல் அறிக்கை செய்யும் மக்களை அவன் பயமுறுத்தி வைக்க தான் அவனால் முடியும். 114. இப்போது பிதாவே-! நான் உம்முடைய ஊழியக்காரனாக, உம்மையே நம்பி, வீட்டை விட்டு, எல்லாவற்றையும் விட்டு, உம்மையே சேவிக்கிற எனக்கு, நீர் உதவும்படியாக ஜெபிக்கிறேன். உம்மை நான் நேசிக்கிறேன். மேலும் நீர் நிஜமானவர், மற்றும் நீர் உம்மை நிஜமாகவே வைத்துக் கொண்டிருக்கிறீர். அப்பா, உம்மை நேசிக்கிறேன். உம்மை நேசிப்பதற்கு நான் அருகதை அற்றவன். ஆனால் அது என்னுடைய தகுதி அல்ல அது அவருடைய தகுதி, நீர் என்னை ஏற்றுக்கொள்வீர், மற்றும் நான் இந்த மக்களை நேசிக்கிறேன். மேலும் நான், அவர்கள் மேல் அந்த கருப்பு நிழல் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து, "நல்லது, எனக்கு அது கிடைக்காது" என்று அது சொல்வதை கேட்கிறேன். ஓ சாத்தானே, நீ தோல்வி அடைந்து விட்டாய். அவர்களை இதற்கு மேலும் பிடித்து வைக்க முடியாததால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இந்த ஜனங்களை விட்டு போகும்படியாக உனக்கு கட்டளையிடுகிறேன். இயேசு கிறிஸ்து அவர்களை விடுதலை ஆக்கி விட்டார். மற்றும் நீ தான் தோல்வி அடைந்து விட்டாய், மற்றும் அவர்கள் குணமடைவார்கள், காரணம் அவர்கள் தேவன் மேல் உள்ள விசுவாசத்தை அறிக்கை செய்திருக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவின் மீது உள்ள விசுவாசத்தை அறிக்கை செய்து விட்டார்கள். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள், என்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். மற்றும் நீ இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மேலே நடக்க முடியாததால், நீ தோல்வியடைந்து விட்டாய். மற்றும் ஜீவிக்கிற தேவக்குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் இந்த நிமிஷமே ஜனங்களை விட்டு வெளியே வந்து, மேலும் அவர்களை விட்டு வெளியே போகும்படி கட்டளை இடுகிறேன். 115. இப்பொழுது உங்கள் தலைகளை வணங்கியவாறு இருக்கையில், தேவனுடைய கலப்படமற்ற வார்த்தையின் மேல் விசுவாசிக்கிற, ஒவ்வொரு ஆணும் அல்லது ஒவ்வொரு பெண்ணும் துணிந்து அதனை எடுக்கவும், மற்றும் அவருடைய இரத்தம் படிந்த உடைகளில் இருந்து ரத்தமாகப்பட்டது. இப்பொழுதே பிதாவாகிய தேவன் முன் தொங்கிக் கொண்டு இருப்பதை விசுவாசித்து, இவருடைய தழும்புகளால் குணமாகிறோம் என்பதை அவருடைய வார்த்தையால் அவரை எடுக்கிறோம் என்பதை அறிந்திருக்கிற நீங்கள் எழுந்து நிற்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அங்கே தான் நீ. அங்கே தான் சாத்தான் தோற்கடிக்கப்படுகிறான். அதோ சாத்தான் தோற்கடிக்கப்படுகிறான். அவன் வெற்றியை இழந்து விட்டான். நீ குணமாக்கப்பட்டாய். கர்த்தர் உன்னை சுகமாக்கி விட்டார். நாம் கரங்களை உயர்த்துவோமாக. 116. பரலோகத்தின் பிதாவே உமக்கு நன்றி செலுத்துகிறோம் மற்றும் உமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமைக்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறோம். அவருடைய பரிசுத்த நாமத்தினாலே உமக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறோம். தேவக் குமாரனின் உயிர்த்தெழுந்த வல்லமைக்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறோம். தெய்வீக சுகமளிப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். அண்டையில் உள்ளவர்களை கவனியுங்கள் கர்த்தாவே. அவர்கள் எங்கு சென்றாலும் உமக்கு சாட்சியாக இருக்கட்டும். அவர்கள் உம்மை போற்றிக் கொண்டும் மகிமைப்படுத்திக் கொண்டும் இருக்கிறார்கள். ஓ ஆண்டவரே, நாளுக்கு நாள் அவர்களுடைய பலன் அவர்களுக்கு வரும். புது ஜீவன், புது நம்பிக்கை, புது சந்தோஷம், புது பலன் நாளுக்கு நாள் வரட்டும். மற்றும் நாங்கள் இயேசு கிறிஸ்துவின் மூலமாக உம்மை ஸ்தோத்தரிக்கிறோம். ஓ, அவருக்கு எப்படி நன்றி சொல்லுவோம், எப்படி ஸ்தோத்தரிப்போம். நான் அவரை துதிப்பேன், நான் அவரை துதிப்பேன், பாவிகளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியை ஸ்தோத்தரிப்பேன், எல்லா ஜனமும் அவருக்கு மகிமையை செலுத்துங்கள், ஏனென்றால் அவருடைய இரத்தம் ஒவ்வொரு கரையையும் நீக்கிவிடும். எல்லோரும் ஒன்றாய் இப்பொழுது நான் அவரை துதிப்பேன், நான் அவரை துதிப்பேன், பாவிகளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியை ஸ்தோத்தரிப்பேன், எல்லா ஜனமும் அவருக்கு மகிமையை செலுத்துங்கள், ஏனென்றால் அவருடைய இரத்தம் ஒவ்வொரு கரையையும் நீக்கிவிடும். எவ்வளவு பேர் அவரை நேசிக்கிறீர்கள்-? கரங்களைத் தூக்கிச் செல்லுங்கள், பாவிகளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியை ஸ்தோத்தரிப்பேன், எல்லா ஜனமும் அவருக்கு மகிமையை செலுத்துங்கள், ஏனென்றால் அவருடைய இரத்தம் ஒவ்வொரு கரையையும் நீக்கிவிடும். வியாதியோ அல்லது வேற எதுவானாலும் அது ஒரு காரியம் அல்ல. ஒரு ஜோடி சக்கர நாற்காலிகளை நான் பார்க்கிறேன். அதில் சில சிறுவன்கள் அந்த உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களால் செய்ய முடிந்தது. இங்கே, அவர்கள் சக்கர நாற்காலிகளில் இருந்து எழுந்து விட்டு, கர்த்தருக்கு ஸ்தோத்திரமும் மகிமையும் செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள். நிச்சயமாக, இயேசு கிறிஸ்து இங்கே இருக்கிறார். அவருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் செலுத்துங்கள். நம்முடைய தலைகளை வணங்கி இருப்போம், மற்றும் நம்முடைய கரங்களை மேலே உயர்த்தி அவருக்கு ஸ்தோத்திரங்களை ஏறெடுப்போம். போதகரே இங்கே ஜெபம் பண்ணுவதற்கு வாருங்கள் ...........-? *******